சன் நெக்ஸ்டில் வெளியாகியிருக்கும், “உன் பார்வையில்” திரைப்படம் எப்படி இருக்கிறது ?

 

Lovely World Entertainment தயாரிப்பில், தமிழில் புதுமையான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது “உன் பார்வையில்” திரைப்படம். நடிகை பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, இயக்குநர் கபீர்லால் இயக்கியுள்ளார்.

நடிகர் வெங்கட் ராமன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன்நெக்ஸ்ட் தளத்தில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

சரி வாருங்கள் படம் எப்படி என்று பார்க்கலாம்.

கண் பார்வையற்ற நாயகி, திடீரென கொல்லப்பட்ட தன் தங்கையின் தற்கொலை மரணத்திற்கு உண்மையான காரணம் யார் என தேட ஆரம்பிக்கிறாள். ஆனால் அந்த தேடலில் நிறைய மர்மங்கள் வெளி வர ஆரம்பிக்கிறது. அவளை ஒருவன் பின் தொடர ஆரம்பிக்கிறான். அவளின் தங்கையை கொலை செய்தது யார்? அவளை பின் தொடர்ந்தவன் யார்? என்பதே இப்படத்தின் கதை.

2010ல் வெளியான Julia’s Eyes எனும் ஸ்பானிஷ் படத்தை மையமாக வைத்து, இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரிஜினல் படத்தில் பரபரப்பு, திரில், இரவின் டோன் என பல விசயங்கள் இதில் மிஸ்ஸிங்.

இந்தப்படத்தை தமிழுக்கு இந்திய மொழிக்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறார்கள். படத்தின் டோனை இருளிலிருந்து வெளிச்சத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். அது ஒரு வகையில் பிளஸாக அமைந்துள்ளது.

படத்தின் கதை ஒரு மலை கிராமத்தில் நடக்கிறது அது ஒரு அந்நியத்தன்மையை கொண்டு வருகிறது. அதில் படக்குழு கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தின் முழுக்கதயையும் பார்வதி நாயரை சுற்றித்தான், அவர் அதை உணர்ந்து தன் இரு கதாப்பாத்திரங்களையும் அழகாக செய்துள்ளார். வெங்கட் ராமனுக்கும், மகேந்துரனுக்கும் முக்கிய கதாப்பாத்திரங்கள். இருவரும் அதை சிறப்பாக செய்துள்ளார்கள்.

 

படத்தின் ஒளிப்பதிவு, இசை இரண்டும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஒரிஜினல் படத்திற்கு நேரெதிராக இருக்கிறது தொழில் நுட்ப அம்சங்கள்.

படத்தின் பரபரப்பே யார் கொலையாளி என்பது தான் ஆனால் அந்த படபடப்பு நமக்கு முழுதாக கடத்தப்படவில்லை இப்படி சின்ன சின்ன விச்யங்களை சரி செய்திருந்தால் இது இன்னும் ஒரு அசத்தலான திரில்லராக இருந்திருக்கும்.

ஆனாலும் திரில்லர் ரசிகர்கள் இப்படத்தை தாராளமாக ரசிக்கலாம்.

error: Content is protected !!