வா.. வேலைக்காரா பாடலில் என்ன  ஸ்பெஷல்?

வா.. வேலைக்காரா பாடலில் என்ன ஸ்பெஷல்?

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான படம் ‘வேலைக்காரன். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான ‘கருத்தவன்லாம் கலீஜா’ மற்றும் ‘இறைவா’ ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து ‘வா வேலைக்காரா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருந்தாலும் வெளிவந்துள்ள ‘வா வேலைக்காரா’ பாடலுக்கு இந்தப் படத்தின் இயக்குநர் மோகன் ராஜாதான் ஹீரோவாக இருக்கிறார். கருத்தவன்லாம் கலீஜா பாடல், உழைக்கும் வர்க்கத்தினரின் பெருமை பேசியது. அதேபோல் வா வேலைக்காரா பாடலிலும் உழைக்கும் வர்க்கத்தினரின் பெருமை பேசப்பட்டுள்ளது. கலை இயக்கம் என்பது பாடல் காட்சிகளுக்காக பிரமாண்ட கண்ணாடி அரங்குகள் அமைப்பதும், ரயில்களிலிருந்து சாலை வரை பெயின்ட் அடிப்பதும் மட்டுமே என்று நம்பப்பட்டு வந்ததை வேலைக்காரன் படக்குழு மாற்றியிருந்ததை அரங்கு ஸ்லம் செட் உருவாக்க வீடியோவில் பார்க்க முடிந்தது. அதேபோல் இந்தப் பாடலிலும் படத்தின்…
Read More
’பதுங்கி பாயணும் தல’ படத்தின்  நீ மாமனா மச்சானா  பாடலின் சிங்கிள் ட்ராக்!

’பதுங்கி பாயணும் தல’ படத்தின் நீ மாமனா மச்சானா பாடலின் சிங்கிள் ட்ராக்!

MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் "பதுங்கி பாயணும் தல ". மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி , சிங்கம்புலி , M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார் . இந்த பாடலின் SINGLE TRACK - ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது . இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார்.   Cast and Crew : Hero -Michael Heroin -Nainikaa Vela ramamoorthi Singampuli M. S baskar R.n.r.manokar Singapordhepan Ragul Thatha.. Technicians list : Cameraman K.a.rowin baskar- music…
Read More
அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!

அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இப்போதெல்லாம் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியை புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கு 55-வது படமான “அறம்” திரைப்படம் இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, ஈ. ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. ‘அறம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 1) மாலை வெளியாகியது.. சமூகப் பிரச்னைகளுள் ஒன்றான குடிநீர் பஞ்சத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இதில் மாவட்ட கலெக்டராக அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். “அஞ்சாறு மாசமா மழை இல்லாம இருந்தப்பகூட தண்ணீர் பஞ்சம் இல்ல… என்னிக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ அன்னிக்கே…
Read More
சக்க போடு போடு ராஜா – டிரைலர்!

சக்க போடு போடு ராஜா – டிரைலர்!

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் சனிக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ளனர்.இந்தப் படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் ஜி. எல். சேதுராமன் இயக்கியுள்ளார். படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா என்பவர் நடித்துள்ளார். முதல் முறையாக நகைச்சுவை நடிகர் விவேக், சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் விடிவி கணேஷ், சம்பத் ராஜ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.  படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளாரக அறிமுகமாகிறார். இதையடுத்து படத்தின் இசை வெளியீடும் வரும் நவம்பர் 14-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.இதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர். காமெடி நடிகராக கோலிவுட்டில் அறிமுகமான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.அந்த வகையில், 'சக்க போடு போடு ராஜா' டிரெய்லரில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.…
Read More