இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER ( saala Crossbreed )படத்தில் மைக் டைசன் இணைகிறார் ! கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமான “LIGER” படத்தை, ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பிரமாண்டமாக உருவாக்கிவருகிறார். மொத்த படக்குழுவிற்கும், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கும், மற்ற அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியமான படமான இந்த படம் இருக்கும்.   அகிலம் அதிரும்படியான ஒரு அட்டகாச தகவலை LIGER படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு மிகபெருமையுடன் கூறுவது என்னவென்றால், இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, உலக அளவில் வரலாறு படைத்த ஒரு நபர், யாராலும் அசைக்கமுடியாத ஜாம்பவான், மைக் டைசன், பெருமைமிக்க பன்மொழி திரைப்படமான LIGER படத்தில் இணைகிறார். ஆம், நீங்கள் இப்பொழுது வாசித்தது சரி தான். மிகவும் ஆக்ரோஷம்…
Read More
துல்கர் சல்மான் வெளியிட்ட “ஹனு-மான்”  முதல் பார்வை

துல்கர் சல்மான் வெளியிட்ட “ஹனு-மான்” முதல் பார்வை

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், அவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள். தனித்துவமான உள்ளடக்கத்தைக் கொண்ட வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவது இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் தனிச்சிறப்பாகும். அதன் தொடர்ச்சியாக,  அவரது அடுத்த திரைப்படமான ஹனு-மான் இந்தியத் திரையில் புதுமையான முயற்சியாக இருக்கும். முதல் அனைத்திந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மானுக்காக  சோம்பி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைகிறது. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகும் ஹனு-மானுக்காக இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுடன் பிரசாந்த் வர்மா கைகோர்த்துள்ளார். ஏற்கனவே கூறியபடி, முதல் பார்வை போஸ்டரையும் அஞ்சனாத்ரி உலகத்திலிருந்து ஹனுமந்துவை அறிமுகப்படுத்தும் 65 வினாடிகள் காணொலியையும் படத்தின் குழு வெளியிட்டுள்ளது. நடிகர்…
Read More
“கலர்ஸ் மூலம் 17 கிலோ எடை குறைத்தேன்” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல் பெருமிதம்*

“கலர்ஸ் மூலம் 17 கிலோ எடை குறைத்தேன்” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல் பெருமிதம்*

பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது. குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர் களின் உடல் எடை மற்றும் சரும பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேட்டிக் தொழில் நுட்பமும் அவர்களது கைலான் சருமம் மற்றும் கூந்தலுக்கான தயாரிப்புகளும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. லேட்டஸ்டாக நடிகை ஈஷா தியோல் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 17 கிலோ வரை குறைத்துள்ளார். சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேடிக் தொழில்நுட்பம் குறித்தும் மற்றும் அதன்…
Read More
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் என புகழ்பெற்ற, இயக்குநர் விஷ்ணு வர்தன் பாலிவுட்டில் “ஷெர்ஷா” படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்தால் மற்ற பெரிய படங்கள் போலவே 2020 ஆம் ஆண்டில் இருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது 2 ஜூலை 2021 அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Dharma Productions சார்பில் கரண் ஜோகர் இப்படத்தினை தயாரிக்க, Kash Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது.
Read More
பாலிவுட்டில் கமலுக்கு சவால் விடப் போகும் விஜய்சேதுபதி!

பாலிவுட்டில் கமலுக்கு சவால் விடப் போகும் விஜய்சேதுபதி!

தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் 'காந்தி டாக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப்போகும் மவுனத் திரைப்படம் இது. இந்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை 'காந்தி டாக்ஸ்' மூலம் நனவாக்கி யது குறித்தும் பகிர்ந்துள்ளார். 1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'புஷ்பக விமானா' என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம். இந்தப் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தேன் என்று பேசியிருக்கும் இயக்குநர் கிஷோர், "இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக்…
Read More
மோலிவுட்டின் காமக்கன்னியாக இருந்த ஷகிலா-வின் வலி மிகுந்த வாழ்க்கைப் படம்!

மோலிவுட்டின் காமக்கன்னியாக இருந்த ஷகிலா-வின் வலி மிகுந்த வாழ்க்கைப் படம்!

“ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென் இந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காம படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலக் கட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்பதினராலேயே புறக்கணிக்கப் பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை என அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது. இப்படம் நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு…
Read More
The greatest show man of India – ராஜ்கபூர்!

The greatest show man of India – ராஜ்கபூர்!

தற்போது இந்தி தெலுங்கு தமிழ் என இந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் திரையிடப் பட்டு வசூலில் கொடிகட்டி பறக்கலாம்..சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு முதன்முதலாய் விதை போட்டவர் நடிகர் ராஜ்கபூர்.. ரஷ்யாவில் ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட இந்தியர் ராஜ்கபூர்தான் என்பார்கள்.. அந்த அளவுக்கு அவரின் படங்கள் ரஷ்யாவில் அமோகமாக ஓடின..! நடிப்பு தயாரிப்பு இயக்கம் மட்டுமின்றி சினிமா பற்றிய தொழில்நுட்பங்களும் ஜாம்பவானாக விளங்கியவர் ராஜ்கபூர். அதனால்தான் அவரை தி கிரேட்டஸ்ட் ஷோ மேன் ஃப் இந்தியா என்று பெருமையோடு பேசுவார்கள். இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆராவில் (1931) நடித்த பிரிதிவிராஜ் கபூர் அவர்களின் மூத்த மகன்தான் ராஜ்கபூர்.. ! இன்றளவும் இந்தியாவின் நம்பர் ஒன் வசூல் படம் என்று பேசப்படுகிற mughal-e-azam (1960) படத்தில் அக்பர் ஆக வருவார் பிரிதிவிராஜ் கபூர்.. கம்பீரமான குரல் வளத்தோடு படம் முழுவதும் துவம்சம் செய்யும் அவரின் நடிப்பை காண…
Read More
பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி!

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி!

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறை யில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு இந்தி படங்களும் 'சுபிஸ்டா மாவா' மற்றும் 'ஜூலாயின்' என்ற பெயரில் தெலுங்கில் மறு உருவாக்கத்தில் வெளியானது. கவர்ச்சி பாத்திரமாக இருந்தாலும் சரி, பாரம்பரிய பாத்திரமாக இருந்தாலும் சரி, அம்ரின் மிகவும் பொருந்தி விடுகிறார். ஆகையால், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அம்ரின் தனது இந்தி திரைப்படங்கள் நிறைவடைவதற்கு முன்பே கிளவுட் நைன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பை பெற்றுவிட்டார். இந்தியில் தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்து, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமான கதாநாயகியாக மாறுவதே அம்ரின் குறிக்கோளாக வைத்துள்ளார். ரேகா, ஹேமமலினி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, வாகீதா ரெஹ்மான், தபு போன்ற கதாநாயகிகள் தென்னிந்திய சினிமா மூலம் திரைப்…
Read More
சோனு சூட் : ‘பஞ்சாபின் அடையாளம்’ – :இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சோனு சூட் : ‘பஞ்சாபின் அடையாளம்’ – :இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளமாக அறிவிக்கக் கோரி பஞ்சாப் தேர்தல் அதிகாரி கருணா ராஜு விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு நடிகர் சோனு சூட் தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த கொரோனா மற்றும்ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய…
Read More
காஜல் அகர்வாலுக்கு திருமணம் !

காஜல் அகர்வாலுக்கு திருமணம் !

பிரபல தென்னிந்திய நடிகையான காஜல் அகர்வாலுக்கு வரும் அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவிருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் 2008-ம் ஆண்டு ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். அதன் பின்பு ‘பழனி’, ‘மோதி விளையாடு’, ‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘ஜில்லா’, ‘மாரி’, ‘பாயும் புலி’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘கவலை வேண்டாம்’, ‘விவேகம்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். காதல் அகர்வால் தற்போது ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா புரொடெக்சன்ஸ் தயாரித்து வரும் ‘இந்தியன்-2’ படத்திலும் நடித்து வருகிறார்.  மேலும் பல தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இருக்கும் அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நாயகியாக நடித்த பெருமை கொண்டவர் காஜல் அகர்வால். தற்போது 35 வயதாகும் காஜலுக்கு திருமணம் என்று சமீப காலமாக…
Read More