உலக நாயகன் கமல் எண்ட்ரி ஆன ’களத்தூர் கண்ணம்மா’!

உலக நாயகன் கமல் எண்ட்ரி ஆன ’களத்தூர் கண்ணம்மா’!

உலக நாயகன் என்று வர்ணிக்கப்படும் கமல்ஹாசனை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய படம் ஏ.வி.எம்மின் "களத்தூர் கண்ணம்மா'. சிறுவனாக இருந்த கமல் நடிக்கும் ஆர்வத்தில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அவருடைய மனதைக் கவர்ந்ததனால் "களத்தூர் கண்ணம்மா'வில் நடிக்கும் வாய்ப்பு கமலுக்குக் கிடைத்தது. முன்னதாக திரைப்படங்களை வாங்கி விநியோகித்த ஏ.வி.எம்.மின் பிள்ளைகள் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தடை கூறாது அனுமதி வழங்கினார்.அதற்கும் முன்னதாக பட்டுவும் கிட்டுவும் என்ற கதையைப் படித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நல்ல கதை. ஆனால் இப்போதைக்கு தன்னால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக ஜவார் சீதாராமனுக்கு தெரிவித்தார். படம் தயாரிப்பதற்கு தகப்பன் அனுமதி வழங்கிய பின்னர் கதையைத் தேடி அலைந்த சரவணனும் சகோதரர்களும் ஜவார் சீதாராமன் எழுதிய நல்ல கதை ஒன்று அப்பாவிடம் இருப்பதை அறிந்த பிள்ளைகள் அந்தக் கதையை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.…
Read More
தூத்துக்குடி ரெளடி கேரக்டரில் தயாராகும் ‘ரிச்சி’

தூத்துக்குடி ரெளடி கேரக்டரில் தயாராகும் ‘ரிச்சி’

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில்,  நிவின் பாலி - நட்ராஜ் சுப்ரமணியம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் இந்த 'ரிச்சி' படத்தில் பிரகாஷ் ராஜ்,  'யு டர்ன்' படப்புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ராஜ் பரத் மற்றும் 'சுட்டக்கதை' புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "இந்த 'ரிச்சி' படத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும்  நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும்  மையப்படுத்தி தான் எங்களின் 'ரிச்சி' படத்தின் கதை நகரும். பல எண்ணற்ற  யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிட்டுள்ளோம். 'ரிச்சி' என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். தமிழில்  முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கும் நிவின் பாலி,…
Read More
எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

  இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர். லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய ரசு கண்ணதாசனின் வசனங்களை படித்த…
Read More
ஆஸ்கர் விழாவை புறக்கணித்த ஈரான் நடிகை!

ஆஸ்கர் விழாவை புறக்கணித்த ஈரான் நடிகை!

சிரியா, சூடான், சோமாலியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் விரைவில் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக ஈரான் நாட்டின் பிரபல நடிகை அறிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஆஸ்கர்’ விருதுக்கு போட்டியிடுகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான படங்கள், நடிகர்-நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த பட்டியலில் ஈரான் நாட்டு தயாரிப்பான ‘தி சேல்ஸ் மேன்’ என்ற திரைப்படம் சிறந்த வெளிநாட்டு மொழி படம் என்ற…
Read More
தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணையுமாம்!

தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணையுமாம்!

தனுஷ் நடித்த ‘3‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.குறிப்பாக தனுஷ், அனிருத் கூட்டணி கொலவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தது. இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்றால் பாடல்கள் நிச்சயம் ஹிட் என்ற நிலை இருந்தது.. ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவுடன் சேர்ந்து அனிருத் இசையமைக்கும் பீப் பாடல் மூலம் அனிருத்துக்கும் தனுஷ்க்கும் இடயிலான பிரிவு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்து நடித்த கொடி, பவர் பாண்டி படம் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு ஷா ரோல்டன் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்து இவர்கள் பிரிவு நிரந்தரம் என்றே தகவல் பரவி வந்தது. இந்நிலையில், தாங்கள் பிரிந்தது தற்காலிகம்தான். நான் மீண்டும் தனுஷ் படத்துக்கு இசைய மைப்பேன் என்று அனிருத் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும்…
Read More
அட்லி இயக்கும் விஜய் -61 பட டீம் ஷூட்டிங்கிற்கு தயார்!

