‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’  திரைப்படம், அக்டோபர் 17உலகம் முழுவதும் வெளியாகிறது!!*

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம், அக்டோபர் 17உலகம் முழுவதும் வெளியாகிறது!!*

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது.‌ பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK ( ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி') திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்…
Read More
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு !!

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு !!

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - வசிஷ்டா (Vassishta) - எம். எம். கீரவாணி (MM Keeravani)- யுவி கிரியேசன்ஸ் (UV Creations) - கூட்டணியில் உருவாகும் 'விஸ்வம்பரா ' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் 'விஸ்வம்பரா ' படத்தின் தயாரிப்பாளர்கள்- ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆச்சரியத்தை அளித்துள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கற்பனை கலந்த சமூக காட்சியின் ஒரு அற்புதமான விஷுவலாகும். இயக்குநர் வசிஷ்டா (Vassishta) இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி - பிரமோத் ( Pramod ) ஆகியோர் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார்கள். இந்த கிளிம்ப்ஸ் குறிப்பிடத்தக்க மற்றும் புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது. விஸ்வம்பராவின் உலகில் நடந்த கொந்தளிப்பான…
Read More
அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம்  பூஜையுடன் படப்பிடிப்பு  துவங்கியது !!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தின் 6 வது படைப்பாக இப்படம் உருவாகிறது. தமிழ் திரையுலகில் பல…
Read More
வெற்றிக்கு  நன்றி தெரிவித்த உதயாவின் ‘அக்யூஸ்ட்’ படக்குழு !!

வெற்றிக்கு நன்றி தெரிவித்த உதயாவின் ‘அக்யூஸ்ட்’ படக்குழு !!

  ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்' படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது அவர் தான்.…
Read More
ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !!

ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !!

  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான, நடிகர் சூரி நடித்த “மாமன்” திரைப்படம், வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும் மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது. பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில், இன்பா (சூரி), மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது. மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. “மாமன்” குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம்.…
Read More
“லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா” ஓணம் பண்டிகை அன்று திரைக்குவருகிறது!!

“லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா” ஓணம் பண்டிகை அன்று திரைக்குவருகிறது!!

துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு, லோகா – சேப்டர் 1 : சந்திரா திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தத்திரைப்படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் ( Dominic Arun) எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார்…
Read More
வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ராகா)

வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ராகா)

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும் அவரது மகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். 'தங்க மீன்கள்' படத்தில் நடித்து சிறு வயதிலேயே பாராட்டுகளை வென்ற சாதனாவின் தந்தையான வெங்கடேஷ் சங்கர், இசை மீது கொண்ட தீராக்காதலின் விளைவாக முற்றிலும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார். பாரம்பரிய இசையின் ராகங்களையும் அவை திரைப்பட பாடல்களில் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்பதையும் பாமர ரசிகர்களுக்கும் சுவாரசியம் குன்றாமல் விளக்கும் வகையில் துபாயில் RRR (ரீல் ரியல் ராகா) என்ற இசை நிகழ்ச்சியை நடத்திய வெங்கடேஷ் சங்கர், அதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறார். உலகெங்கிலும் உள்ள திறமைகளைக் கண்டறிந்து கொண்டாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் தளமான தி சென்டர்ஸ்டேஜுடன் இணைந்து இதை அவர் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்காக வெங்கடேஷ் சங்கர் உடன் இணைந்திருப்பது குறித்து சென்டர்ஸ்டேஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி…
Read More
*நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ பாடல் வெளியாகியுள்ளது!

*நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ பாடல் வெளியாகியுள்ளது!

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில் ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் சேர்த்து இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜானு சாந்தர். 'மரியான்' படத்தில் 'எங்க போன ராசா...' உள்ளிட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர் குட்டி ரேவதி உணர்வுப்பூர்வமான ஆழமான பாடல் வரிகளை இதில் கொடுத்துள்ளார். கூடுதல் பாடல் வரிகளை சிவம் மற்றும் தீபக் கார்த்திக் குமார் எழுதி, இந்தப் பாடலுக்கு மேலும் அழகூட்டியுள்ளனர். பிரதீப் குமார் மற்றும் என்கே பிரியங்காவின் உணர்ச்சிப்பூர்வமான குரல்கள் இந்தப் பாடலின் ஆன்மாவாக அமைந்துள்ளது. இவர்களின் மென்மையான குரலுக்கு துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் திரையில் ஜோடி சேர்ந்துள்ளனர். ரொமான்ஸ், பாஸ் கிதார், வயலின் என இந்தப் பாடலின் ரிதம் சரியான…
Read More
இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  !!

இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக்  தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா. சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை,  ஊடக நண்பர்களுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., இசையமைப்பாளர் அஜ்மல் பேசியதாவது… இந்தப்படத்தின் கதை சொன்ன போதே சவாலாக இருக்கும் என்று தோன்றியது. ஷூட் முடித்துத் தந்த போது,  எல்லோருடைய நடிப்பு, தொழில்நுட்ப குழுவின் உழைப்பைப் பார்த்த போது, அட்டகாசமாக இருந்தது. நாமும் நிறைய உழைக்க வேண்டும் என்று தோன்றியது. உயிரே பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல். உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி. நடன இயக்குநர், நடிகர் கல்யாண் மாஸ்டர்…
Read More

காந்தா” மூலம் தமிழில் அறிமுகமாகிறார் நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!

ஸ்பிரிட் மீடியா தயாரிக்கும் வரலாற்றுத் திரைப்படமான படமான “காந்தா” மூலம் தமிழில் பிரமாண்டமாக அறிமுகமாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ் !! இந்திய சினிமாவின் புதிய திறமைகளில் ஒருவராக வேகமாக வளர்ந்து வரும் பாக்யஸ்ரீ போர்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் பீரியாடிக் படமான “காந்தா” மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரகனி முதன்மை வேடங்களில் நடிக்க, விமர்சகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். 1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் நடைபெறும் “காந்தா” திரைப்படம், கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு அழுத்தமான கதையை சொல்லும் திரைப்படமாகும். பாக்யஸ்ரீ, அந்தக் காலத்தின் சீரிய நயத்தையும் மென்மையையும் வெளிப்படுத்தி, மனிதநேயத்தையும் காலத்தைக் கடக்கும் உணர்வுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். துல்கர் சல்மான், சமுத்திரகனி போன்ற…
Read More