கீர்த்தி சுரேஷு ஆரம்பித்த புதிய பிஸினஸ் !

கீர்த்தி சுரேஷு ஆரம்பித்த புதிய பிஸினஸ் !

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையான இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகையான இவர், தற்போது தமிழ், தெலுங்கில் என பலமொழிகளில் பிசியா நடிச்சு வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வரும் அவர், செல்வராகவனுடன் இணைந்து ‘சாணிக் காயிதம்’ படத்திலும், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள கீர்த்தி சுரேஷ், டொவினோ கதாநாயனாக நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார். இதற்கிடையே திரைப்பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனல் ஆரம்பித்து, தங்களது வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷும் புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், வீடியோ லிங்க் ஒன்றை இணைந்துள்ளார்.…
Read More
பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பிறந்த நாளின்று!

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பிறந்த நாளின்று!

பழக்கத்தினாலும்., மனதை விட்டு நீங்காத பல தமிழ் பாடல்கள் மூலமும் இன்றும் நம்மிடையே வாழும் கவிஞர் தம்பி நா. முத்துகுமார் பிறந்த தினம் இன்று (ஜூலை 12) இறந்துவிட்டவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா என்ற விவாதம் எப்போதும் நடைபெறுவதுண்டு. இதுகுறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியோர்கள் இறந்துவிட்ட பிறகு அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டையும் அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை அவர்களுடைய இன்றியமையாமையை அவர்கள் விட்டுச் சென்றதால் விளைந்த இழப்பை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்துவது தமிழ்ச் சமூகத்தின் மரபு.அப்படிப்பட்ட பெரியோர்களுக்கு இணையாக தமிழர்களால் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இயங்கும் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் நா.முத்துக்குமார். திரைப்படங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகையான பாடல்களையும் வெகு சிறப்பாக எழுதிவந்தார் முத்துக்குமார். நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும் காதல் பாடல்கள், புத்துணர்வூட்டும் நாயக அறிமுகப் பாடல்கள், ஆட்டம் போடவைக்கும் பாடல்கள், அதிநவீன நகர வாழ்க்கையைச்…
Read More
போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “!

போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “!

முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் " சல்பர் " யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் யாஷிகா அனந்த் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் விபின் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னையில் ஓர் காவல் நிலையத்தில் SI ஆக பணியாற்றுகிறார் நாயகி பாரதி. அங்கே எதிர்பாராத விதமாக ஏற்படும் சிக்கலால் பணியிடை மாற்றம் பெற நேரிடுகிறது. தான் மிகவும் நேசித்த crime department-ல் இருந்து காவல்துறைக்கட்டுபாட்டு அறைக்கு பணி மாற்றமாகிறார். தன் திறமைக்கு இங்கே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என அவள் நினைத்து சாதாரணமாக தன் வேலையை…
Read More
பாலிவுட் கேமராமேன் டைரக்‌ஷனில் உருவாகும் தமிழ் படம் ‘உன் பார்வையில்’!

பாலிவுட் கேமராமேன் டைரக்‌ஷனில் உருவாகும் தமிழ் படம் ‘உன் பார்வையில்’!

‘பிக்பாஸ்’ மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். ‘உன் பார்வையில்’ என்ற இப்படத்தை ‘Kaho na pyar hai’, ‘Pardes’, ‘Taal’ போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளரான கபிர் லால் இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப் படமாகும். இந்த ‘உன் பார்வையில்’ படத்தினை Lovely World Production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அஜய் சிங் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்காலாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள். படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது. இத்திரைப்படம் பற்றி நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பேசும்போது, “Kaho na pyar hai’, ‘Pardes’, ‘welcome…
Read More
சேரன் – கெளதம் கார்த்திக்  இணைந்து  நடிக்கும் புதிய படம்!

சேரன் – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்!

