கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா !!

கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா !!

நடிகர் சிவகுமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் நூல் வெளியீடு தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர். முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். காற்றில் விதைத்த கருத்து நூலின் இரண்டாவது பதிப்பும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இந்த நூலை வெளியிட விஐடி…
Read More
’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார். நடிகர் சத்யா…
Read More
“செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் !!

“செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் !!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசியதாவது... கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. செருப்புகள் ஜாக்கிரதை மிக வித்தியாசமான சீரிஸ், மத்த வெப் சீரிஸ் மாதிரி இல்லாமல் எழுதவே மிகவும் அதிக…
Read More
எல் 2 எம்புரான் எப்படி இருக்கு ?

எல் 2 எம்புரான் எப்படி இருக்கு ?

இயக்குனர் - பிரித்விராஜ் சுகுமாரன் நடிகர்கள் - மோகன்லால் , பிரித்விராஜ் , மஞ்சு வாரியர் , டோவினோ தாமஸ் , சுராஜ் இசை - தீபக் தேவ் தயாரிப்பு - ஆசீர்வாத் சினிமாஸ், கோகுலம் , லைகா பிக்சர்ஸ் நடிகராக இருந்து இயக்குநராகி லூசிஃபர் மூலம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பிரித்திவிராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த பாகமாக வந்துள்ள படம் தான் எம்புரான் மோகன் லாலை மையமாக வைத்து ஒரு பாகுபலி ல், கேஜிஎஃப் பாணி படத்தை தர முயன்றுள்ளார்கள். லூசிஃபர் படம் ஒரு ஆச்சரியம் கேரள அரசியலை மையமாக வைத்து அதில் அழகாக மோகன்லாலின் ஹீரோயிசத்தை நுழைத்து அசர வைத்த படம். இந்த முறை அதை உலக அளவில் சொல்ல முயற்சி செய்துள்ளார்கள். கேரளாவில் முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் நாயகன் , முதல்வரின் மற்றொறு மகனை புதிய முதல்வராக்கிவிட்டு…
Read More
வீர தீர சூரன் பாகம்-2 விக்ரமுக்கு கம்பேக்கா?

வீர தீர சூரன் பாகம்-2 விக்ரமுக்கு கம்பேக்கா?

இயக்குனர் - அருண் குமார் நடிகர்கள் - விக்ரம் , எஸ் ஜே சூர்யா, சுராஜ், துஷாரா இசை - ஜி வி பிரகாஷ் குமார் தயாரிப்பு - ரியா ஷிபு-  ஹெச் ஆர் பிக்சர்ஸ் தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கும் சீயான் விக்ரமுக்கு நிம்மதி தரும் வகையில், ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்தாக வந்துள்ளது வீர தீர சூரன். சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அருண் குமார் விக்ரமை இயக்குகிறார் என்றவுடனே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு விருந்து வைத்துள்ளது படக்குழு! வழக்கமாக முதல் பாகம் வெளியான பின்னரே இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால், வீர தீர சூரனை பொறுத்தவரை புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இதனாலேயே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை காரணமாக…
Read More
திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!

  'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது. இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'பண்டிட் குயின்' படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா. 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடத்தப்பட்டேன். காளியின் சாராம்சமே கடும் தியாகங்கள் தான். படக்குழுவினரும்…
Read More
“படையாண்ட மாவீரா” பாடல் எழுதிய வைரமுத்து !!

“படையாண்ட மாவீரா” பாடல் எழுதிய வைரமுத்து !!

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பின் நெருப்பு தகிக்கும் ஐந்தாவது பாடலை இயக்குநர் வ.கௌதமனிடம் தந்ததோடு அப்பாடலைப் பற்றி ஆகப் பெரும் நெகிழ்வோடு தனது எக்ஸ் தளப் பதிவில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். கௌதமன் இயக்கும் புரட்சிப் படம் படையாண்ட மாவீரா அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறேன் ஒவ்வொரு பாடலையும் வந்து வாங்கிச் செல்வார்; வாசித்து வழங்கச் சொல்வார் இந்தப் பாடலை வாசிக்கும் பொழுது குளமான கண்களோடு கும்பிட்டுக்கொண்டே எழுந்தார் அவர் கைகளில் பாட்டுத்தாளை ஒப்படைத்தேன் நல்ல ரசிகனுக்கு நல்ல பாடல் அமையும் இசை: ஜி.வி.பிரகாஷ் பல்லவி:…
Read More
சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!

சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.. இந்நிகழ்வினில்… நடிகர் டோவினோ தாமஸ் பேசியதாவது… இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை, இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், பிரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட் மிகப்பெரிது. இந்தப்படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். மலையாள சினிமாவில் இது முக்கியமான படம்,…
Read More
’டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

’டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

  எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில், "தமிழ் சினிமாவில் திறமையான கதைகள் பல வெளியாகி இருக்கிறது. இதில் 'டெஸ்ட்' திரைப்படமும் ஒன்று. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா கதை குடும்பம், முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசும். இயக்குநர் சஷிகாந்த் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என திறமையான நடிகர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இந்த வருடம் எங்களுடைய முதல் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் 'டெஸ்ட்'. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்" என்றார். நடிகர் மாதவன், “ஒரு கதாபாத்திரம் எடுத்து வந்தால் நல்லவராக இருந்தாலும் சரி வில்லனாக…
Read More
வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ கேரளா ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு

வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ கேரளா ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீர தீர சூரன் - பார்ட் 2' வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் - மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரூவைத் தொடர்ந்து நேற்று திருவனந்தபுரத்தில் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் சீயான்…
Read More