AAA படத்துக்கு A சர்டிபிகேட்தான் கிடைக்கும் என்று நினைத்தால் U/A கிடைச்சுருக்கு!

0
226

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படம் வருகிற ஜுன் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.தமன்னா, ஸ்ரேயா, சானாகான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மஹத், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார். இரண்டு பாகமாக இப்படம் வெளிவர விருக்கிறது. முதல் பாகத்தில் ‘மதுர மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ இரண்டு கெட்டப்புகளில் சிம்பு நடித்துள்ள காட்சிகள் மட்டுமே வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன் இயக்கிய ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்துக்குத் தணிக்கை துறையினர் A சான்றிதழ் அளித்தனர். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது பத்திரிகையாளர்கள் இதுபோன்ற படங்களை இயக்குவது ஏன் எனக் கேட்டனர். அதற்கு அவர், “எல்லா இயக்குநர்களும் U சர்ட்டிஃபிகேட்டில் படம் எடுத்தால் மக்கள் சலிப்படைந்துவிடுவார்கள். அதனால்தான் நான் A சர்ட்டிஃபிகேட் படம் இயக்குகிறேன். எனவே, சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கும் A சான்றிதழ் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது” என்று கேஷூவலாக சொன்னார்.

இப்படத்தை குளோபல் இன்டோடெயிண்மெய்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பதும் தற்போது ஜூன் 23ஆம் வெளியாகிறது என்பதும்   குறிப்பிடத்தக்கது.