திரெளபதி ஜூரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!

பெண்களை கவர்ச்சி பொருளாக மட்டுமே காட்டி வந்த இன்றைய தமிழ் சினிமாவில், தற்போது பெண்கள்தான் நாட்டின், குடும்பத்தின் மானம், மரியாதை, கவுரவம் என அடையாளப்படுத்தி மிரட்ட வருகிறது திரௌபதி திரைப்படம்.

பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிச்சிருக்காய்ங்க.

இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் காண வரப் போகுது திரௌபதி.

இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சிறுமுதலீட்டு படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது இதுவே முதல் முறை.

இந்நிலையில், இந்த திரௌபதி திரைப்படத்திற்கு U\A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஆனாலும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சாதி மோதல்கள் ஏற்படும் என பல தரப்பினரும் இன்னிக்கும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இப்படி சலசலைப்பைக் கிளப்பினாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் திரௌபதி திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பல இடங்களில் திருமணம், காதணி போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் திரௌபதி படத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து சுவர் எழுத்து, பெயிண்டிங் போன்ற விளம்பரங்களையும் திரௌபதி படத்திற்காக செய்துள்ளனர்.

இப்போ வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகப் போறப் படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் & வி.சி. தலைவர் திருமா இருவரும் பார்க்க ஒப்புக் கொண்டதாகவும் ஒரு நியூஸ் வருது..

ஆக திரெளபதி ஜூரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு

அடிசினல் செய்தி

இந்நிலையில், திரைப்படம் வெளியாகும் தியேட்டர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். சேலம், ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ், ஆஸ்கஸ் மல்டிபிளக்ஸ், கே.சி.கவுரி, கே.எஸ்., சரஸ்வதி ஆகிய தியேட்டர்களில் படம் வெளியாகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாந்தி, ஆனந்த் ஆகிய தியேட்டர்களில் வெளியாகும். நாமக்கல், எல்.எம்.ஆர். மல்டிபிளக்ஸில் வெளியாகும்.

குமாரபாளையம், கான், ஊத்தங்கரை, கணேசா, எலம்பிள்ளை கந்தன், சங்ககிரி சரவணா, மாரண்டள்ளி பொன்முடி, அலகுசமுத்திரம் அம்மன், தம்மம்பட்டி கவுரி, ஆட்டையம்பட்டி விபிஎஸ், எறுமையாம்பட்டி ரோஜா, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி கஸ்தூரி, கம்பைநல்லூர் டிஎம்ஸ் ஆகிய தியேட்டர்களில் படம் வெளியாகும்.

திருச்சி மாவட்டம், எல்.ஏ.சினிமாஸ், சோனாமீனா காம்ப்லக்ஸ், ரம்பா, காவேரி, மங்களம் சினிமா ஆகிய தியேட்டர்களில் வெளியாகும்.

திருவரம்பூர் பிளக் சினிமா, தஞ்சாவூர் ராணி பாரடைஸ், கும்பகோணம் பரணிகா, பட்டுக்கோட்டை அன்னபூர்ணா, புதுக்கோட்டை சாந்தி, மாயவரம் விஜயா, கரூர் அஜந்தா, பொன் அமுதா, திருவாரூர் தைலம்மை, நாகப்பட்டினம் கணேஷ், காரைக்கால் முருகராம், மணப்பாறை இந்திரா, ஜெயகொண்டம் ஜனகர், அறந்தாங்கி சுபா, சீர்காழி பாலாஜி, மன்னார்குடி சாமி, திருத்துறைப்பூண்டி விஜிலா, அரியலூர் மகாசக்தி, பொன்னமராவதி அலங்கார், குளித்தலை சண்முகானந்தா, கீரமங்கலம் வி.ஆர்.கே., அரியமங்கலம் சரோஜா, வேதாரண்யம் பிரியா, விராலிமலை ஜோதி, செந்துறை ராமசாமி ஆகிய தியேட்டர்களில் படம் வெளியாகும். வேலூர் மாவட்டம், வீனஸ் ஏசி, கேலக்ஸ் ஏ.சி., திருவண்ணாமலை மாவட்டம், சக்தி சினிமாஸ், பாலசுப்பிரமணியர் காம்ப்ளக்ஸ், அருணாசலம் ஏ.சி. காம்ப்ளக்ஸ், அன்பு ஆகிய தியேட்டர்களில் வெளியாகும்.

குடியாத்தம் மகாலட்சுமி, ஆர்காடு லட்சுமி ஏ.சி.காம்ப்ளக்ஸ், ராணிப்பேட்டை ராஜேஸ்வரி, வாணியம்பாடி சிவாஜி ஏ.சி., ஆம்பூர் ராஜ்கமல், முருகன், திருப்பத்தூர் திருமகள் காம்ப்ளக்ஸ், ஆரணி எம்.சி., சோளிங்கர் சுமதி ஏ.சி.காம்ப்ளக்ஸ், செய்யாறு சுமதி, வெட்டவளம் வினோத், செங்கம் சங்கம், ஆலங்காயம் ஸ்ரீ பாலா, தாணிப்பாடி பாரத், ஜோலார்பேட்டை மஞ்சு, போளூர் அருண், பணப்பாக்கம் மயூரா, சேட்பட் ராஜன் ஆகிய தியேட்டர்களில் வெளியாகும். இன்னும் விடுப்பட்ட தியேட்டர் பட்டியல் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.