25
Dec
Lovely World Entertainment தயாரிப்பில், தமிழில் புதுமையான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது “உன் பார்வையில்” திரைப்படம். நடிகை பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, இயக்குநர் கபீர்லால் இயக்கியுள்ளார். நடிகர் வெங்கட் ராமன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன்நெக்ஸ்ட் தளத்தில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. சரி வாருங்கள் படம் எப்படி என்று பார்க்கலாம். கண் பார்வையற்ற நாயகி, திடீரென கொல்லப்பட்ட தன் தங்கையின் தற்கொலை மரணத்திற்கு உண்மையான காரணம் யார் என தேட ஆரம்பிக்கிறாள். ஆனால் அந்த தேடலில் நிறைய மர்மங்கள் வெளி வர ஆரம்பிக்கிறது. அவளை ஒருவன் பின் தொடர ஆரம்பிக்கிறான். அவளின் தங்கையை கொலை செய்தது யார்? அவளை பின் தொடர்ந்தவன் யார்? என்பதே இப்படத்தின் கதை. 2010ல் வெளியான Julia’s Eyes எனும் ஸ்பானிஷ் படத்தை மையமாக வைத்து, இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.…
