ழகரம் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘சூர்யா 47’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் முதல் திரைப்படம் ஆகும். இந்தக் கூட்டணி குறித்த தகவல்கள் வெளியானது முதலே, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. இன்று நடைபெற்ற பூஜை நிகழ்வில் படத்தின் நாயகி நஸ்ரியா நசீம், மலையாளத் திரையுலகின் இளம் நட்சத்திரம் நஸ்லென், நடிகர் ஆனந்த்ராஜ், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜோதிகா, மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி, ராஜசேகர் பாண்டியன் (2D என்டர்டெயின்மென்ட்), எஸ்.ஆர். பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர். பிரபு (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை…
Read More

‘மூன்வாக்’ படத்தின் ஐந்து பாடல்களையும் பாடிய இசைப்புயல்!!

  Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, Behindwoods Founder & CEO திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 'ஏத்து', 'மெகரினா', 'மயிலே', 'டிங்கா', 'ஜிகர்' என இந்த படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு இந்த படத்தின் பாடல்களின் அறிவிப்பிலும் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மூன்வாக் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்…
Read More

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!

  செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார். https://youtu.be/1DR3_njj8Q4?si=6L0kPWhNc8NZmU6P
Read More

‘வரும் வெற்றி’ இசை ஆல்பம் மூலம் இயக்குநராக மாறிய நடிகர் ஷாம்

    தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம். SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம். பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. *தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்* இயக்கம் ; ஷாம் ஒளிப்பதிவு ; K.A.சக்திவேல் இசை ; அம்ரீஷ் படத்தொகுப்பு ; லாரன்ஸ் கிஷோர் நடனம் ; ஸ்ரீதர் பாடல்…
Read More

“ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !!

  Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நடிகர், ரேடியோ ஜாக்கி, பிளேடு சங்கர் பேசியதாவது.., இது நமது படம், என் நண்பன் படம், கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட் மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச்…
Read More
இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி,  பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ்,…
Read More
வித் லவ்   டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!

வித் லவ் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது.   இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.   டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை  “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்   இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி…
Read More
“அமரன்” IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு

“அமரன்” IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு

    ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட "அமரன்" திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க தேர்வு, "அமரன்" பட குழுவினருக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில் இந்தியாவின் சிறந்த சினிமா சாதனைகளை காட்சிப்படுத்தும், மிகவும் கொண்டாடப்படும் தளங்களில் ஒன்றான இந்தியன் பனோரமா பிரிவின் காட்சியைத் தொடங்கி வைக்கிறது. இதுமட்டுமின்றி, "அமரன்" திரைப்படம் சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிரிவில் இடம்பெறும் சில இந்திய திரைப்படங்களில் ஒன்றாக "அமரன்" இருப்பது, அதன் கலை சிறப்பு மற்றும் சர்வதேச ஈர்ப்பை பிரதிபலிக்கிறது. IFFI 2025-இல் "அமரன்" திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மற்றும்…
Read More
மீண்டும் வெளியாகும்  ‘ப்ரண்ட்ஸ்’  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !!

மீண்டும் வெளியாகும் ‘ப்ரண்ட்ஸ்’  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !!

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ், பொன் குமரன், கணேஷ் பாபு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'ப்ரண்ட்ஸ்'…
Read More
ZEE5 அடுத்த அதிரடி படைப்பு ‘ரேகை’, நவம்பர் 28-ல் வெளியாகிறது!!

ZEE5 அடுத்த அதிரடி படைப்பு ‘ரேகை’, நவம்பர் 28-ல் வெளியாகிறது!!

    ~ புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ~ இந்தியாவின் முன்னணி தேசீய ஓடிடித் தளமான ZEE5, தன் அடுத்த அதிரடி சீரிஸ் மூலம், உண்மை கண்முன்னே இருந்தும், நாம் கண்டுபிடிக்க முடியாத, ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலான, புதிய அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது. இந்த சீரிஸ், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்து கொண்டாலும், ‘ரேகை’ முழுமையாக தினகரன் M உருவாக்கி – எழுதி – இயக்கிய…
Read More