Latest Posts

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப் பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ்...

அன்பிற்கினியாள் பட பிரிமீயர் ஷோ அப்டேட் நியூஸ்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண் பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம்...

இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்!

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து...

டார்லிங் பிரபாஸ் – கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இணையும் ‘சலார்’….!

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம் மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது ‘யுவரத்னா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.

ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ‘டார்லிங்’ பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது.

தற்போது ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்து விட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் “ஆம்! அது உண்மைதான்!! ‘டார்லிங்’ பிரபாஸ் மற்றும் பிரஷான்த் நீல் இருவரையும் இந்த மிகப்பெரிய படத்தில் இணைப்பதில் மிகுந்து மகிழ்ச்சியடைகிறேன், ஹொம்பாளே பிலிம்ஸ் தங்கள் முதல் படத்தில் இருந்தே சினிமாத் துறையில் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கி வருகிறது. ”சலார்” படத்தை நாடு முழுவதும் உள்ள எங்கள் பார்வை யாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தயாரிப்பின் மூலம் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது ஹொம்பாளே பிலிம்ஸ். இதுவரை இந்தியத் திரையுலகில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும், 2 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட்டதில்லை. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் – பிரஷான்த் நீல் படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்திய அளவில் அடுத்ததொரு பிரம்மாண்ட படைப்பு ரசிகர்களின் விருந்துக்காகத் தயாராகவுள்ளது.

Latest Posts

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய படம் மட்டி!

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப் பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ்...

அன்பிற்கினியாள் பட பிரிமீயர் ஷோ அப்டேட் நியூஸ்!

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண் பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம்...

இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்!

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து...

Don't Miss

பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

இலங்கையில் பிறந்தவருக்கு இயக்குநர்கள் டேவிட் லீன், சத்யஜித்ரே ஆகியோர்தான் மானசீக குரு. இருந்தாலும் போட்டோகிராபியே முதல்காதல் என்பதால் பயணம் அப்படி துவங்கியது.. எழுபதுகளின் துவக்கத்தில் மலையாள படங்களை ஒளிப்பதிவு செய்தவருக்கு, மிகப்பெரிய அளவில்...

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்!

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகிய வற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத்...

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’?

டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் 'நீ சுடத்தான் வந்தியா?' .காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்...

காமத்தை மையமாக்கி உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் -“SSHHH”!

காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி திரைப் படமான “SSHHH” படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை...

Lyca வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” பட படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சிவாகர்த்திகேயன் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும் “டான்” படத்தின் படப்பிடிப்பு இன்று 2021 பிப்ரவரி 11 கோயம்புத்தூரில் துவங்கியது. படத்தின் அனைத்து நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இதில் பங்கு கொண்டனர்....

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.