நடிகர் விஷாலுக்கு ஆதரவாக வெளியான நீதிமன்றத்தின் தீர்ப்பு! ஆதரவான தீர்ப்பால் மகிழ்ச்சி!!

நடிகர் விஷாலுக்கு ஆதரவாக வெளியான நீதிமன்றத்தின் தீர்ப்பு! ஆதரவான தீர்ப்பால் மகிழ்ச்சி!!

நீதிமன்றம் மூலம் தனது வெற்றியை மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால் . நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சக்ரா'. இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் நடிகர் விஷாலே தயாரித்திருந்தார். இப்படம் வெளியாக இருந்த சமயத்தில் நடிகர் விஷால் நடிப்பில் அதற்கு முன் 2019ம் ஆண்டு வெளியான 'ஆக்ஷன்' திரைப்படத்தில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி சில தவறான தகவல்களுடன் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார், இந்த வழக்கால் சக்ரா திரைப்படம் வெளியாவதில் மிகுந்த சிக்கல் எழுந்த நிலையில் உயர்நிதிமன்றம் கூறிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வழக்கை ஜனநாயக முறையில் பின்பற்றி வந்த நடிகர் விஷால் அவர்களுக்கு நீதிமன்றம் ரவீந்திரன் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து விஷாலுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியுள்ளது. வழக்கின் தீர்ப்பை எண்ணி மகிழ்ந்த நடிகர் விஷால் மாண்புமிகு நீதிமன்றத்திற்கும், மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கும், எப்போதும் துணை…
Read More
எங்கேயும் எப்போதும் கதானாயகருக்கு திருமணம் ! வெளியான புகைப்படங்கள்!

எங்கேயும் எப்போதும் கதானாயகருக்கு திருமணம் ! வெளியான புகைப்படங்கள்!

எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து இருப்பவர் சர்வானந்த். 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தது இவர்தான். அவருக்கும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுக்கும் கடந்த பல மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் தேதி பல மாதங்களாக அறிவிக்கப்படாததால் திருமணம் நின்றுவிட்டது என்று செய்தி பரவியது. அதை மறுத்த நடிகரின் குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்பு தேதியை அறிவித்தனர். மேலும் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சர்வானந்த் சாலை விபத்தில் சிக்கிக்கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் விபத்தில் இருந்து காயம் அடையாமல் தப்பினார். இந்நிலையில் இன்று சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Read More
சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஆமிர் கான் இணையப்போகும் படம் !!

சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஆமிர் கான் இணையப்போகும் படம் !!

'லால் சிங் சத்தா' படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை இதனால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆமிர் கான் படங்களில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறார். தனது குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட இந்த பிரேக் தேவைப்படுகிறது என்று ஆமிர் கான் தெரிவித்திருந்தார். அதோடு நடிகர் சல்மான் கானை வைத்து 'சேம்பியன்ஸ்' என்ற படத்தைத் தயாரிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார். பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக்கான், ஆமிர் கான் ஆகியோர் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கின்றனர். அவர்கள் இடையே தற்போது நல்ல உறவு நீடித்து வருகிறது. சமீபத்தில் மூன்று பேரும் நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமிர் கான் எப்போதும் சொன்ன சொல்லைக் காப்பாற்றக்கூடியவர். அவர் சொன்னபடி சரியான நேரத்திற்கு வந்துவிட்டார் என்கிறார்கள். ஆனால் ஷாருக்கானும், சல்மான் கானும் 'டைகர் 3' படப்பிடிப்பிலிருந்தனர். படப்பிடிப்பை முடித்துவிட்டே இருவரும் வந்திருக்கின்றனர். அதன் பின்னர், அவர்கள் மூன்று பேரும்…
Read More
மாடல் அழகி வைபவி உபாத்யாயா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்,

மாடல் அழகி வைபவி உபாத்யாயா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்,