அட்லி இயக்கும் விஜய் -61 பட டீம் ஷூட்டிங்கிற்கு தயார்!

'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்காக அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.சத்யராஜை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். இதனிடையே இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் படத்தின் பெரும்பகுதியை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டு வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சமந்தா, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். எப்போதும் பொது, சினிமா விழாக்களுக்கு ஃப்ரெஷ்ஷாக தாடியில்லாமல் வந்து கொண்டிருந்த விஜய் சமீபகாலமாக தாடி வளர்த்து கொண்டு வருகிறார். அப்படி தாடியுன் விஜய் நடிக்கும் கேரக்டரை சஸ்பென்ஸாக மறைத்து செதுக்கி கொண்டு இருக்கிறார், அட்லீ. விஜய் தாடியுடன் நடிக்கும் அந்த காதாபாத்திரத்தின் ஜோடியாக, ஜோதிகா நடிக்க இருக்கிறார். விஜய்யுடன் படம் முழுக்க இணைந்து நடிக்கும் கேரக்டர் ரோலுக்கு…
Read More
எம்.ஜி.ஆர்-கிட்டே இருந்த ரியல் தாய் பாசம் – சிவகுமார் நினைவூட்டிய நிகழ்ச்சி

எம்.ஜி.ஆர்-கிட்டே இருந்த ரியல் தாய் பாசம் – சிவகுமார் நினைவூட்டிய நிகழ்ச்சி

டிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1965-ம் ஆண்டில் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். அதன்பின்னர், 'கந்தன் கருணை', 'உயர்ந்த மனிதன்' உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து இன்றளவும் . தமிழக திரைத்துறையில் நன் மதிப்புடன் இருப்பவர் சிவக்குமார். சூர்யா, கார்த்திக் என்ற இரண்டு நடிகர்களை வீட்டிலேயே வைத்திருப்பவர். சிறந்த பேச்சாளாரான அவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பேச்சு இது: ”உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய…
Read More
எம்.ஜி.ஆர் நடித்த “மலைக்கள்ளன்”  – ஒரு சுவையான பின்னணி!

எம்.ஜி.ஆர் நடித்த “மலைக்கள்ளன்” – ஒரு சுவையான பின்னணி!

”மலைக்கள்ளன்”, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். “பராசக்தி” வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. “மனோகரா” படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். “நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்” என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார். இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். “மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.…
Read More
’எப்படி இருந்த’ சினிமா  “இப்படி ஆயிடுச்சு!” – 1

’எப்படி இருந்த’ சினிமா “இப்படி ஆயிடுச்சு!” – 1

திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்பன ஒரு படத்தை உச்ச நிலைக்கு உயர்த்துகின்றன. ஆரம்பகால தமிழ்த்திரைப்படங்களைப் பாடல்களே ஆக்கிரமித்தன 85 சங்கீதங்கள் நிறைந்த படம் எனறே அறிமுகப்படுத்துவார்கள். ஹரிதாஸ், சிந்தாமணி போன்ற படங்களின் பாடல்களை அந்த காலத்து ரசிகர்கள் இன்றும் …கித்துப் பேசுவார்கள். பாடல்களுக்கிடையே ஒரு சில வசனங்கள் பேசப்படும் அன்பே, சுவாமி, கண்ணே, நாதா, ஆரமுதே, பிராணநாதா போன்ற சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப்படும் நாயகனும் நாயகியும் எட்ட நின்றே உரையாடுவார்கள். கையைப் பிடிப்பார்கள் கட்டிப்பிடிக்கமாட்டார்கள். 1935 ஆம் அண்டு வெளிவந்த மேனகா என்ற படம் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தெரிந்தது. முத்தம், கற்பழிப்பு என்பன இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியது. முத்தம் என்றதும் கன்னாபின்னாவென்று கற்பனை செய்ய வேண்டாம். கை, கன்னம் உச்சியென்பனவற்றிலே தான். நாயகன் முத்தமிட்டான் இப்படத்தைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாக…
Read More