விஜய்யிடம் தோற்ற ரஜினிகாந்த் !

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் வெகு மந்தமாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் 50 வருடங்களை கடந்து சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வருபவர் ரஜினிகாந்த், அவருடைய திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகள் கொண்டாட்டமாக இருக்கும், ஆனால் சமீப காலமாக அவரது நட்டத்திர அந்தஸ்து குறைந்து வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது ஆனால் அதைத்தொடர்ந்து வெளியான லால் சலாம், மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இப்படம் இது வரையிலும் ஓடிடி தளத்தில் கூட வரவில்லை, ரஜினியின் சினிமா வரலாற்றில் மிக மோசமான திரைப்படமாக இப்படம் அமைந்துவிட்டது.

தற்போது, மீண்டும் அமிதாப் பச்சன், பகத்பாசில், மஞ்சு வாரியர், ராணா என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியுள்ளது வேட்டையன். இப்படத்தின் டிரெய்லர் பரவலாக பாரட்டப்பட்ட நிலையில் படத்தின் புக்கிங் நேற்று முன் தினக் ஓபனானது. ஆனால் டிக்கெட் புக்கிங் வெகு மந்தமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் டிக்கெட் புக்கிங் ஓபனாகியவுடன் முதல் மூன்று நாட்கள் அனைத்து காட்சிகளும் புக்காகி சாதனை படைத்தது. ஆனால் வேட்டையன் படம் முதல் நாள் நகரத்திற்குள் இருக்கும் திரையரங்குகள் மட்டுமே முழுக்க நிரம்பியுள்ளது. அதிலும் சில காட்சிகள் டிக்கெட் இன்னும் விற்கவில்லை.


இரண்டாம் மூன்றாம் நாட்கள் வெகு காலியாகவே இருக்கின்றன. ஒரு ரஜினி படத்திற்கு வெகு மந்தமாக டிக்கெட் புக்கிங் நடப்பது இதுவே முதல் முறை. ரசிகர்கள் இந்த செய்தியை இணையத்தில் விஜய்யிடம் ரஜினி தோற்றதாக பரப்பி வருகிறார்கள். முந்தைய ரஜினி படங்கள் போல இல்லாமல் வேட்டையன் படம் வெளியான பின்னரே இப்படம் வெற்றிப்படமா இல்லையா என்பது தெரிய வரும்.