எஸ் 3 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ஜாம்பி’. கதாநாயகன், நாயகி என்றில்லாமல் இந்த படத்தில் கதைதான் நாயகனும்.. நாயகியும். வில்லனும். ஒரே இரவில் நடக்கும் ஹாரர் – காமெடியான இப்படத்தில் யோகி பாபு, ‘பிக்பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்த் இருவரும் பரபரப்பான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
யூ ட்யூப்(youtube) ‘பரிதாபங்கள்’ புகழ் கோபி சுதாகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஆஸ்கர் அவார்டு பெற்ற படமான ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் நடித்த T.M.கார்த்திக் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
மேலும் மனோபாலா, அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், ‘மியூசிக்கலி’ புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரேம்ஜி இப்படத்திற்கு இசை அமைக்கிறார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் கலை அமைக்க, தினேஷ் படத் தொகுப்பு செய்ய, ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சி அமைக்கிறார். இணை தயாரிப்பு – பாலா அன்பு.
இப்படத்தை இயக்குநர் ஆர்.புவன் நல்லான் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘மோ’ என்ற ஹாரர்-காமெடி படத்தை இயக்கியவர்.
சென்னை முதல் பாண்டிச்சேரிவரையுள்ள ஈசிஆர் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது. படத்தின் படப்பிடிப்பும் அன்றைக்கு நிறைவு பெறும்.
இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போலத்தான் படத்தில் அதிகமான காட்சிகள் இடம் பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வேகமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்கள் மற்றும் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், கார்த்திக், பிஜிலி ரமேஷ், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் ஒன்றாக பங்கேற்ற பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட்டது.
ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும்கூட. இதை இயக்குநர் புவன் நல்லான், ஹீலியம் விளக்கொளியில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.
வேகமாக உருவாகிவரும் இந்த ‘ஜாம்பி’ திரைப்படம் கோடைக் காலத்தில் வெளியாகவுள்ளது.