விஜய்க்காக நடிகர் சௌந்தரராஜா உருவாக்கும் ஆல்பம் பாடல்

விஜய்க்காக நடிகர் சௌந்தரராஜா உருவாக்கும் ஆல்பம் பாடல்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மரம் வளர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சௌந்தரராஜா இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதுதவிர நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியானது முதலே சௌந்தரராஜா அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த சௌந்தரராஜா, பிறகு கட்சியின் கொடி வெளியிட்டதும் அதனை மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பாக வழிபாடு நடத்தி இருந்தார். பின்னர் மாநாட்டுக்கு சைக்கிள் பேரணி ஆகியவற்றை முன்நின்று செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக 'தலைவன் நீயே, தொண்டன் நானே...' என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த…
Read More
சீயான் விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர்!!

சீயான் விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர்!!

சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பில், மனம் நெகிழ்ந்த சீயான் விக்ரம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம் கடந்த வாரம் வெளியான நிலையில், தமிழகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது. படத்தினைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினருடன் இணைந்து தமிழகமெங்கும் பல நகரங்களுக்குச் சென்று, ரசிகர்களைச் சந்தித்து…
Read More
பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ !!

பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ !!

நடிகர்கள் பஹத் பாசில் - வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் 'மாரீசன்' எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாரீசன்' எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை…
Read More
“சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !!

“சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !!

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில்.., நடிகர் கார்த்தி பேசியதாவது… சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிரெய்னிங் தந்து, உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது. அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான் என இந்தப்படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் அது எனக்கு மிகவும்…
Read More
ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

  கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் 'பிளாக்மெயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'கண்ணை நம்பாதே' போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறனுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்காக நடிகர்கள் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், முதல் பார்வைக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பிற்காக பத்திரிகை ஊடகங்கள் மற்றும் ரசிகர்ளுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மர்ம பின்னணியில் ஜி.வி. பிரகாஷ்குமார் இருக்கும்படியான முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படம் மே 2025 இல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக தேஜு…
Read More
நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி !

நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி !

நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆர் பி எம் - RPM 'படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர் பி எம் ' ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன்…
Read More
கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா !!

கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா !!

நடிகர் சிவகுமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் நூல் வெளியீடு தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர். முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். காற்றில் விதைத்த கருத்து நூலின் இரண்டாவது பதிப்பும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இந்த நூலை வெளியிட விஐடி…
Read More
“செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் !!

“செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் !!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசியதாவது... கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. செருப்புகள் ஜாக்கிரதை மிக வித்தியாசமான சீரிஸ், மத்த வெப் சீரிஸ் மாதிரி இல்லாமல் எழுதவே மிகவும் அதிக…
Read More
எல் 2 எம்புரான் எப்படி இருக்கு ?

எல் 2 எம்புரான் எப்படி இருக்கு ?

இயக்குனர் - பிரித்விராஜ் சுகுமாரன் நடிகர்கள் - மோகன்லால் , பிரித்விராஜ் , மஞ்சு வாரியர் , டோவினோ தாமஸ் , சுராஜ் இசை - தீபக் தேவ் தயாரிப்பு - ஆசீர்வாத் சினிமாஸ், கோகுலம் , லைகா பிக்சர்ஸ் நடிகராக இருந்து இயக்குநராகி லூசிஃபர் மூலம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பிரித்திவிராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த பாகமாக வந்துள்ள படம் தான் எம்புரான் மோகன் லாலை மையமாக வைத்து ஒரு பாகுபலி ல், கேஜிஎஃப் பாணி படத்தை தர முயன்றுள்ளார்கள். லூசிஃபர் படம் ஒரு ஆச்சரியம் கேரள அரசியலை மையமாக வைத்து அதில் அழகாக மோகன்லாலின் ஹீரோயிசத்தை நுழைத்து அசர வைத்த படம். இந்த முறை அதை உலக அளவில் சொல்ல முயற்சி செய்துள்ளார்கள். கேரளாவில் முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் நாயகன் , முதல்வரின் மற்றொறு மகனை புதிய முதல்வராக்கிவிட்டு…
Read More
வீர தீர சூரன் பாகம்-2 விக்ரமுக்கு கம்பேக்கா?

வீர தீர சூரன் பாகம்-2 விக்ரமுக்கு கம்பேக்கா?

இயக்குனர் - அருண் குமார் நடிகர்கள் - விக்ரம் , எஸ் ஜே சூர்யா, சுராஜ், துஷாரா இசை - ஜி வி பிரகாஷ் குமார் தயாரிப்பு - ரியா ஷிபு-  ஹெச் ஆர் பிக்சர்ஸ் தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கும் சீயான் விக்ரமுக்கு நிம்மதி தரும் வகையில், ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்தாக வந்துள்ளது வீர தீர சூரன். சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அருண் குமார் விக்ரமை இயக்குகிறார் என்றவுடனே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு விருந்து வைத்துள்ளது படக்குழு! வழக்கமாக முதல் பாகம் வெளியான பின்னரே இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால், வீர தீர சூரனை பொறுத்தவரை புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இதனாலேயே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை காரணமாக…
Read More