மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட, லைவ் ஆக்ஷன் அனிமேஷன் நகைச்சுவை படமான ‘பேடிங்டன் (2014)’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது. அதன் வெற்றியின் அடிப்படையில், ‘பேடிங்டன் 2 (2017)’ என இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டுள்ளது.
பேடிங்டன் வாழ்கை-ல லண்டன்-ல எப்படி அமையுது அப்படின்றத, இதுக்கு முன்னாடி வந்த பேடிங்டன் படத்துல பார்த்துருப்போம். இந்த படத்துல பேடிங்டன் தான் வேர தேடி அடையுறத, கதையா அமைச்சுருக்காங்க..
லண்டன்-ல பிரவுன் குடும்பத்துல ஒருத்தனா பேடிங்கன் மாறினாலும், அவனோட கரடி இனத்துல அவனுக்கு இருந்த ஒரே உறவு அவன காப்பாத்துன அவன் ஆண்டி தான். அந்த ஆண்டி காணாம போறாங்க.. அவங்கள தேடி பேடிங்டன் போறான்.
காணம போன ஆண்டி எல் டொராடோ அப்படின்ற புதையல தேடி போறாங்க அப்படின்றத தெரிஞ்சுகிட்ட பேடிங்கன், தன் குடும்பத்தோட அந்த புதையல் இருக்க இடத்தை தேடி போறான். புதையல் அப்படின்றப்போ, அதை அடைய ஆசைப்படுற ஒரு கூட்டம் இருக்கும், அவங்களுக்கு ஒரு வரலாறு இருக்கும்., அது இதுலயும் இருக்கு..
ஒரு புதையல் வேட்டைக்கதையை பேட்டிங்டன் கதையோட இணைச்சு, கடைசில புதையல் எது அப்படின்னு சொல்றதுல கதை முடியுது.
பேட்டிங்டன் கதை எப்போதுமே குடும்பத்த பத்தின கதை, உறவுகளை பத்தின கதை. இந்த படமும் அதுல தான் அமைக்கப்பட்டு இருக்கு. ஆனா அதுல புதையல் வேட்டையும் இருக்கது கூடுதல் சிறப்பா இருக்கு..
ஒரு பீல் குட் படத்துக்கு தேவையான எல்லாம் இந்த படத்துல இருக்கு. வசனங்களை அமைச்ச விதத்துல இருந்து, கேரக்டர்-ட பர்மானஸ் வாங்குனதுல இருந்து, இந்த படம் எங்கேயும் ஓவராக போகல, பார்டர்க்கு கீழேயே நிக்குது. அது ஒரு நல்ல படம் பார்த்த பீல் கொடுக்குது. மனச லேசாக்கி சிரிக்க வைக்கிற, இப்போ தேவையான ஸ்லோ படம் தான் பேடிங்டன்
