நான் இயக்குனராகி விட்டேன் – மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன்

நான் இயக்குனராகி விட்டேன் – மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன்

  நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு என பலர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர். இயக்குனர், தயாரிப்பாளர் & நடிகர் ரவி மோகன் பேசும்போது, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி இந்த தருணத்தில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் இயக்குனர் ஆகி விட்டேன். நான் இயக்குனர் ஆகினால் யோகி…
Read More
ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி!

ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி!

  புகழ்பெற்ற லெஜெண்ட்ரி நடிகைகள் ரேகா, நந்திதா தாஸ், அர்ச்சனா போன்ற நடிகைகள் தங்கள் அழகு மற்றும் நடிப்பு திறனுக்காக பெயர் பெற்றவர்கள். பல தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்கள். அந்த வரிசையில் தற்போது பக்கத்து வீட்டுப் பெண் போலவும் அதே சமயம் நம் வீட்டில் ஒருவராகவும் இருக்கும் திறமை வாய்ந்த நடிகைகளை தங்கள் படத்தில் நடிக்க வைப்பதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் நடிகை சேஷ்விதா கனிமொழியும் ஒருவர். தமிழ் சினிமாவில் அழுத்தமான எண்ட்ரி கொடுத்திருக்கும் இவர் மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து ஹிட் படங்களில் சவாலான கதாபாத்திரங்கள் நடித்து இயக்குநர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருக்கிறார். நடிகைகளுக்கு நடிப்புத் துறையில் ஆரம்ப காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதை சேஷ்விதா மிகவும் தன்னம்பிக்கையுடன் கடந்து வந்திருக்கிறார். நடிகர் விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்திலும், நடிகர் விமலின் 'பரமசிவன் பாத்திமா' படத்திலும் இவரது கதாபாத்திரமும் அசத்தலான…
Read More
18 மைல்ஸ்’ மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நடிகை மிர்னா!

18 மைல்ஸ்’ மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நடிகை மிர்னா!

மனதின் தூய்மையான காதலை கருவாகக் கொண்டு உருவாகியுள்ளது ’18 மைல்ஸ்’. எல்லைகளையும் பல தடைகளையும் தாண்டி காலம் கடந்த உணர்வுகளோடு உருவாகியுள்ள இந்தக் கதையில் தூய்மையான காதலை உணரலாம். நடிகர்கள் அசோக் செல்வன் - மிர்னா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்'-ல் இருந்து சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸில் கடினமான தருணங்கள், அன்பு, கண்ணைக் கவரும் காட்சிகள் எனப் பலவற்றை பார்க்க முடிந்தது. இதனை சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்க சித்து குமார் இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியிருக்கிறார். ஒரு அகதிக்கும் கடலின் சட்டத்தை இயற்றுபவருக்கும் இடையிலான பிணைப்பு, தியாகம், அன்பு மற்றும் இன்னும் பேசப்படாத பல உணர்வுகளையும் ’18 மைல்ஸ்’ பேசுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தனது திறமையை நிரூபித்த நடிகை மிர்னா ’18 மைல்ஸ்’ கதையில் மேலும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அன்புக்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் மனதை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் மிர்னா. தனது…
Read More
நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி  எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு. மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க,…
Read More
திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட  “வீர வணக்கம்” பட டிரெய்லர் !!

திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட “வீர வணக்கம்” பட டிரெய்லர் !!

விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர் அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”. சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆளுமைகளைப் போற்றும், அவர்களின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகியுள்ள “வீர வணக்கம்” திரைப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்திருமாவளவன் அவர்கள், நேற்று வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்றைய தமிழகத்தின் ஒரு கிராமத்தில், வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு அழகான நட்பு, ஜாதிய மனோபாவத்தால் சிதைக்கப்படுகிறது. அதை தடுக்கும் ஒரு பெரிய மனிதரின் வழியே, தமிழகத்திலும், கேரளத்திலும்…
Read More
பிரபுதேவா, வடிவேலு இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று  நடைபெற்றது !!

பிரபுதேவா, வடிவேலு இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று நடைபெற்றது !!

KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,   நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு கூட்டணியாகும். இவர்கள் ஒன்றிணைந்தாலே திரையரங்கில் சிரிப்பு மழை பொழியும். வயிறு குலுங்க சிரிக்க வைத்து, ரசிகர்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்த, இந்தக் கூட்டணியுடன்,…
Read More
Cubes Entertainment   ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !!

Cubes Entertainment ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !!

“மார்கோ” எனும் ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது,  தனது Cubes Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக பிரம்மாண்டமான  அதிரடி ஆக்சன் படமான  “கட்டாளன்”  படத்தினை தயாரிக்கிறார்.  இப்படம் இன்று கொச்சியில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்ட பூஜையுடன், கோலாகலமாக துவங்கியது. இவ்விழாவின் முக்கிய சிறப்பாக, ‘பாகுபலி’ படத்தில் நடித்துப் புகழ்பெற்ற சிறக்கல் காளிதாசன் யானை கலந்து கொண்டது. அதோடு, ஆடம்பர கார்களும், மோட்டார் பைக்குகளும் விழாவுக்கு அழகை கூட்டின. மேலும், படத்தின் கதைக்களத்தை பிரதிபலிக்கும் விதமாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட அரங்கில், பூஜை கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த மாபெரும் விழாவில், படத்தின் முன்னணி நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்றனர். அந்தோணி வர்கீஸ், கபீர் துகான் சிங், ரஜிஷா விஜயன், ஹனான் ஷா, ஜகதீஷ், சித்திக், பார்த்த் திவாரி ஆகியோர் கலந்து…
Read More
அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது

அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது

ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் "ஹுக்கும்"(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது. பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியிலும் போக்குவரத்து மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு மிகச்சிறப்பாக கையாளப்பட்டது. ராக் ஸ்டார் அனிருத் மேடையை அதிர வைத்தார். ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் (drone) நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி,…
Read More
‘குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா!!

‘குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா!!

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், "ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை! அவருடன் இந்த படத்தில்…
Read More
JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது

JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது

  தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர் எஸ்.கே.ஜீவா கூறியதாவது, “கோடைக்கானலில் ஏற்பட்ட சவாலான காலநிலையையும் மீறி, திட்டத்திற்கு முன்னதாகவே முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இது எங்கள் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பாலும், தயாரிப்பு அணியின் தளராத ஒத்துழைப்பாலும் சாத்தியமாகியது. தயாரிப்பாளரும், கதாநாயகனுமான JSK சதீஷ்குமார் அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருந்தார், ஒரு காட்சியில் எந்தவித உதவியுமின்றி இயல்பாகக் கண்ணீர் விட்டபோது, அங்கே இருந்த முழுக் குழுவினரிடமிருந்தும் கைத்தட்டல்களைப் பெற்றார். இப்படியான தருணங்களே, திரைப்படக் கலையை உயர்த்தும் உண்மையான சான்றுகள். நடிகர், நடிகைகள் அனைவரின் பாராட்டத்தக்க நடிப்பிற்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் மேலும் அழகான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன்” என்றார். குற்றம் கடிதல்…
Read More