Hotspot 2Much – சமூகத்தை சிந்திக்கத் தூண்டும் சினிமா முயற்சி !!

 

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வரும் Hotspot 2Much, ஒரு வித்தியாசமான ஆந்தாலஜி-பாணி முயற்சியாக தமிழ்த் திரையுலகில் வந்து சேர்ந்துள்ளது.

விக்னேஷ் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வந்த இந்தப்படத்தின் முதல் பாகம் நிறைய விவாதங்களைக் கிளப்பியது இப்போது மீண்டும் அதே போல், இம்முறையும் முயற்சி செய்துள்ளார்.

இது முழுக்க தொலைநோக்குப் படமாக அமைந்துள்ளது, இதில் மூன்று வெவ்வேறு கதைகள் மூலம் நமது சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகள்,  குடும்ப உறவுகள் மற்றும் எதிர்கால காதல், போன்ற விஷயங்களை , சில நேரங்களில் நகைச்சுவையாகவும், சில நேரங்களில் சிந்திக்க வைக்கும் விதமாக பிணைத்துக் காட்டுகிறது.

முதல் கதை  ரசிக மனநிலையின் தாக்கம் மற்றும் ரசிகர்கள் மோதல் போன்ற நிகழ்வுகளை மையப்படுத்தியுள்ளது. இரண்டாவது கதை குடும்பத்தில் மூத்தோர்–இளம் தலைமுறையினர் இடையே உள்ள புரிதல் வேறுபாடுகளை தனித்தன்மையாக எடுத்துக் காட்டுகிறது. மூன்றாவது கதை எதிர்கால காதல் மற்றும் சுவாரஸ்ய திருப்பத்துடன் வருகிறது.

பிரியா பவானி சங்கர், அஸ்வின் குமார், பவானி ஸ்ரீ, ரக்ஷன், தம்பி ராமைய்யா, எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஆதித்ய பாஸ்கர் போன்றோர் மூன்று கதாபாத்திரங்களில் பங்கு கொண்டு, கதை உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த படம் நேரடியாக ஏற்றுக்கொள்ளாத சமூகத்தின் உண்மை முகத்தை குறித்து சிந்திக்க வைக்கிறது. ரசிகர்கள் மோதல், குடும்பப் பிரச்சனை மற்றும் “வருங்கால பொறுப்புகள்” போன்ற சில காட்சிகள் சிந்தனைக்கு தூணாக நின்றாலும், சில நேரங்களில் நேரடியான கதாநாயகன் உரை (monologue) மற்றும் மிக நீண்ட உரையாடல்கள் பார்வையாளரை அயர்வடைய செய்து விடுகிறது.

சில இடங்களில் திரைக்கதையின் அமைப்பு மிகவும் கணிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

Hotspot 2Much சினிமா சமூக உணர்வை உள்வாங்கி அதை விவாதிக்க நினைக்கும் வகையில் அமைந்திருக்கும் இது ஒரு சிந்தனையை எழுப்பும் சமூக படம் என்ற எண்ணத்தை தருகிறது. சில நேரங்களில் சிந்தனையை தூண்டும் அதே நேரம் சில இடங்களில் அருவருப்பாகவும், சில தருணங்களில் மனதில் அழுத்தம் தருவதாகவும் இருக்கிறது.

இது ஒரு சாதாரண காமெடி-காதல் படம் அல்ல; சமூக அமைப்பு, கருத்தியல் சிக்கல்கள் மற்றும் எதிர்காலம் பற்றிய முயற்சி என பல பரிமாணங்களை ஒன்றாகக் கொண்டு போகிறது.

Hotspot 2Much என்பது சமூகத்தை சிந்திக்க வைக்கும் சரக்கு உள்ள படம்; மிகவும் வித்தியாசமான கதைகளை விரும்புவர் திரையரங்கில் அனுபவிக்கலாம்.