எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்த ‘பத்து தல.’ படத்தில் கலையரசன்!

எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்த ‘பத்து தல.’ படத்தில் கலையரசன்!

எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘பத்து தல.’ தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜாவின் Studio Green நிறுவனம் இப் படத்தினை தயாரிக்கிறது. ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநரான இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் தொடர்ந்து இணைந்து வரும் நடிகர்களால் ரசிகர்களிடத்தில் இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர்,  டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசனும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா பேசும்போது, “இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் மிகவும் கனமான ‘அமீர்’ எனும் கதாப்பாத்திரத்தில் கலையரசன் நடிக்கவிருக்கிறார். இக்கதாப்பாத்திரம் படத்தில் சிறிதளவு நேரமே வந்தாலும் கதையில் நிறைய அழுத்தம் தரும் பாத்திரமாகும். பிரபல நடிகராகவும், பல திரைப்படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்த அனுபவம் கொண்டவராகவும் இருப்பதால் இவரை நடிக்க…
Read More
சிம்பு நடிச்ச ஈஸ்வரன் படம் ரெடி -அடுத்த படமான ‘மாநாடு’ ஷூட்டிங்கிற்கும் தயாராம்!

சிம்பு நடிச்ச ஈஸ்வரன் படம் ரெடி -அடுத்த படமான ‘மாநாடு’ ஷூட்டிங்கிற்கும் தயாராம்!

இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு. “ஏக் தம்மில் ஒரு படத்தை முடித்துவிடுவார்…” என்பார்கள் தமிழ்த் திரையுலகத்தினர். இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானபோதே.. சிம்புவை வைத்தா…? ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விடுவாரா..? படம் முடிஞ்சிருமா..? சிம்பு வந்திருவாரா..? என்றெல்லாம் கேலிகளும், கிண்டல்களும் கோடம்பாக்கத்தில் பறந்து வந்தன. ஆனால், இது பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் சிம்புவைத் திண்டுக்கல்லுக்குத் தூக்கிக் கொண்டு போன சுசீந்திரன் சொன்னது போலவே… எண்ணி முப்பதே நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்து விட்டு சென்னைக்கு வந்து விட்டார். வந்த கையோடு அடுத்த நாளே சிம்புவை டப்பிங்கும் பேச வைத்து விட்டாராம். இப்படி சிம்பு, சுசீந்திரனிடம் சமர்த்துப் பிள்ளையாக மாறியதன் மர்மம் என்ன என்பது தெரியாமல் முழிக்கிறார்கள் கோடம்பாக்கத்து கிசு கிசு மன்னர்கள். இதற்கிடையில் நாளை நவம்பர் 9-ம் தேதி துவங்குவதாக இருந்த…
Read More
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பட ஷூட்டிங் ஜரூர்!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பட ஷூட்டிங் ஜரூர்!

தமிழ்த் திரையுலகிற்கு நம்பிக்கையளிக்கும் வகையில் படங்களைத் தயாரித்து வருகிறது மாதவ் மீடியா நிறுவனம். 'ஜீரோ' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மணப்பெண்ணே' மற்றும் சசி - ஹரிஷ் கல்யாண் இணையும் படம் ஆகியவை ஆகும். தற்போது தங்களுடைய தயாரிப்பில் ஐந்தாவதாக உருவாகும் பிரம்மாண்ட தயாரிப்பை அறிவிக்கிறது. முன்னணி நடிகரான சிம்பு நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜன ரஞ்சகமான படமாக இது உருவாகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட சிம்பு, இந்தப் படத்துக்காக உடல் இழைத்து முழுமையாக தன்னை அர்ப்பணித்து தயாராகி யுள்ளார். அவருக்கு பொருந்தும் வகையில் இந்தக் கதையை செதுக்கியுள்ளார் சுசீந்திரன். இதில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.…
Read More
நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன்! – விஷால்

நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன்! – விஷால்

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்தி பேசும்போது, ‘இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நான் காலேஜ், பள்ளி விழாவிற்கு செல்கிறேன். அங்கு எல்லாம், சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது வசனம் பேசுவது என்று எல்லாரும் சினிமா நோக்கி போய் கொண்டு…
Read More
மணிரத்னம் படத்தில் சிம்பு & ஜோதிகா!

