லைகா புரொடக்ஷன் சினி ஃபீல்டை விட்டு விலகுதா? ஒரு ஸ்பெஷல்  ரிப்போர்ட்!

லைகா புரொடக்ஷன் சினி ஃபீல்டை விட்டு விலகுதா? ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

பின்னணி: லைகா யார், என்ன? லைகா புரொடக்ஷன்ஸ் - தமிழ் சினிமாவுல பெரிய பெயர். இலங்கையைச் சேர்ந்த தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜாவோட தலைமையில இந்த நிறுவனம் தமிழ் சினிமாவுல பெரிய பட்ஜெட் படங்களை தயாரிச்சு, பல ஹிட்ஸையும், சில ஃப்ளாப்ஸையும் கொடுத்திருக்கு. பொன்னியின் செல்வன், 2.0, இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சினு பெரிய ஸ்டார்களோட படங்களை எடுத்து, தமிழ் சினிமாவுல ஒரு முக்கிய பிளேயரா இருந்து வந்துச்சு. ஆனா, இப்போ "லைக்கா சினி துறைய விட்டு விலகுது"னு ஒரு பரபரப்பு சேதி சுத்துது. இதுக்கு பின்னால என்ன இருக்கு? கொஞ்சம் ஆழமா பார்ப்போம். சேதியோட ஆரம்பம் இந்த பேச்சு சமீப காலமா சமூக வலைதளங்கள்லயும், சினிமா வட்டாரங்கள்லயும் பரவ ஆரம்பிச்சது. குறிப்பா, விடாமுயற்சி (அஜித் நடிச்ச படம்), வேட்டையன் (ரஜினி படம்), இந்தியன் 2 (கமல் படம்)னு அடுத்தடுத்து லைக்காவோட படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால, நிறுவனம் நிதி நெருக்கடியில…
Read More
சோகமான பபூன் நிலைமையில் இருந்தேன் – வடிவேலு உருக்கம்

சோகமான பபூன் நிலைமையில் இருந்தேன் – வடிவேலு உருக்கம்

லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,” கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோக மயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்தது இல்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனை தொடங்க நினைத்தபோது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன் மூலம் சுபாஷ்கரனிடம் பேசினோம். அவர் வடிவேலுவின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறினார். இதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் வாக்குறுதி அளித்தபடி வடிவேலுவின்…
Read More
இம்சை அரசன் 24-ம் புலிகேசி – பூஜை போட்டாச்சு!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி – பூஜை போட்டாச்சு!

வடிவேலு கதாநாயகனாக நடித்து 2006 ஆண்டு வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. சிம்புதேவன் இயக்கிய அந்த படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்தார். வரலாற்று திரைப்படமான அதில் சமகால அரசியல், சமூக பிரச்சனைகளும் கிண்டலாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இத்தனிக்கும் மன்னர் காலத்து ஆட்சியை இந்த படத்தில் விமர்சிப்பதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டாலும் அது பெரும்பாலும் நிகழ்காலத்தின் சூழ்நிலைக்கும் பொருத்தமாக அமைந்தது.பிலாக் காமெடி என்ற முறையை கையாண்டு இந்த படத்தை இயக்குநர் சிம்புதேவன் உருவாக்கியிருந்தார். படம் முழுக்க காமெடி வசனங்கள் இடம்பெற்றாலும் , அதனுள் ஒரு ஆழமாக அரசியல் பார்வையும் விதைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் வடிவேலு கூறும் வசனங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. ’’எதிர் காலத்தில் வரும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவாப் போகிறது’, நீர் அடிக்கடி மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து விடுகிறீர்கள் ‘’ என்ற வசனங்கள் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டன. இப்படி ரசிகர்கள்…
Read More
லைகா புரொடக்‌ஷனின் ‘ கோ கோ’ என்ற படத்தில் நயன்தாரா!

லைகா புரொடக்‌ஷனின் ‘ கோ கோ’ என்ற படத்தில் நயன்தாரா!

கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பில் இறங்கிய லைகா நிறுவனம், தற்போது ஷங்கர் – ரஜினி கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறது. அத்துடன், ‘இப்படை வெல்லும்’, ‘கரு’, ‘சபாஷ் நாயுடு’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. அதே  சமயம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின்போது மத்திய - மாநில அரசுகளின் இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தினார்கள், திரைப்பட வர்த்தக சபையினர். இந்த திடீர் முடிவினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டதால், இனி சில காலங்களுக்குப் படங்களை கமிட் செய்ய மாட்டோம் என அறிவித்திருந்தது லைகா நிறுவனம். ஆனால், இப்போது அந்த முடிவிலிருந்து வெளியே வந்து நயன்தாராவுடன் ஒரு படத்தை ஓகே செய்திருக்கிறார்கள். ‘கோ கோ’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்க முடிவெடுத்திருப்பதாக லைகா…
Read More
எல்லா தியேட்டர்களையும் 3 டியா மாத்தணும் – லைகா அட்வைஸ்!

எல்லா தியேட்டர்களையும் 3 டியா மாத்தணும் – லைகா அட்வைஸ்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் ‘2.0’ ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அதாவது ரஜினியின் ‘2.0’ படத்தை 3டி-யில் ரிலீஸ் செய்தால் மட்டுமே தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு லாபம் கிடைக்கும். அதனால் அனைத்து திரையரங்கையும் 3டி-யில் மாற்றுவது குறித்துதான் இப்போதே பேசத்தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம். இந்நிகழ்வில் ராஜூ மகாலிங்கம் பேசியதாவது: "400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம், முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.“டால்ஃபி அட்மாஸ், க்யூப் எனப் பல டெக்னாலஜிகளை ரசிகர்களுக்காக அப்டேட் செய்தது போல, 3டியும் இனி திரையரங்கில்…
Read More