ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை!

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை!

சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே..தீங்கிரை. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரபரப்பாக மிகுந்த பொருட் செலவில் படமாக இருக்கிறது. பிரகாஷ் நிக்கி இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக என்.கே. ராகுல். மணிகுமரன் சங்கரா…
Read More
நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்!

நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்!

பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஆறு பாலா. தற்போது இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்‌ஷன் (Old patriotic production) தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆறு பாலா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடிக்கின்றார். உடன் மூணாறு ரமேஷ், ராம்ஸ், சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு - ரமேஷ் இசை - விக்ரம் வர்மா படத்தொகுப்பு - பிரபா கலை - மாய பாண்டி மற்ற நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். பூஜையுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
Read More
பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்டில் ரிலீஸாகப் போகும் ஹரி &அருண்விஜய் படம்!

பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்டில் ரிலீஸாகப் போகும் ஹரி &அருண்விஜய் படம்!

' த்ரிஷா இல்லன்னா நயன்தாரா', 'என் ஆளோட செருப்பக்காணோம்', 'இமைக்கா நொடிகள் ', 'இஃக்லூ’ படங்களைத் தொடர்ந்து - டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் இப்போது இயக்குநர் ஹரி அருண்விஜய் கூட்டணியில் ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறது. அதிரடி ஆக்ஷன் , குடும்பக் கதையுடன் தென் தமிழ்நாட்டுப் பின்புலம் என்கிற கலவை யில் ஹரி இயக்கியுள்ள அனைத்துப் படங்களும் பெரிய வெற்றி பெற்றவை .அவற்றில் நடித்த கதாநாயகனைப் பல படிகள் மேலே ஏற்றி வைத்தவை. அப்படிப்பட்ட வணிக இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இப்புதிய படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திள்ளது. இதன் படப்பிடிப்பு 2021 பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்டில் படம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். சரியான திட்டமிடல் - முறையான முன் தயாரிப்போடு படப்பிடிப்புக்குச் செல்பவர் ஹரி. எனவே படத்தை விரைவாக முடித்து குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதிக்குள் வெளியிட வழிசெய்வார். இதன் படபிடிப்பு காரைக்குடி, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் பல பகுதிகளில் நடைபெறும்.…
Read More
சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் பட இயக்குநர் யார்? அந்த வாய்ப்பு கிடைத்தது எப்படி?

சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் பட இயக்குநர் யார்? அந்த வாய்ப்பு கிடைத்தது எப்படி?

கழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. "1 பந்து 4 ரன் 1 விக்கெட்" பட இயக்குனர் வீரா இந்த படத்தை இயக்குகிறார்.. இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குனர் வீரா. இதனால் அவரை கவுரவப் படுத்தும் விதமாக, நன்றிக்கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் சிங்காரவடிவேலன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.
Read More
‘தளபதி 65’ ; விஜயை இயக்கப் போவது நெல்சந் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

‘தளபதி 65’ ; விஜயை இயக்கப் போவது நெல்சந் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் தேதிகள் அளித்திருந்தார் விஜய். இதற்காக பல இயக்குநர் கள் தங்கள் கதைகளைக் கூறிவந்தார்கள். இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையில் நடிக்கச் சம்மதித்தார் விஜய். அதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இறுதியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருக தாஸ். இதனால், 'தளபதி 65' என்று அழைக்கப்பட்டு வரும் படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியில் நெல்சன் திலீப்குமார் கூறிய கதை, விஜய்க்கு மிகவும் பிடித்துவிடவே கூட்டணி உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விஜய் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தைத்…
Read More
உறியடி விஜயகுமார் ஹீரோவாகிறார்!

உறியடி விஜயகுமார் ஹீரோவாகிறார்!

இயக்குநர், நடிகர் விஜய்குமார் 'உறியடி' மற்றும் 'உறியடி 2' என இரண்டு துணிச்ச லான, அழுத்தமானப் படங்களை இயக்கி நடித்தவர். சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை 'உறியடி' 2 பாகங்களிலும் விஜய் குமாரின் உதவி இயக்குநராக இருந்த அபாஸ் இயக்குகிறார். ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸின் முதல் முழுநீள திரைப்படத் தயாரிப்பு இது. முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு செல்வதற்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
Read More
A 1 ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

A 1 ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பு தான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சந்தானம் - ஜான்சன் கூட்டணி. 'ஏ1' படத்தின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது சந்தானம் - ஜான்சன் கூட்டணி. வசூல் ரீதியாக அனைவரும் லாபம் ஈட்டிய இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தது. காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு 'பாரீஸ் ஜெயராஜ்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இணையத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு இணையவாசிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்தப் படத்தில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். 'ஏ1' படத்துக்குத் தன் பாடல்களால் மெருகூட்டிய சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக பிரகாஷ்…
Read More
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் புதுப் பட பூஜை!

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் புதுப் பட பூஜை!

" தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டது... கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமான முறையில் ஏராளமான நட்சத்திரங்களுடன் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது!.... மேலும் இப்படத்தினை தயாரிக்கும் PSS Production & I Creations தயாரிப்பாளர்களான திருமதி. Dr.பிரீத்தி ஷங்கர் மற்றும் உஷா அவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்...! ஒளிப்பதிவு - வினோத் ராஜா இசை - AJ அலிமிர்ஸாக் எடிட்டிங் - C.கணேஷ் குமார் ஸ்டண்ட் - கோட்டி கலை இயக்குனர் - விஜய் தென்னரசு Designs - Blesson P.R.O- சுரேஷ் சந்த்ரா இதை அடுத்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது...
Read More
கார்த்தி நடிக்கும் புதிய படம். பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்!

கார்த்தி நடிக்கும் புதிய படம். பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்!

கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர்,கார்த்தி. தற்போது இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் P.S. மித்ரனுடன் கார்த்தி இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் ‘புரொடக்‌ஷன் 4’ படைப்பாக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க, இன்று தீபாவளி நன்னாளில் பூஜையுடன் பாடல் பதிவு ஆரம்பமானது. ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் - ரூபன், கலை இயக்கம் - கதிர், நிர்வாக தயாரிப்பு- கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை-பிரசாத், PRO- ஜான்சன். பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்பட ரிலீஸ் டேட் இதோ!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்பட ரிலீஸ் டேட் இதோ!

நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது தெரிந்த விசயம்தான்..!  இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.. ஏற்கெனவே சூர்யா தயாரிப்பில் உருவான ‘பசங்க-2’ படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல் மட்டுமே செய்திருந்தார். ஆனால் இப்போது பாண்டிராஜின் இயக்கத்தில் நாயகனாகவே நடிக்கவிருக்கிறார். இது பாண்டிராஜ் இயக்கும் 10-வது திரைப்படமாகும். ஏற்கெனவே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். இதற்கெல்லாம் முன்னதாக, மின்னல் வேகத்தில் வரும் டிசம்பர் மாதம் தொடங்குகின்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதிக்குள் முடிந்து விடுமாம். 2021 தமிழ்ப் புத்தாண்டு அன்று இந்தப் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு…
Read More