2018  பொங்கல் திருநாளன்று  ‘மன்னர் வகையறா’ ரிலீஸ்1

2018 பொங்கல் திருநாளன்று ‘மன்னர் வகையறா’ ரிலீஸ்1

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நல்ல விலை கொடுத்து சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரவிந்த்சாமி – த்ரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்த நிறுவனம் தான், தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். பி.ஜி.முத்தையா மற்றும் சூரஜ் நல்லுசாமி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஜாக்ஸ்…
Read More
தலைப்புக்கேற்ப ஆக்ஷன் படம் – ‘வீரத்தேவன்’

தலைப்புக்கேற்ப ஆக்ஷன் படம் – ‘வீரத்தேவன்’

“ வீரமற்ற விவேகம் கோழைத்தனம் , விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் “ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்தான் “ வீரத்தேவன் “ இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது. நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம்..அதற்கேற்ற தமிழ் பேசத் தெரிந்த நாயகி. அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை நாயகியாக அறிமுகப் படுத்தினோம் என்கிறார் இயக்குனர். மற்றும் கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - வீரன்செல்வராசு படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.. ”நாகரிகம் என்ற நச்சு இன்று நகரத்திலிருந்து நகர்ந்து கிராமப்புறங்களையும்…
Read More
அட்டகாசமாக வெளியான ‘வேலைக்காரன்’ மோஷன் போஸ்டர்!

அட்டகாசமாக வெளியான ‘வேலைக்காரன்’ மோஷன் போஸ்டர்!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இதில் நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, சதிஷ், சிநேகா, ரோபோ ஷங்கர், விஜய் வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது, பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக…
Read More
உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தை விஜய் டிவி வாங்கியது!

உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தை விஜய் டிவி வாங்கியது!

ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும்  'நிமிர்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது. சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் 'நிமிர்'. இப்படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். இது குறித்து விஜய் டிவியின் ' பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், '' குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான  படங்களை கண்டெடுத்து வாங்குவதில்…
Read More
தங்கர் பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள் இம்மாதம் வெளியாகிறது.!

தங்கர் பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள் இம்மாதம் வெளியாகிறது.!

கலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே அமைகிறது. அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. காதலின் வலியை அதன் அனுபவத்தை உணராத அதனை கடந்து செல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். காதலிக்கின்ற அனைவருக்கும் அது கை கூடுவதில்லை.அழகி திரைப்படம் காதலிக்காதவர்களைக்கூட கலங்க வைத்தது போலவே களவாடிய பொழுதுகள் படமும் அனைவரின் மனதையும் கலங்க வைக்கும் படைப்பாக உருவாகி இருக்கிறது. இக்கதையை படித்து முடித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து தன் வாழ்நாளில் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன் என பிரபுதேவா மெய் சிலிர்க்கிறார். அதேபோல் என்றும் மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று…
Read More
ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’

ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’

STUDIO GREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா  தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப் புதிய படத்துக்கு 'கஜினிகாந்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான 'பலே பலே மகாடிவோய்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது.இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி ,மற்றும்  இருட்டு  அறையில்  முரட்டு  குத்துபடங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017)  இனிதே  நடைபெற்றது.  இப்படத்தில்  ஆர்யாவுக்குஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.  மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லுஅவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலைஇயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.
Read More
மிஸ்டர் சந்திரமெளலி படப் பிடிப்பு ஆரம்பம்!

மிஸ்டர் சந்திரமெளலி படப் பிடிப்பு ஆரம்பம்!

வரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதை முறையாக இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ” ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’  ‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும்  இந்திரஜித்; ஆகிய  படத்தின் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் அவரது மகனான கவுதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ள ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை ‘நான் சிகப்பு மனிதன்’ புகழ் திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது என எங்களது தயாரிப்பு நிறுவனம் ‘ Creative Entertainers and Distributors’ சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் சினிமாவில், பல வருடங்களுக்கு பிறகு, ஒரு பிரபல ஹீரோவும் அவரது மகனும் இணைந்து நடிக்கும் படம் இது. கவுதமுடன் இணைந்து…
Read More
அஜித் – சிவா இணையும் புதியப் படத்தின் பெயர் ‘விசுவாசம்!

