பாகுபலி தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

பாகுபலி தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள். உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், 'பாகுபலி 2' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'வில் விடை தெரியவிருக்கிறது. தற்போது 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வந்தது. நேற்று (ஜனவரி 6) 'பாகுபலி - தி கன்க்ளூஷன்' படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்தது படக்குழு. 2012ம் ஆண்டு…
Read More
இந்திப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நிஜ அடி, உதை, தாக்குதல்!

இந்திப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நிஜ அடி, உதை, தாக்குதல்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஜெய்கர் கோட்டையில் பத்மாவதி என்ற இந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பினர் வரலாற்று புகழ் பெற்ற பத்மாவதிக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவரையும் குழுவினரையும் அவர்கள் தாக்கினர். ஏற்கனவே கேட்டுக்கொண்டோம் பத்மாவதி படத்தின் திரைக்கதை நகலை காட்டுவதற்கு சஞ்சய் லீலா பன்சாலி முன்வரவில்லை என்ற எதிர்ப்பாளர்கள் கூறினர். செட்டில் ஆர்பாட்டக்காரர்கள் புகுந்து உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியை பிடித்து இழுத்ததாகவும் ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன. பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'பத்மாவதி'. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும்.…
Read More
ஜாக்கிசான் சவாரி செஞ்ச சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்!

ஜாக்கிசான் சவாரி செஞ்ச சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்!

ஜாக்கிசான் நடித்து இதற்கு முன் வெளிவந்த ‘போலீஸ் ஸ்டோரி 3, 4, ரம்புள் இன் தி பாக்ஸ், தி மித்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்டானி டோங் ‘குங்பூ யோகா’ படத்தை இயக்குகிறார். சீன, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் தமிழில் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தின் பல முக்கியக் காட்சிகள் ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக இந்த வாரத் துவக்கத்தில் மும்பைக்கு வந்திருந்தார் ஜாக்கிசான். இந்தியாவிலும் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு, ஜாக்கி சான் படங்களுக்கென்று கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ‘கராத்தே கிட்’ படத்திற்குப் பிறகு வெளிவந்த ஜாக்கிசானின் படங்கள் இங்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்த குறையை ‘குங்பூ யோகா’ போக்குமா என்பது அடுத்த வாரம்…
Read More
ரஜினி + ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் 2.0 மார்ச வரை ஷூட்டிங்!

ரஜினி + ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் 2.0 மார்ச வரை ஷூட்டிங்!

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 350 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை மெருகேற்றும் விதமாக, அப்பணிகளுக்கு மேலும் 50 கோடியை ஒதுக்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம் படத்தின் பொருட்செலவு சுமார் 400 கோடிக்கு ஆகியிருக்கிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3டி தொழில்நுட்பக் கேமிராவில் படமாக்கப்பட்டுவருவதால், இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர். அதாவது, ஒரே காட்சியை இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனராம், அதன்பின்  இரண்டு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் தனித்தனியே கிராஃபிக்ஸ் செய்து காட்சியை உருவாக்கிவருகின்றனர். அதுபோல, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும்…
Read More
மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த இருக்கின்றது ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்

மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த இருக்கின்றது ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்

"மாணவன் நினைத்தால்  நடத்திக் காட்டுவான்..." என்ற பழமையான பாடலின் வரிகள், தற்போது இருக்கும் சூழ்நிலையை மிக அழகாக அனைவருக்கும் உணர்த்துகின்றது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து போராடி, அதில் வெற்றி கண்டிருப்பது, அவர்களின் ஒற்றுமையையும், பலத்தையும் தெளிவுபடுத்துகிறது. அத்தகைய வலிமையான  மாணவ சக்தியை  மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கின்றது, அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'ஒத்தைக்கு ஒத்த' திரைப்படம். 'அட்டக்கத்தி மற்றும் 'மெட்ராஸ்' படங்களில் பா ரஞ்சித்தின் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் 'ஒத்தைக்கு ஒத்த' படத்தை  'விஷன் ஐ மீடியா' சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார்.  பழம்பெரும் நடிகர் தியாகராஜன் மற்றும் 'அஞ்சாதே' நரேன் ஆகியோர் இந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த…
Read More
இயக்குநர் மணிரத்னத்தின் “காற்று வெளியிடை“ க்ளிம்ப்ஸ்!

இயக்குநர் மணிரத்னத்தின் “காற்று வெளியிடை“ க்ளிம்ப்ஸ்!

இயக்குநர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் 2016 ஜூலை மாதம் வெளியாகி அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. மேலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று வெளியாகிய காற்று வெளியிடை திரைப்படத்தின் 50நொடி காட்சி வீடியோவான “ காற்று வெளியிடை க்ளிப்ஸ் “ ரசிகர்கயிடையே மேலும் மிகப்பெரிய வரவேற்ப்பை உருவாக்கி உள்ளது. https://www.youtube.com/watch?v=h-9yyLpz2rE மனதை அள்ளும் வகையில் பனி படர்ந்த ரோட்டில் செல்லும் பேருந்து. வானிலிருந்து விழும் பணிகட்டிகளுக்கு இடையே அப்பேருந்தில் இருந்து தன்னுடைய முகத்தை அழகாக திருப்பி காட்டும் கதாநாயகி அதீதி ராவ் ஹைதாரி. அதே தருணத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் பின்னால் ஒலிக்கும் “ வான் வருவான் “ பாடல். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் மாயாஜால ஒளிப்பதிவில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த 50 நொடி காட்சியே “ காற்று வெளியிடை “ நமக்கு இந்த வருடத்தின் ஆக…
Read More
இதெல்லாம் படம் இல்ல பாஸ் பா…ட…ம்!

இதெல்லாம் படம் இல்ல பாஸ் பா…ட…ம்!

வெற்றியடைந்த படங்களை விட மிக மோசமாக தோல்வியடைந்த படங்கள் தான் நமக்கு பெரிய படிப்பினைகளை தரும் என்பார்கள் சினிமா ஜீனியஸ்கள். அப்படி நமக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நிறைய படிப்பினைகளை இந்த ஆண்டு வாரி வழங்கிய படங்கள் இவை.. சாகசம் பிரஷாந்தையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு நினைவுக்கே வருவதில்லை. ஆனாலும் அவர் நடித்த ஒரு படம் ஏகப்பட்ட பில்டப்களுடன் இந்த ஆண்டு வெளியானது. வெளியான பின்னர் தான் அது ஒரு ஹிட் அடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் என தெரிய வந்தது. அம்புட்டு ரகசியமா வெச்சிருந்தாங்களாம்… அந்த ஹிட் படம் எடுத்த டைரக்டர் மட்டும் இந்த ரீமேக்கை பார்த்திருந்தால் கண்ணீர் விட்டு அழுதிருப்பார். அந்த அளவுக்கு படத்தை நாசமாக்கி இருந்தார்கள். வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரிஜினல் படத்திலிருந்த சில காட்சிகளை அப்படியே வெட்டி இதில் சேர்த்தும் இருந்தார்கள். வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து காண்டாமிருகம் என்று பேர் வைத்த கதையை தன் மகனுக்கே செய்து அழகு பார்த்திருந்தார்…
Read More