‘Granny’ – பாட்டி சிரித்தா பயம், நின்றா திகில்!

 

விஜயகுமாரன் இயக்கத்தில் வடிவுக்கரசி நடித்துள்ள ஹாரர் படம் க்ரானி.

‘க்ராணி’ திரைப்படம் ஒரு பக்கா ஹாரர்–த்ரில்லர் அனுபவமாக உருவாகியிருக்கிறது. இயக்குநர் விஜயகுமாரன் எளிய கதையை எடுத்துக்கொண்டு, அதில் மெல்ல மெல்ல திகிலை ஏற்றும் விதம் படத்தின் முதல் பெரிய பலம். கிராமத்தில் ஒரு குழந்தையின் மர்ம மரணம், அதே நேரத்தில் லண்டனிலிருந்து தங்கள் பூர்வீக வீட்டுக்கு வரும் ஒரு தம்பதியர் – இந்த இரண்டு கதையோடுகளும் இணையும் இடம்தான் படத்தின் உண்மையான பயங்கர புள்ளி. அந்த வீட்டில் மயக்க நிலையில் கிடக்கும் வயதான பாட்டி, அப்பாவியாகத் தோன்றினாலும், அவளுக்குள் மறைந்திருக்கும் ரகசியமே கதையை வேறொரு திசைக்கு இழுத்துச் செல்கிறது.

இந்தப் படத்தின் உயிர் வடிவுக்கரசி தான். வில்லி வேடத்தில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் பயத்தை உண்டாக்குகிறது. மேக்கப், உடல் மொழி, பார்வை – எல்லாமே ‘இது சும்மா பாட்டி இல்லை’ என்று நமக்கு உணர்த்துகிறது. அவருடன் திலீபன், சிங்கம்புலி, ஆனந்த் நாக் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சிங்கம்புலி சில இடங்களில் டென்ஷனை குறைக்காமல், அதையே இன்னும் அதிகமாக உணரச் செய்கிறார்கள்.

விசுவல்ஸ் மற்றும் லொகேஷன் படத்துக்கு பெரிய பிளஸ். உண்மையான வீட்டில் படமாக்கப்பட்டதால், அந்த இடத்தின் அமைதியே ஒரு பயத்தை உருவாக்குகிறது. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் திகிலை மெதுவாக ஏற்றுகிறது. ஜம்ப் ஸ்கேர் மட்டுமல்ல, மனதுக்குள் ஊடுருவும் பயத்தையும் படம் கொடுக்க முயற்சி செய்கிறது.

படத்தின் ஒன்லைன் என எல்லாம் ஒகே ஆனால் திரைக்கதையில் பெரிதாக கோட்டை விட்டிருக்கிறார்கள். கேமராவும் பாதி காட்சிகளை இருட்டாக காட்டுவது துயரம்

மொத்தத்தில், ‘Granny’ ஒரு சிம்பிள் கதையை எடுத்துக்கொண்டு, சரியான நடிப்பு மற்றும் சூழல் மூலம் ஒரு சாலிட் ஹாரர் த்ரில்லராக சொல்ல முயற் சித்துள்ள படம். குறிப்பாக வடிவுக்கரசியின் நடிப்பு மட்டும் சிறப்பு. ஹாரர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம் 👻🔥