கடந்த ஆண்டில் வெளியான , யோகிபாபு எமதர்மனாக நடித்த தர்மபிரபு வெற்றிப் படத்தின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஒட்டு மொத்தமாக ஈர்த்த ஸ்ரீ வாரி பிலிம்ஸ் அடுத்ததாக முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள். குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் கெளதம் கார்த்திக்குடன் இயக்குனர் சேரன் இணைந்து நடிக்கிறார் . டாக்டர் ராஜசேகர் ஜீவிதாவின் இரண்டாவது மகள் ஷிவாத்மிக்கா அறிமுக கதாநாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள் . மற்றும் டேனியல் பாலாஜி , சரவணன் , கிழக்கு சீமையிலே விக்னேஷ் , சிங்கம் புலி , ஜோமல்லூரி , கவிஞர் சினேகன் , நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் , மௌனிகா, மைனா , பருத்திவீரன் சுஜாதா , ஜானகி , பிரியங்கா , நக்கலைட் தனம் என ஏராளமான நட்சத்திரங்களோடு ஒரு குடும்ப சித்திரமாக உருவாகுகிறது. இந்த…
Read More
பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக் சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார். இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குனர்கள்…
Read More
லைகா புரொடக்‌சன்ஸ் வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

லைகா புரொடக்‌சன்ஸ் வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

நடிகர் சிவர்கார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள உச்சகட்ட எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்தி கேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார். லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார். லைகா குழும தலைவர், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா  கூறியது... தமிழின் மிக முக்கிய நடிகர், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகனான, சிவகார்த்கிகேயனுடன் இணைந்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி. அவரது அடுத்த படங்கள் ( டாக்டர் & அயலான் ) 2021 வருடத்தின் ரசிகர்களின் எதிர்பாப்பில் முதன்மை இடத்தை…
Read More
ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

இன்று எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் 'கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் என்று கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தை 'அட்டு 'படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இயக்குகிறார். A.D.R புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கிறார். எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி எம்ஜிஆர் வாழ்ந்த இல்லம் இருக்கும் ராமாவரம் தோட்டத்திற்கு வருகைதந்த உலக நாயகன் கமல்ஹாசன், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்' கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார் .அதுமட்டுமல்ல இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டார். ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் இப்படத்தை உலகநாயகன் தொடங்கி வைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப் படுகிறது. இதற்கு ஒளிப்பதிவு - பாலாஜி,இசை - விக்ரம், ஸ்டண்ட் -ஸ்டன்னர் சாம்,…
Read More
எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்த ‘பத்து தல.’ படத்தில் கலையரசன்!

எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்த ‘பத்து தல.’ படத்தில் கலையரசன்!

எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘பத்து தல.’ தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜாவின் Studio Green நிறுவனம் இப் படத்தினை தயாரிக்கிறது. ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநரான இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் தொடர்ந்து இணைந்து வரும் நடிகர்களால் ரசிகர்களிடத்தில் இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர்,  டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசனும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா பேசும்போது, “இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் மிகவும் கனமான ‘அமீர்’ எனும் கதாப்பாத்திரத்தில் கலையரசன் நடிக்கவிருக்கிறார். இக்கதாப்பாத்திரம் படத்தில் சிறிதளவு நேரமே வந்தாலும் கதையில் நிறைய அழுத்தம் தரும் பாத்திரமாகும். பிரபல நடிகராகவும், பல திரைப்படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்த அனுபவம் கொண்டவராகவும் இருப்பதால் இவரை நடிக்க…
Read More
மூன்று மொழிகளில் தயாராகும் டிரைவர் ஜமுனா படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்!

மூன்று மொழிகளில் தயாராகும் டிரைவர் ஜமுனா படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்!

இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும் மிகப் பெரிய வெற்றி அடையும். தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடைய திரையுலக பயணத்தைத் தொடக்கம் முதல் பார்த்தவர்கள், அவருடைய வெற்றிக்குப் பின்னால் எப்படியொரு கடின உழைப்பு மறைந்துள்ளது என்பதை அறிவார்கள். இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளாகும். அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரசிகர்களும் பிறந்த நாளுக்கான பிரத்தியேக போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை அறிவித்துள்ளார்கள். 'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி மிகப்…
Read More