பிக்பாஸ் ஷிவானி யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா ?

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும்பம்பர்படத்தில் நடிகர் வெற்றிக்குஜோடியாக பிக்பாஸ் ஷிவானி  ஒப்பந்தமாகியுள்ளார்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்டபம்பர்என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்மற்றும்ஜீவிபுகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும்கொம்பன்முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்சிகள்தூத்துக்குடியில் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தின் கதாநாயகியாகபிக் பாஸ்புகழ் ஷிவானி நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், “கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகியதிரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்குமு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

‘8 தோட்டாக்கள்புகழ் வெற்றி நடிக்கும்பம்பர்திரைப்படத்தை சு. தியாகராஜா தயாரிக்க எம். செல்வக்குமார்இயக்குகிறார்.