சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு !!

சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு !!

  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதில் சிலம்பரசன் TR கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை…
Read More
ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!

ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!

நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளைத் தரும் அனுபவத்தை வழங்க உள்ளனர். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான “தாம் தூம்”, அந்நேரத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளில் முழுமையாக படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடியான சண்டை காட்சிகள்,…
Read More
கே டி: தி டெவில் – K D : The Devil ” படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ” பாடல் !!

கே டி: தி டெவில் – K D : The Devil ” படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ” பாடல் !!

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் 'கே டி : தி டெவில் - K D : The Devil ' திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கே வி என் புரொடக்ஷன்ஸ் - KVN Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌ விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் 'திற நீ எந்தன் தரணி திற நீ - Thira Nee Enthan…
Read More
“காட்டான்” டிரெய்லர்  வெளியானது !!

“காட்டான்” டிரெய்லர் வெளியானது !!

ஜியோஹாட்ஸ்டார் வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் " முத்து என்கிற காட்டான் " வெப் சீரிஸின் சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் கதைநடையை மேலும் விரிவாக்குகிறது. இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில் காட்டப்படும் டிரெய்லர் வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது . முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படத் தொடங்குகின்றன. நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக…
Read More
“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு !!

“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு !!

  பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்', 'விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.'யூத்' திரைப்படத்தை முதல் பாடலான 'முட்ட கலக்கி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'பறந்தனே பெண்ணே' பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான 'ஆச புள்ள' வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் திரைப்பட முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள்…
Read More
“சிறை” திரைப்பட வெற்றிவிழா !!

“சிறை” திரைப்பட வெற்றிவிழா !!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது. படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும்…
Read More
“மேட் இன் கொரியா” – உணர்வுகளும் கனவுகளும் கலந்த ஓடிடி பயணம் !

“மேட் இன் கொரியா” – உணர்வுகளும் கனவுகளும் கலந்த ஓடிடி பயணம் !

  ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா கார்த்திக் இயக்கத்தில், நடிகை ப்ரியங்கா மோகன் நடித்துள்ள படம் "மேட் இன் கொரியா". இந்தியா–கொரியா கலாச்சார பின்னணியில் உருவான இந்த திரைப்படம் நேரடியாக Netflix ஓடிடி தளத்தில் 12 மார்ச் 2026 அன்று வெளியானது. கதை என்ன? தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் வாழும் சென்பா என்ற இளம்பெண்ணுக்கு சிறு வயதிலிருந்தே கொரியா செல்ல வேண்டும் என்ற கனவு உள்ளது. வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வி மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக அவள் இறுதியில் கொரியாவுக்கு செல்கிறாள். ஆனால் அவள் நினைத்தது போல அந்த பயணம் இனிமையாக இல்லை. மொழி, கலாச்சாரம், உணவு, தனிமை போன்ற பல சவால்களை எதிர்கொண்டு, ஒரு வெளிநாட்டு நாட்டில் அவள் எப்படி தன்னை நிலைநிறுத்துகிறாள் என்பதே இந்த படத்தின் மையக்கதை. இயக்கம் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் இருந்த ஃபீல்-குட் பாணியை போலவே, இந்த படத்திலும்…
Read More
‘தாய் கிழவி’  திரைப்படத்தின்  வெற்றிவிழா  நிகழ்வு!

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பின்பு, ரிலீஸ் ஆனதும் முதல் நாள் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது 480 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புக் மை ஷோவில்…
Read More
காதல் ரீசெட் ரிப்பீட் (Kadhal Reset Repeat) திரை விமர்சனம் !

காதல் ரீசெட் ரிப்பீட் (Kadhal Reset Repeat) திரை விமர்சனம் !

  இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகியுள்ள 'காதல் ரீசெட் ரிப்பீட்' திரைப்படம், ஒரு மாறுபட்ட பின்னணியில் அமைந்த முக்கோண காதல் கதையாகும். கதைக்களம்: நாயகன் மதும்கேஷ், ஜியா சங்கரை ஒருதலையாகக் காதலிப்பவர். ஆனால், ஜியா சங்கரோ அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இடையில் ஏற்படும் ஒரு விபத்தால் ஜியா சங்கருக்கு ஒரு விசித்திரமான ஞாபகமறதி நோய் ஏற்படுகிறது (Short-term memory loss). ஒவ்வொரு முறை தூங்கி எழும்போதும், முந்தைய நாள் நடந்த நிகழ்வுகள் அவருக்கு மறந்து போய்விடுகிறது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கி, மதும்கேஷ் தன்னை ஜியாவின் காதலனாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இறுதியில் உண்மை தெரிந்ததா? ஜியா யாரை கரம்பிடித்தார்? என்பதே மீதிக்கதை. நடிப்பு: ஜியா சங்கர்: படத்திற்கு மிகப் பெரிய பலம் நாயகி ஜியா சங்கர் தான். அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் கவர்கிறார். குறிப்பாக, ஞாபகமறதியால் தவிக்கும் இடங்களிலும், குழப்பமான மனநிலையை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் கியூட்டாக…
Read More
“பேட்ரியாட்” படத்திலிருந்து,  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா   சிறப்பு கேரக்டர் போஸ்டர் !!

“பேட்ரியாட்” படத்திலிருந்து,  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா   சிறப்பு கேரக்டர் போஸ்டர் !!

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர்  திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. இதில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கோலோச்சி வரும் நயன்தாராவின்  கேரக்டர் போஸ்டர் மகளிர் தினத்தில் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் மம்முட்டி,…
Read More