31
Dec
முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது. மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ரகசியங்களுடன் மோதும் போது முற்றிலும் தலைகீழாக மாறுகிறது. விசாரணை தீவிரமடையும் போது,…
