மண்வாசனை வெளியான நாளின்று!

மண்வாசனை வெளியான நாளின்று!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 1983-ம் ஆண்டு இதே செப் 15இல் வெளியானது ‘மண் வாசனை’.‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் டைரக்‌ஷனில் உருவான இந்தப் படத்தில்தான் நடிகை ரேவதியும், நடிகர் பாண்டியனும் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானாய்ங்க அதோடு இந்தப் படம்தான் பத்திரிகை தொடர்பாளர், , இயக்குநர், நடிகருமான சித்ரா லட்சுமணன் தயாரிச்ச முதல் படமாகும். பாரதிராஜாவின் படைப்புகளில் ‘கிராமத்துச் சாயல்’ இருந்ததைப் போலவே வணிக அம்சங்களைக் கொண்ட ‘சினிமா’வும் அதிகம் இருந்துச்சு. அசலான கிராமத்து மனிதர்கள் ஒருபுறம் நடமாடிக் கொண்டு இருப்பாய்ங்க என்றால் அதன் இன்னொரு பக்கம் மரத்தின் மறைவில் இருந்து ஒரு கண் மட்டும் தெரிய வெட்கப்பட்டு வானத்தை நோக்கி சிரிக்கும் ‘சினிமா ஹீரோயினும்’ இருந்தார். இப்படி யதார்த்தமும் ரொமாண்டிசஸம் ஆகிய இரு பண்புகளும் கலந்ததுதான் பாரதிராஜாவின் சினிமா.பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் கிராமத்துக் கலாசாரமும் பண்பாடும் நிலவெளியின் அழகியலும் மிக வலுவாக வெளிப்பட்ட படைப்புகளில் முக்கியமானது ‘மண் வாசனை’.தலைப்பிற்கு…
Read More
16 வயதினிலே ரிலீஸான நாளின்று!

16 வயதினிலே ரிலீஸான நாளின்று!

தமிழ் சினிமாவை மண் மணம் வீசும் கிராமத்து வாழ்வியலுக்கு எடுத்து சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் சகாப்தம் தொடங்கிய 16 வயதினிலே திரைப்படம் இன்றுடன் வெளியாகி 47 ஆண்டுகள் ஆகுது. கோலிவுட்டில் முதன் முதலில் என்ற வார்த்தையை பல்வேறு விஷயங்களில் செஞ்சு காட்டிய படம்தான் 16 வயதினிலே. அந்தக் காலத்துலே நம் தமிழ் சினிமாக்கள் அம்புட்டு, ஷூட்டிங்கும் அரங்குகளிலேயே எடுக்கப்பட்டு வந்துச்சு. அப்பாலே அந்த அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முறையாக முழுப்படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்றால், அது 16 வயதினிலேதான்.இது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரமிப்பா பேசப்பட்டுச்சு. ‘இதெப்படி இருக்கு?’ என்று காட்சிக்குக் காட்சி இவர் சொல்லும் வசனம்... பஞ்ச் வசனம்... ரஜினி பஞ்ச் வசனம் பேசிய வகையிலும் முதல்படம். ஸ்ரீதேவி அப்படியொரு அழகு தேவதையாக நாயகியானதும் இதுவே முதல் படம். எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகையாக இருந்தாலும் காந்திமதிக்கு அப்படியொரு நடிகையாகக் கிடைத்த…
Read More
”குரங்கு பொம்மை” ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்!

”குரங்கு பொம்மை” ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் “குரங்கு பொம்மை”. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கதாநாயகன் விதார்த், “இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு நிறைய காம்பினேஷன் காட்சிகள் இல்லை. ஆனால், அவரது காட்சிகள் படப்பிடிப்புக்கு நடக்கும்போது அருகில் இருந்து கவனிப்பேன். மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் நிச்சயமாக இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசியவிருது நிச்சயம் வாங்குவார், நமது இயக்குநர் இமயம் ”என்றார். மேலும் விதார்த் பேசுகையில், “இந்த படம் மிக சிறப்பான படம். நித்திலன் மிக திறமையான இயக்குநர். இந்த படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதோடு, நான் இப்போது இயக்குநர் இமயம்…
Read More
பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும்  “படைவீரன்”

பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் “படைவீரன்”

தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்...அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் "படைவீரன்".பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் "கல்லூரி" அகில்,  கலையரசன், இயக்குநர் மனோஜ் குமார், இயக்குநர் கவிதா பாரதி, இயக்குநர் விஜய்பாலாஜி,  நித்தீஷ், கன்யா பாரதி, நிஷா, சிந்து, "பிச்சைக்காரன்" சுரேஷ் ஏகா, திண்டுக்கல் அலேக்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடல், ஓ காதல் கண்மணி படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காஞ்சனா 2, நெடுஞ்சாலை படங்களியல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசைமைத்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் நெருங்கியுள்ள "படைவீரன்" படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் அர்விந்த்சாமி வெளியிட்டுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: தயாரிப்பு - மதிவாணன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தனா இசை…
Read More