அஜித் – சிவா இணையும் புதியப் படத்தின் பெயர் ‘விசுவாசம்!

டிகர் அஜித், இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக இணையும் படத்தின் பெயர், அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்  அறிவித்துள்ளது. வீரம், வேதாளம், விவேகம் என அஜித், சிவா கூட்டணியில் ஹாட்ரிக் படங்கள் உருவானது. இந்நிலையில் 4வது முறையாகவும் இந்த கூட்டணி தொடர்கிறது. இந்த புதிய திரைப்படத்தின் பெயர் “விசுவாசம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2018 ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், 2018 தீபாவளியன்று வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது என சத்ய ஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி தீபாவளி 2018 ரிலீஸ் என்றும் பட நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டரில் கூறியுள்ளார். படத்தின் அறிவிப்பை வெளிட்ட பத்தே நிமிடங்களில் இந்திய அளவில் #Viswasam என்னும் ஹேஷ்டேகை ட்ரெண்டாகி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
Read More
நான் ஒரு வழக்கமான ஹீரோ கிடையாது!- ‘ரசூல் பூக்குட்டி

நான் ஒரு வழக்கமான ஹீரோ கிடையாது!- ‘ரசூல் பூக்குட்டி

தனது வாழ்நாள் கனவே  தொழிலாக அமைவது எல்லோர்க்கும்  நடக்காத ஒரு நிகழ்வு. ஆஸ்கார் விருது வென்று நமது தேசத்தையே பெருமை கொள்ள செய்த பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி , ‘ஒரு கதை சொல்லட்டுமா ‘ படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ளார். இப்படத்தை திரு. ராஜீவ் பனகல் அவர்களின் ‘பாம்ஸ்டோன் மல்டிமீடியா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது குறித்து ரசூல் பூக்குட்டி பேசுகையில், ” இப்படத்தில் நான் ஒரு வழக்கமான ஹீரோ கிடையாது. எனது நிஜ வாழ்வில்  பூரம் திருவிழாவின் ஒலிகளை லைவாக ரெகார்ட் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். இப்படத்திலும் இதே  வாழ் நாள் கனவுள்ள முதன்மை கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். பூரம் திருவிழாவின் பிரம்மாண்டத்தையும் மேஜிக்கையும் வார்த்தைகளால் சொல்லி விவரிப்பது கடினம். முன்னூறுக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பூரம் திருவிழாவில்  பங்கேற்பார்கள். இவை அனைத்தையும் நேரில் சென்று…
Read More
‘டிக்:டிக்:டிக்’ டிரைலர் –  நவம்பர் 24-ல் வெளியாகிறது!

‘டிக்:டிக்:டிக்’ டிரைலர் – நவம்பர் 24-ல் வெளியாகிறது!

ஜெயம் ரவி நடித்து வரும் 'டிக்:டிக்:டிக்' படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. ‘மிருதன்’ படத்துக்குப் பிறகு, சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம்தான் 'டிக்:டிக்:டிக்'. தமிழ் சினிமாவில் முதல் முறையாக விண்வெளியில் நடக்கும் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி பற்றி குறிப்பிட்ட இயக்குநர், "படத்தில் முக்கால்வாசி நேரம் ரவி உடையோடு ஒரு கம்பி மாட்டப்பட்டிருக்கும். இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, அந்த விசேஷ உடைகளை கழட்டி மாட்ட ஒரு மணி நேரம் ஆகும். கம்பி ஒன்று இணைக்கப்பட்டிருப்பதால், அவரால் உட்கார முடியாது. எப்போதும் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும். படப்பிடிப்பு மிகவும் கடினமான இருந்தது. சண்டைக் காட்சிகளை படம்பிடிக்க விசேஷ கருவிகளை இறக்குமதி செய்தோம். சண்டைக்காட்சிகளில் கயிறுகள் பயன்படுத்தும் போது, முன்னால், பின்னால், இடது, வலது என…
Read More