அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!*

அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் திரில்லாராக உருவெடுத்துள்ளது. கதைக்களத்திற்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார். 'சித்தா', 'கனா' ஆகிய படங்களில் வெற்றிப் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் , ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ், 'டியூட்', 'குட் நைட்', 'டூரிஸ்ட் பேமிலி' ஆகிய…
Read More

‘ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி…
Read More

அர்ஜுன் தாஸ் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம் !

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன், மற்றும் வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரைச் சுற்றித் தான் படத்தின்…
Read More

எமோசனல் ஃபேமிலி டிராமா மொய் விருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C R மணிகண்டன் இயக்கத்தில், ஒரு அழகான ஃபேமிலி எமோசனல் டிராமாவாக உருவாகியுள்ள 'மொய் விருந்து' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையம். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C R மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் C R மணிகண்டன் கூறுகையில்.., நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே…
Read More

‘ஸ்டீபன்’ படம் நெட்ஃபிலிக்ஸின் உலகளாவிய டிரெண்ட்ஸில் டாப் 10 இடத்திற்குள் உள்ளது

உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பஹ்ரைன், இலங்கை, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய முதல் 10 படங்கள் பட்டியலில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’ஸ்டீபன்’ இப்போது ஏழாவது இடத்தில் உள்ளது. ‘ஸ்டீபன்’ படத்தை சிலாகித்து சமூகவலைதளங்களில் பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, மற்ற க்ரைம்-த்ரில்லர் ரசிகர்களை ஈர்ப்பதோடு கோமதி சங்கரின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இது படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் கதையை சுற்றியுள்ள பரபரப்பு, பல அடுக்குகள் கொண்ட கதை என இந்த வாரம் வெளியான வெற்றி கதைகளில் ஒன்றாக ‘ஸ்டீபன்’ உள்ளது. படத்தின் வரவேற்பு குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான மிதுன் பாலாஜி மற்றும் நடிகரும் இணை எழுத்தாளருமான கோமதி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “படத்திற்கு…
Read More

நவீனகால சென்னையின் முதல் 100% ரெசிடென்ஷியல் கேம்பிரிட்ஜ் பள்ளி ‘சேஜ்ஹில்’!!

நவீனகால கல்வி முறையில் துணிச்சலான புதிய பார்வையை வழங்கும் வகையில் சென்னை புறநகரில் முதன்முறையாக ரெசிடென்ஷியல் பள்ளியாக உருவாகியுள்ளது ’சேஜ்ஹில்’. சமகால குடும்ப வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பெற்றோர் ஒத்துழைப்புடன் கூடிய பள்ளியாகவும் இது இருக்கும். நகர வாழ்க்கையில் தொழில்- குடும்பம் என்ற இரட்டை குதிரையில் பெற்றோர்கள் சவாரி செய்து வர குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான நடைமுறை சிக்கல்களை சமநிலைப்படுத்த இருவருக்குமான இடமாகவும் ‘சேஜ்ஹில்’ இருக்கும். சர்வதேச கல்விமுறை, புதுமையாக்கம், கலாச்சார ஆய்வு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றை இணைக்கும் அணுகுமுறையை ‘சேஜ்ஹில்’ கொண்டுள்ளது. மாணவர்களை தேர்வுகளுக்கு மட்டுமே தயார்படுத்தாமல் வாழ்க்கை, அறிவுதிறன், படைப்புத் திறமை, எதிர்கால உலகத்திற்கு ஏற்றாற்போல நேரடி கள அனுபவங்களையும் கொடுத்து அவர்களை ‘சேஜ்ஹில்’ தயார்படுத்துகிறது. சென்னையின் கல்வி வடிவமைப்பில் இருந்து ‘சேஜ்ஹில்’லை தனித்துவமாக்குவது அதன் ‘Co-Parenting Value Delivery Engagement Model’. அதாவது, பள்ளியை விட்டு குழந்தை தள்ளி இருக்கும்போதும் பெற்றோரை குழந்தைகளின் வளர்ச்சியுடன் இணைக்கும் வகையில்…
Read More

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது.

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகை சிம்ரன், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் இருந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- சென்னையில் நடைபெறும் 23-வது சர்வதேச திரைப்பட விழா சிறப்பான ஒன்று. நாளை (12.12.2025) ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல்லாண்டு…
Read More

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !!

  ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி". விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்ப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சையத் தமீன் பேசியதாவது.., இங்கு என்னை வாழ்த்த வந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. இது உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு, 2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்டில் தண்டனை வழங்கப்பட்டது, உண்மையில் நடந்ததை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் என்பவர் எல்லா பிஸினஸ் போல பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வருகிறார், ஆனால் இடையில் உள்ளவர்கள் தான் சம்பாதிக்கிறார்கள், தயாரிப்பாளருக்கு இறுதியில் தான் என்ன…
Read More

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்’ 29 ‘ !!

நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, '29' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் '29' எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ரொமாண்டிக் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் எஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில்…
Read More

சூப்பர்ஸ்டாரின் பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !!

  தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது. 1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இணைந்து நடித்திருந்தார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ், என…
Read More