சஞ்சய்தத் தாயாக நடிக்கிறார் மனிஷா கொய்ராலா!

சஞ்சய்தத் தாயாக நடிக்கிறார் மனிஷா கொய்ராலா!

சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை பாலிவுட்டில் உருவாகி ஹிட்டானது. சில்க்காக வித்யா பாலன் நடித்தார். இதையடுத்து முக்கிய நடிகர்களின் வாழ்க்கையை படமாக்க அவ்வப்போது ஸ்கிரிப்ட் தயாரிக்கின்றனர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை தற்போது படமாகிறது. ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். சஞ்சய்தத்தின் தாய் நர்கிஸ். இவர் பிளாக் ஒயிட் காலத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது மனிஷா கொய்ராலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நர்கிஸ் நியூயார்க் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மனிஷா கொய்ராலாவும் சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நர்கிஸ் அப்போது சிகிச்சை பெற்ற அதே நியூயார்க் மருத்துவமனையில் மனிஷாவும் தங்கி சிகிச்சை பெற்றார். கேன்சர் வலி குறித்து மனிஷாவுக்கு நன்கு தெரியும் என்பதால் நர்கிஸ் பாத்திரத்துக்கு அவரை தேர்வு செய்ததாக இயக்குனர் தெரிவித்தார். நிஜத்தில் அனுபவித்த வேதனையை…
Read More
இந்திப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நிஜ அடி, உதை, தாக்குதல்!

இந்திப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நிஜ அடி, உதை, தாக்குதல்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஜெய்கர் கோட்டையில் பத்மாவதி என்ற இந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பினர் வரலாற்று புகழ் பெற்ற பத்மாவதிக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவரையும் குழுவினரையும் அவர்கள் தாக்கினர். ஏற்கனவே கேட்டுக்கொண்டோம் பத்மாவதி படத்தின் திரைக்கதை நகலை காட்டுவதற்கு சஞ்சய் லீலா பன்சாலி முன்வரவில்லை என்ற எதிர்ப்பாளர்கள் கூறினர். செட்டில் ஆர்பாட்டக்காரர்கள் புகுந்து உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியை பிடித்து இழுத்ததாகவும் ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன. பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'பத்மாவதி'. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும்.…
Read More
ஜாக்கிசான் சவாரி செஞ்ச சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்!

ஜாக்கிசான் சவாரி செஞ்ச சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்!

ஜாக்கிசான் நடித்து இதற்கு முன் வெளிவந்த ‘போலீஸ் ஸ்டோரி 3, 4, ரம்புள் இன் தி பாக்ஸ், தி மித்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்டானி டோங் ‘குங்பூ யோகா’ படத்தை இயக்குகிறார். சீன, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் தமிழில் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தின் பல முக்கியக் காட்சிகள் ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக இந்த வாரத் துவக்கத்தில் மும்பைக்கு வந்திருந்தார் ஜாக்கிசான். இந்தியாவிலும் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு, ஜாக்கி சான் படங்களுக்கென்று கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ‘கராத்தே கிட்’ படத்திற்குப் பிறகு வெளிவந்த ஜாக்கிசானின் படங்கள் இங்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்த குறையை ‘குங்பூ யோகா’ போக்குமா என்பது அடுத்த வாரம்…
Read More