இந்தப் படத்துக்காக 70 நாட்கள் கமல் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார்! இந்தியன் 2 விழாவில் ஷங்கர்!

இந்தப் படத்துக்காக 70 நாட்கள் கமல் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார்! இந்தியன் 2 விழாவில் ஷங்கர்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.  தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  "இந்தியன் 2" டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், நடிகர் சித்தார்த் பேசியதாவது… '21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு,…
Read More
‘ACKO போல வருமா’  விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது

‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது

முந்தைய மூன்று ஹைப்பர்லோகல் ஆட்டோ இன்சூரன்ஸ்  விளம்பர படங்களின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, டெக்-முதல் காப்பீட்டு நிறுவனமான ACKO, பார்வையாளர்களுக்கு, உள்ளூர் ரசனையைக் கொண்டு வருவதற்காகச் சென்னையில் ‘ACKO போல வருமா’ என்ற தனது சமீபத்திய விளம்பர பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. டிடிபி முத்ரா சவுத் மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட இந்த விளம்பரத் திரைப்படங்களைப் பிரபல தமிழ் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மேலும் பிரபல தமிழ் நடிகரான யோகி பாபு மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்  பால் டப்பா ஆகியோர் அப்பா-மகன் ஜோடியாக நடித்துள்ளனர்.   சென்னை முழுவதும் 500,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன், ACKO சந்தையில் ஒரு பாராட்டத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது மற்றும் புதிய தலைமுறை  காப்பீட்டுத் தீர்வுகள் வழங்குவதில் முன்னணியில் உள்ளது.  காப்பீட்டாளரிடமிருந்து நேரடியாக மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் நன்மைகளை முன்னிலைப்படுத்துவதே, இந்த விளம்பர பிரச்சாரத்தின் நோக்கமாகும். நகைச்சுவை கலந்து, நம் வாழ்வியல் அம்சங்களை மையப்படுத்தி, நம் நண்பர்களைக்…
Read More
”கல்கி 2898 கிபி” யுடன் இணைந்துள்ள “இந்தியன் 2” ! -கமலின் இரண்டு முகங்கள் ஒரே திரையில்!

”கல்கி 2898 கிபி” யுடன் இணைந்துள்ள “இந்தியன் 2” ! -கமலின் இரண்டு முகங்கள் ஒரே திரையில்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இந்தியா முழுக்க, இதுவரை இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள "கல்கி 2898 கிபி" படத்துடன் "இந்தியன் 2" படத்தின் டிரெய்லரை வெளியிட்டு அசத்தியுள்ளது. இன்று அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் திரையரங்குகளில், வெளியாகியுள்ள கல்கி 2898 கிபி படத்துடன், “இந்தியன் 2” படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை…
Read More
விஜயின் ‘கோட்’ படத்தில் ஏ ஐ மூலம் மறைந்த பாடகி பவதரணியின் குரல்!

விஜயின் ‘கோட்’ படத்தில் ஏ ஐ மூலம் மறைந்த பாடகி பவதரணியின் குரல்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் இடம்பெறும் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான‌ டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி 'திமிரி எழுடா' என்ற உத்வேக‌மூட்டும் பாடலை கிருஷ்ண சேத்தன் உடன் இணைந்து ரஹ்மான் உருவாக்கி இருந்தார். இந்த பாடலைக் கேட்ட…
Read More
“என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம்!- “கல்கி 2898 கிபி” பட நாயகர் பிரபாஸ்!

“என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம்!- “கல்கி 2898 கிபி” பட நாயகர் பிரபாஸ்!

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். வீடியோவில் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும் பிரபாஸின் அனைத்து ரசிகர்களும், தயவு செய்து என்னை மன்னிக்கவும், இந்தப்படத்தினை பற்றி தெரியவந்த போது, தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும்…
Read More
பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல் கம்யூனிகேஷன்…
Read More
‘Big Shorts – Season 3’ போட்டிக்காக மூன்று முக்கிய நிறுவனங்கள் இணைந்துள்ளன!

‘Big Shorts – Season 3’ போட்டிக்காக மூன்று முக்கிய நிறுவனங்கள் இணைந்துள்ளன!

  மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்படப் படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக 'Big Shorts குறும்பட போட்டியின் 3-வது சீசனுக்காக' மூவிபஃபுடன் இணைவதில் பெரும் உற்சாகமடைகிறது டர்மெரிக் மீடியா. இதன் மூலம் திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும் தளமாக இந்தப் போட்டி உள்ளது. படைப்பாற்றல் கொண்ட இளைஞர்கள், சினிமாத் துறையின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொள்ளவும், தங்களின் கனவை நனவாக்கும் விதமாக படங்களை உருவாக்கவும் இது வாய்ப்பளிக்கிறது. கூடவே தாங்கள் எடுத்த படங்களைப் பெரிய திரையில் பார்க்கவும் இந்த போட்டி உதவியாக இருக்கும். 2017-ல் நடந்த இந்த போட்டியின் முதல் சீசனில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 40 நகரங்களில் சுமார் 500 திரைகளில் திரையிடப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியின் நடுவர்களாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்,…
Read More
“தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்!

“தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். 8 கொண்ட பொலிடிகல் சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது. https://www.youtube.com/watch?v=02Hj6VNYJ88&feature=youtu.be தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால்…
Read More
*விஜய் குமாரின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!*

*விஜய் குமாரின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!*

*விஜய் குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு! *ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!* தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தீரா..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 'சேத்துமான்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும்…
Read More
தமிழக அரசியல் முகத்தை விவரிக்கும் ‘தலைமைச் செயலகம்’ – இயக்குனர் வசந்தபாலன்!

தமிழக அரசியல் முகத்தை விவரிக்கும் ‘தலைமைச் செயலகம்’ – இயக்குனர் வசந்தபாலன்!

இந்தியாவின் முன்னணி ஒடிடி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்ப்பிலுள்ள தமிழ் சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டீசரை இன்று வெளியிட்டது - அதிகாரத்தின் கோரத்தைப் பற்றிப்பேசும் அழுத்தமான அரசியல் திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸை, ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமாருடன் தயாரித்துள்ளார். கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இந்த 8-எபிசோடுகளாக இந்த சீரிஸ் வெளிவரவுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தின் பின்னணியில் லட்சியம், துரோகம் மற்றும் போராட்டம் மிகுந்த ஒரு பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது. 'தலைமைச் செயலகம்' மே 17 அன்று பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்படும். தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார்,…
Read More