மணிரத்னம் படத்தில் சிம்பு & ஜோதிகா!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிம்பு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து மணிரத்னம், தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அதில் நடிக்க பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இறுதியாக ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருமே அடுத்த மணிரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்தார்கள். நடிகர்களாக நானி, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மணிரத்னம். இதில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், இப்படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜய்  சேதுபதி கவுரவ தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முன்னரே மன்மதன் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து சிம்பு நடித்திருந்தார். தற்போது மீண்டும் இவர்கள் ஒரே படத்தில் நடிக்கின்றனர். ஏஏஏ படத்திற்கு பிறகு சிம்பு…
Read More
ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவுக்கு குட் பை சொன்னார் சிம்பு!

ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவுக்கு குட் பை சொன்னார் சிம்பு!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. தனக்கே உரிய தனி ஸ்டைல் மூலமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் சிம்புவுக்கு ரசிகர்களிம் எக்கச்சக்கம். அதிலும் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே அதிகம் என்னும் அளவுக்கு தனத் திறமை கொண்டவர். எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்புகளை அவரது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்து வந்தார். அதேநேரத்தில் தனது பொது கருத்துக்களையும் பகிர்ந்து வந்தார். அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஓவியாவுக்கு ஆதரவாக சிம்பு கருத்து தெரிவித்து வந்தார். அவரது கருத்தினை சிலர் தவறாக பயன்படுத்தினர். தன்னைப் பற்றிய தவறான கருத்துக்கனை பகிர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அப்போதே சமூக வலைதளங்களில் எதிர்மறை எண்ணங்கள் உலாவுவதாக சிம்பு கூறியிருந்தார். இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் இருந்து தான்…
Read More
AAA படத்துக்கு A  சர்டிபிகேட்தான் கிடைக்கும் என்று நினைத்தால் U/A கிடைச்சுருக்கு!

AAA படத்துக்கு A சர்டிபிகேட்தான் கிடைக்கும் என்று நினைத்தால் U/A கிடைச்சுருக்கு!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படம் வருகிற ஜுன் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.தமன்னா, ஸ்ரேயா, சானாகான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மஹத், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார். இரண்டு பாகமாக இப்படம் வெளிவர விருக்கிறது. முதல் பாகத்தில் ‘மதுர மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ இரண்டு கெட்டப்புகளில் சிம்பு நடித்துள்ள காட்சிகள் மட்டுமே வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன் இயக்கிய ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்துக்குத் தணிக்கை துறையினர் A சான்றிதழ் அளித்தனர். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது பத்திரிகையாளர்கள் இதுபோன்ற படங்களை இயக்குவது ஏன் எனக்…
Read More
”அ. அ. அ. -படத்தில் ஐயாவுக்கு நாலு கேரக்டர்” – சிம்பு தகவல்

”அ. அ. அ. -படத்தில் ஐயாவுக்கு நாலு கேரக்டர்” – சிம்பு தகவல்

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார். இப்படம் குறித்து சிம்புவிடம் கேட்ட போது, “அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து இந்த கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தில் மூன்று மெயின் கதாபாத்திரங்கள் வருவதால் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வைத்தோம். இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை தாண்டி இன்னொரு கதாபாத்திரமும் இருக்கிறது. மொத்தமாக நான்கு கதாபாத்திரங் களில் நான் நடித்திருக்கிறேன். இதை நான் வெளியிட்டதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கோபித்து கொள்வார் என்று நினைக்கிறேன். இருந்தாலும்,…
Read More