‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு !

‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு !

  பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. "சாந்தீ... பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?" எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின்னர் பலரது குரல்களோடு சம்பாதிப்பதற்கான பல்வேறு வழிகளை வெளிப்படுத்தி பணம் எப்படி வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சுவைபட எடுத்துரைக்கிறது. சீரியஸான விஷயங்களை கூட சிம்பிளாகவும்…
Read More
பிரபுதேவா – Sony LIV தமிழ் ஒரிஜினல் சேதுராஜன் IPS மூலம் புதிய பாதையில்!

பிரபுதேவா – Sony LIV தமிழ் ஒரிஜினல் சேதுராஜன் IPS மூலம் புதிய பாதையில்!

முதன்முறையாக, நடனம், நடிப்பு என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பிரபுதேவா, Sony LIV தமிழ் ஒரிஜினல் சேதுராஜன் IPS மூலம் OTT உலகில் அறிமுகமாகிறார். கிராமிய தமிழ்நாட்டின் அரசியல் சூழலை மையமாகக் கொண்ட இந்த crime thriller தொடரில், பிரபுதேவா தன் வழக்கமான கவர்ச்சியை விட்டு விலகி, பலத்த கம்பீரத்துடன், அரசியலுடன் பின்னிப்பிணைந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவலராக நடிக்கிறார். ஆற்றல், அடையாளம், நீதிக்கான போராட்டம் ஆகியவை மையமாகும். இந்தக் கதையில், பிரபுதேவாவின் நடிப்புப் பரிமாற்றம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். தனது கதாபாத்திரம் குறித்து பிரபுதேவா கூறியது: சேதுராஜன் IPS ஒரு காவலர் மட்டும் அல்ல, கடமை, அடையாளம், அரசியல் ஆகிய புயலில் சிக்கிக்கொள்ளும் மனிதர். இந்தக் கதாபாத்திரம் எனக்கு முந்தைய அனுபவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, மிகவும் சவாலாக இருந்தது. இந்தக் கதை இன்றைய காலகட்டத்திற்கு தேவையானது என நம்புகிறேன். வேரூன்றிய தைரியமான கதைகளை முன்வைக்கும் Sony LIV,…
Read More
சக்தி ஃபிலிம் பேக்டரியுடன் ‘காந்தி கண்ணாடி’ வெற்றிக்கொண்டாட்டம் !!

சக்தி ஃபிலிம் பேக்டரியுடன் ‘காந்தி கண்ணாடி’ வெற்றிக்கொண்டாட்டம் !!

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’. செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான இந்த படம், சுவாரஸ்யமான உள்ளடக்கம், இயல்பான நடிப்பு மற்றும் ஆழமான உணர்வுகளுக்காக பாராட்டுகளையும் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், படத்தின் விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் அவர்கள், தனது அலுவலகத்தில் ‘காந்தி கண்ணாடி’ படக்குழுவினரை அழைத்து சிறப்பு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தார். அந்நிகழ்வு, நன்றியும் மகிழ்ச்சியும் நிரம்பிய நினைவுகூரும் விழாவாக அமைந்தது. தயாரிப்பாளர் ஜெய் கிரண் கூறுகையில்: “காந்தி கண்ணாடி தயாரித்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இப்போது மக்களிடம் இருந்து இவ்வளவு அன்பும் பாராட்டும் கிடைப்பது, உண்மையான கதை எப்போதும் மனங்களைத் தொட்டே தீரும் என்பதை…
Read More
ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு;

ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு;

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”. அவர் படம் இயக்குவது குறித்து அவருடைய அண்ணன் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், அந்த விழாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கார்த்தி, நடிகர் டாக்டர் சிவராஜ் குமார், நடிகை ஜெனிலியா மற்றும் அனைத்து பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். யோகிபாபு பேசும்போது, கோமாளி படத்தில் பணியாற்றும்போது ரவி நான் படம் இயக்கினால் நீங்கள் தான் ஹீரோ என்று கூறினார். ஆறு…
Read More
வாயுபுத்ரா : இது ஒரு சினிமா மட்டுமல்ல, புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!!

வாயுபுத்ரா : இது ஒரு சினிமா மட்டுமல்ல, புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!!

நமது வரலாற்றிலும் இதிகாசங்களிலும் நிறைந்த வாயுபுத்ரா, காலத்தை மீறும் அபிநவ புராண வீரனின் காவியக் கதையைப் பேசுகிறது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத அந்த நிரந்தர போர்வீரனின் வரலாறு இப்போது திரைக்கு வருகிறது. அதோடு, மலைகளையே நகர்த்திய பக்தியின் கதையும், தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக அமைந்த ஹனுமான் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், தியாகமும் இந்த காவியத்தில் வெளிவரவுள்ளது. இயக்குநர் சந்து மொண்டேட்டி (Chandoo Mondeti) இயக்கத்தில், சூர்யதேவர நாக வம்சி (Suryadevara Naga Vamsi) மற்றும் சாய் சௌஜன்யா (Sai Soujanya) தயாரிப்பில் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் (Fortune Four Cinemas) சார்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த மாபெரும் படைப்பு, வரலாறும் பக்தியும் நவீன காட்சியமைப்பும் சங்கமிக்கும் அபூர்வமான அனுபவத்தை தரவுள்ளது. மாபெரும் 3D அனிமேஷன் சினிமா அனுபவமாக, வாயுபுத்ரா இந்து மதத்தின் நித்திய காவியமான ஹனுமான் கதையை, 2026 விஜயதசமி பண்டிகை வெளியீடாக, உலகம்…
Read More
*வித்தியாசமான  ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

*வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஹவுஸ் மேட்” தமிழ் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஹாரர், ஃபாண்டஸி மற்றும் காமெடி ஆகிய மூன்று ஜானர்களையும் கலந்த இந்தப் படம், இயக்குநராக T. ராஜா வேலின் அறிமுக படமாகும். S. விஜயபிரகாஷ் தயாரிப்பில், ல் SK Productions சார்பாக உருவாகியுள்ளது. தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்தூல் லீ மற்றும் மாஸ்டர் ஹெண்ட்ரிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேமம், நேரம் படங்களின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது கார்த்திக் (தர்ஷன்) – அனு (ஆர்ஷா சந்தினி பைஜு) என்ற புதிதாகத் திருமணமான தம்பதியினர் ஒரு புதிய அபார்ட்மெண்டுக்கு குடிபெயர்கிறார்கள். ஆனால் அங்கு நடக்கும்…
Read More
என்னா மாறி நடிகன்டா ? – ஆச்சரியப்படுத்திய  அர்ஜுன் தாஸ் !!

என்னா மாறி நடிகன்டா ? – ஆச்சரியப்படுத்திய அர்ஜுன் தாஸ் !!

  ஒரு ஆள் சினிமாவில் தலை காட்டும் முன்னரே தன் குரலால் மூலை முடுக்கெல்லாம் அறிமுகாமானதென்றால் அது அர்ஜூன் தாஸ் தான். கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் வில்லன் குரலில் மிரட்டி டிரெய்லரிலேயே அதகளப்படுதியவர், இப்போது பாம் படத்தில் வில்லனிலிருந்து ஒரு அற்புதமான நடிகனாக அசத்திள்ளார். கைதி படம் மூலம் மிரட்டலான வில்லனாக தமிழகமெங்கும் புகழ்பெற்ற அர்ஜூன் தாஸுக்கு தனி ரசிகர்பட்டாளமே உண்டு. அதிலும் அவரது பேஸ் வாய்ஸுக்கு பெண்கள் மத்தியில் தனி கிரேஸ். அது தான் அவரை ஹீரோவாக்கியது. வில்லனாக அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களிலேயே ஹீரோவாக கலக்க ஆரம்பித்துவிட்டார். படத்திற்கு படம் ஆச்சரியம் தந்து வரும் அர்ஜுன் தாஸ் பாம் படத்தில் ஒரு நடிகராக அனைவரையும் அசரவைத்துவிட்டார். பேஸ் வாய்ஸ் மிரட்டல் தோற்றத்தை வைத்துக்கோண்டு, கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு அப்பாவி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். இதுவரையில் அவர் ஏற்ற கதாப்பாத்திரங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பாத்திரத்தில் படம்…
Read More
உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும்” – இயக்குநர் ரவீந்திர மாதவா!

உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும்” – இயக்குநர் ரவீந்திர மாதவா!

நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதை பார்க்கிறோம். இந்த வரிசையில் நடிகர் அதர்வாவின் 'தணல்' படமும் இணைய இருக்கிறது. அன்னை ஃபிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 12 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நடிகர் அதர்வா முரளியின் 'DNA' படத்திற்குப் பிறகு அவரது 'தணல்' படம் மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியிருப்பதாவது, "நிறைய ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக 'தணல்' இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது. வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு, பழிவாங்கும் கோபத்தில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வேதனையான கடந்த காலத்தைக் கொண்ட ஒரு போலீஸ்…
Read More
ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிய பூஜையுடன் படம் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுப்ரிதா நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகரும் நடிக்கிறார். படம் குறித்து இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் பகிர்ந்து கொண்டதாவது, "எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார்" என்றார். படத்தின் கதை குறித்து கேட்டபோது, "இன்றைய பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாக்குகிறோம். இசையும் விஷூவலும் அருமையாக இருக்கும். எளிமையான…
Read More
சிலம்பரசன் டி.ஆர்- வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த வீடியோ வெளியீடு!!

சிலம்பரசன் டி.ஆர்- வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த வீடியோ வெளியீடு!!

சிலம்பரசன் டி. ஆர். மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த கூட்டணி குறித்த புது அப்டேட்ஸ் விரைவில் வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த காணொலியில் STR ன் தோற்றம் அல்லது கதைக்கள விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும்.. ரசிகர்களிடையே உற்சாக அலையை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள தலைப்பு, வடிவமைப்பு மற்றும் எழுத்துரு ஆகியவை.. தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியாகி பாராட்டைப் பெற்ற கேங்ஸ்டர் படமான 'வடசென்னை '( 2018) படத்தின் பாணியுடன் வலுவாக ஒத்திருக்கிறது. இந்த ஒற்றுமை வரவிருக்கும் STR.ன் படம்.. வடசென்னையின் பிரபஞ்சத்துடன் இணைக்கப்படலாம் என்ற உடனடியான ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் புதிய படம் வடசென்னைக்கு இணையான காலவரிசையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இயக்குநர் வெற்றிமாறனும் உறுதிப்படுத்தியுள்ளார். 'தக்‌…
Read More