04
Sep
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பிங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், ஆண்சி, சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப் படம் வலைத்தளங்களை வைத்து வித்தியாசமான கதை அம்சத்துடன் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இரவின் விழிகள் படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் படம் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் இசை மற்றும்…
