என்னா மாறி நடிகன்டா ? – ஆச்சரியப்படுத்திய அர்ஜுன் தாஸ் !!

 

ஒரு ஆள் சினிமாவில் தலை காட்டும் முன்னரே தன் குரலால் மூலை முடுக்கெல்லாம் அறிமுகாமானதென்றால் அது அர்ஜூன் தாஸ் தான். கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் வில்லன் குரலில் மிரட்டி டிரெய்லரிலேயே அதகளப்படுதியவர், இப்போது பாம் படத்தில் வில்லனிலிருந்து ஒரு அற்புதமான நடிகனாக அசத்திள்ளார்.

கைதி படம் மூலம் மிரட்டலான வில்லனாக தமிழகமெங்கும் புகழ்பெற்ற அர்ஜூன் தாஸுக்கு தனி ரசிகர்பட்டாளமே உண்டு. அதிலும் அவரது பேஸ் வாய்ஸுக்கு பெண்கள் மத்தியில் தனி கிரேஸ். அது தான் அவரை ஹீரோவாக்கியது. வில்லனாக அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களிலேயே ஹீரோவாக கலக்க ஆரம்பித்துவிட்டார்.

படத்திற்கு படம் ஆச்சரியம் தந்து வரும் அர்ஜுன் தாஸ் பாம் படத்தில் ஒரு நடிகராக அனைவரையும் அசரவைத்துவிட்டார்.

பேஸ் வாய்ஸ் மிரட்டல் தோற்றத்தை வைத்துக்கோண்டு, கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு அப்பாவி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். இதுவரையில் அவர் ஏற்ற கதாப்பாத்திரங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பாத்திரத்தில் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரமாக வாழ்ந்து பிரமாதப்படுத்திவிட்டார்.

காமிக் தன்மை கொண்ட ஒரு படத்தில், யார் அதட்டினாலும் பயக்கும் ஒரு கதாப்பாத்திரத்தில், அவர் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்க்க வைக்கிறது. காளிவெங்கட் உடனான நட்பை வெளிப்படுத்துவதாகட்டும், அவர் சாகவில்லை என துடிப்பதாகட்டும், தயங்கி தயங்கி காதலியை பார்ப்பதாகட்டும், சாமி வந்து ஆடும்போது உக்ரம் ஆவதிலாகட்டும் தனது நடிப்பு திறமையும் முழு பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வந்து மிரளவைத்துள்ளார்.
பாம் படம் அவரை ஒரு அற்புதமான நடிகன் என நிலை நிறுத்தியிருக்கிறது. இன்னும் இன்னும் அவர் பல ஆச்சரியங்கள் தருவார் என எதிர்பார்க்கலாம். பாம் படம் அவரது நடிப்பில் ஒரு மைல்கல்.