‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

  ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. இப்படம்  வரும் நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை,  ஊடக  மற்றும் பண்பலை நண்பர்களை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது.., மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேன், இந்த விழா எப்படி நடக்கும் என நினைத்தேன், எல்லாம் ஒன்றாக இணைந்து இன்று விழா நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன்.  அவரின் ரசிகன் இன்று அவரை வைத்துப் படமெடுத்துள்ளேன் என்பது…
Read More
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழு !!

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழு !!

  டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் மற்றும் எம். எஸ். கே. ஆனந்த் ஆகியோரின் இணை தயாரிப்பில் பிளாக் ஷீப் ஃபைண்ட்ஸ் ( Black Sheep Finds) நிறுவனத்தின் படைப்பு பங்களிப்புடன் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வரும் நிலையில் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமாக அமைந்த ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து…
Read More
‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக் !!

‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக் !!

Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. Behindwoods Founder & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இதயத்தை வருடும் இசையுடன் வெளியாகும் இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் திரைத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த இணைப்பைப் பற்றி பேசும் போது, *லஹரி மியூசிக் நிறுவனர் திரு. மனோஹரன் நாயுடு* கூறுகையில்: “இது எங்களின் 50வது ஆண்டு; 'மூன்வாக்' படத்தின் இசை உரிமையை பெற்று இப்படத்துடன் இணைவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மூன்வாக் படத்தின் பாடல்கள் உண்மையாகவே அந்தப்படத்தின்…
Read More
மாஸ்க் பட டைட்டில் என்னுடையது, என்னை ஏமாற்றி விட்டார்கள் – இயக்குநர் மாரிஸா !!

மாஸ்க் பட டைட்டில் என்னுடையது, என்னை ஏமாற்றி விட்டார்கள் – இயக்குநர் மாரிஸா !!

  Z Fims சார்பில், C புதுகை மாரிஸா எழுதி இயக்கி தயாரிக்க, பிளாக்பாண்டி, செண்ட் ராயான், வடிவுக்கரசி, ஷகீலா, ஆகியோர் நடிப்பில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் “மாஸ்க்”. 2017 பதிவு செய்து தயாரித்த தனது படத்தின் டைட்டிலை தனக்கு தெரிவிக்காமல், தற்போது வெற்றிமாறன் வழங்கும் படத்திற்கு கொடுத்துவிட்டதாக இயக்குநர் மாரிஸா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இயக்குநர் மாரிஸா கூறுகையில்.., 2017 ஆம் ஆண்டு எங்கள் படத்தை துவக்கிய போது, ஜாக்குவார் தங்கம் தலைவராக இருக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாஸ்க் எனும் டைட்டிலை முறையாக பதிவு செய்தோம். படம் துவங்க காலதாமதமானதால், பட டைட்டிலுக்கான புதுப்பித்தல் தொகையையும் செலுத்தி வந்தோம். கொரோனா காலகட்டத்தில் எதுவும் இயங்காததால் அந்த நேரத்தில் பணம் கட்டவில்லை. கொரானா முடிந்த பிறகு புதுப்பித்தலுக்கான மொத்த தொகையையும் செலுத்த சென்றோம். அப்போது ஜாக்குவார் தங்கம் படத்தை முடித்து விட்டு வாருங்கள் டைட்டில் உங்களுக்கு…
Read More
‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

  ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது, “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. இயக்குநர் ரவிகுமார், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’ காலத்தில் இருந்தே ராமதாஸ் அண்ணன் எங்கள் டீமுக்கே பெரிய பக்கபலமாக இருந்தார்.…
Read More
“யெல்லோ” ( Yellow) திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“யெல்லோ” ( Yellow) திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

  Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow). பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் பேசியதாவது.., இது என்னுடைய முதல் படம். இந்தப் படம் இங்கு வரக்காரணம் தயாரிப்பாளர்பிரசாந்த் தான். தயாரிப்பாளராக முழு ஆதரவாக இருந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை 8 ஆண்டுகளாகத் தெரியும் அவர் முதன் முதலில் நடித்த குறும்படத்திற்கு நான் தான் கேமராமேன், இப்போது அவரது முதல் படத்திற்கு நான் கேமராமேன் என்பது மகிழ்ச்சி.…
Read More
‘IPL (இந்தியன் பீனல் லா)’  படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா !!

‘IPL (இந்தியன் பீனல் லா)’  படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா !!

  ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் - TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'IPL (இந்தியன் பீனல் லா)' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 'IPL -இந்தியன் பீனல் லா' திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, 'ஆடுகளம்' நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார். இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…
Read More
கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !!

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !!

  டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது, என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம். நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். சுகுமாரின் ஒளிப்பதிவைப் பார்க்கும்போது அழகான கனவு போல…
Read More
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்  புதிய தமிழ் படம்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் புதிய தமிழ் படம்!

ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது. குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, ’தி லஞ்ச்பாக்ஸ்’, ’மசான்’, ’பாக்லைட்’ மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற ’காதல்’ போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் சமகால இந்திய…
Read More
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

தென்னிந்திய சினிமாவில் தரமான தயாரிப்புகளுக்கும் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் படங்களை கொண்டு போய் சேர்க்கும் உத்திக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது . சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும் அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் கலவையாக இருக்கும். நடிகர் சந்தீப் கிஷனை இந்தத் திரைப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கலாம். மொழி எல்லைகள் கடந்து ரசிகர்கள் மத்தியில் பான் இந்திய ஸ்டாராக இதன் மூலம் மாற இருக்கிறார் சந்தீப். அவருடன் ஃபரியா அப்துல்லா,…
Read More