20
Apr
நாங்கள் திரைப்பட விமர்சனம் !! இயக்கம் - அவினாஷ் பிரகாஷ் இசை - வேத் சங்கர் தயாரிப்பாளர்- ஜுவிஎஸ் ராஜு அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கதில் புதுமுகங்கள் நடிப்பில் வந்துள்ள திரைப்படம் நாங்கள். பாலுமகேந்திரா, மகேந்திரன் வகையாறா படங்கள் என ஒரு ஜானர் உண்டு. வாழ்க்கையையும் மனிரகளையும் பற்றிப் பேசும் படங்கள் அந்த வகையறாவில் வந்துள்ள படம் தான் நாங்கள். மனைவியுடன் பிரிந்து வாழும் ஒருவன் தன் மூன்று மகன்களுடன் வாழ்கிறார். பணக்கார அப்பாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால், தங்களது சிறுவயது பருவத்தை தொலைத்துவிட்டு, வீட்டு பொறுப்புகளில் மூழ்கும் மூன்று சகோதரர்களும், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து, பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் எப்படி நகர்கிறது என்பதை, தந்தைக்கும் மகன்களுக்கும் உள்ள உறவுச்சிக்கலை பேசும் படம் தான் இது. அப்துல் ரஃபே, தந்தையாக நடித்திருக்கிறார் சிறுவர்களிடம் கண்டிப்பாக இருக்கிறார் ஆனால் அவரது…
