24
Sep
தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19.09.2025 அன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களும் இளம் திறமையாளர்கள். ஷேன் நிகம், சாந்தனு, சாய் அபயங்கர், உன்னி ஆகியோர் மிகவும் திறமையானவர்கள். அனைவரும் இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார். தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் பேசும்போது, இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இப்படம் என்னுடைய…