பிரபல மாடல் அழகியான வைபவி உபாத்யாயா சீரியல், திரைப்படங்கள், வெப்தொடர்கள் மற்றும் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சாஹில் சாராபாய் மீது ஈர்ப்பு கொண்ட குஜராத்திப் பெண்ணான சாராபாய் vs சாராபாய் படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக 2017 இல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான சாராபாய் vs சாராபாய் இரண்டு சீசன்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதை அடுத்து, சமூக வலைதளங்கலில் பிரபலமானார், சாராபாய் vs சாராபாய் படத்தின் வெற்றியால் வைபவி உபாத்யாயாக்கு ''க்யா கசூர் ஹை ஆம்லா கா'' அனுபமா போன்ற  டிவி நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .மேலும், தீபிகா படுகோனே நடித்த சபாக் படத்திலும், திமிர்  படத்திலும், ப்ளீஸ் ஃபைண்ட் அட்டாச்டு என்ற வலைத் தொடரிலும், அகூபர், பா ரிடயர் தாய் சே, மற்றும் கோட் போன்ற பல  சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ,நடிகை வைபவி உபாத்யா தனது வருங்கால கணவருடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவரின்…
Read More
ஷாருக்கானின் மேனேஜராக வேலை பார்ப்பவரின் சொத்து மதிப்பு இவ்வளவா!

ஷாருக்கானின் மேனேஜராக வேலை பார்ப்பவரின் சொத்து மதிப்பு இவ்வளவா!

பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கிங் என இந்தி திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருபவர் ஷாருக்கான். ஜனவரி மாதம் வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் பாய்காட் பிரசாரங்களை கடந்தும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பதான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஜவான் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க இருக்கார் ஷாருக்கான். மேலும் ஒரு படத்திற்காக 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஷாருக், ஏராளமான விளம்பரங்களில் நடித்தும் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். அதேநேரம் ஷாருக்கானின் மேனேஜர் பூஜாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி நம் அனைவரையும் தலை சுற்ற வைத்துள்ளது. கடந்த 11 வருடங்களா ஷாருக்கானின் மேனேஜராக வேலை பார்த்து வாறார் பூஜா தத்லானி. ஷாருக்கானின் நிழலாக பின்தொடரும் பூஜா, கிட்டத்தட்ட அவரது குடும்ப உறுப்பினராகவே வாழ்ந்து வருகிரார் . ஷாருக்கானின்…
Read More
பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.

பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.

பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது கனீர் குரலால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த தேனியைச் சேர்ந்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தில் பெற்ற பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடித்து தன் குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் செவ்வாழை ராஜூ.பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு அட்வைஸ் பன்ன சென்று அவரிடம் கொட்டு வாங்கிட்டு வரும் காட்சி அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்தது. இந்த திரைப்படத்தில் இவர் பொணந்திண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மனைவி மற்றும்…
Read More
ஆலியா பட் , ரன்பீர் கபூர் திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர்

ஆலியா பட் , ரன்பீர் கபூர் திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர்

நடிகை ஆலியா பட் நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் குறித்து தகவவல்கள் அனைத்துமே ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. திருமணம் எங்கு நடக்கிறது என்ற தகவல் கூட மர்மமாகவே இருந்தது. இறுதியில் பாந்த் ராவில் உள்ள ரன்பிர் கபூர் இல்லத்தில் இத்திருமணம் நடந்தது. திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலரே அழைக்கப்பட்டனர். தனது திருமணம் குறித்து ஆலியா பட் முதல் முறையாக நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் எனது திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பாக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. நான் சோசியல் நிகழ்ச்சிகளை அதிகமாக விரும்பமாட்டேன். அதனால் மிகவும் அபூர்வமாகவே வெளியில் பார்ட்டிகளுக்கு செல்வேன். யாரிடமும் அதிகமாக பேசவும் மாட்டேன். கலகலப்பாகவும் இருக்க மாட்டேன். அதனால் தான் எனது திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர். எனக்கு உண்மையாக மிகவும் விரிவாக பேசவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில்…
Read More
நான் சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை மிகவும் மதிக்கிறேன்! சைதன்யா பேட்டி

நான் சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை மிகவும் மதிக்கிறேன்! சைதன்யா பேட்டி

முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து வருகிறார்.இவர் நடிகை சமந்தாவை 2017 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021 -ம் விவாகரத்து பெற்றனர். தற்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யா, " சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல பெண்மணி. அவருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயங்கள் கிடைக்க வேண்டும்". "சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது எங்களை குறித்து வெளியாகும் வதந்திகள் எங்களிடையே உள்ள நல்லுறவை பாதிக்கிறது" என்று கூறியுள்ளார்.
Read More
“மியூசிக் ஸ்கூல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“மியூசிக் ஸ்கூல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

  யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்".  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது. நடிகை ஸ்ரேயா சரண் பேசியதாவது.. சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இது…
Read More
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.
Read More