சர்ப்ரைஸ் எண்ட்ரியாக வந்து அனைவரையும் அசத்திய படம் தான் சிசு. இரண்டாம் உலகப்போர் சமயத்தில், எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளும் ஒரு தாத்தா தான் முதல் பாகத்தின் கதைக்களம்.
ஜான் விக் போல் ஒரு வயதான தாத்தா இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் இதன் மைய ஐடியா.
சிசு படத்தின் இரண்டாம் பாகம் Sisu: Road to Revenge எப்படி இருக்கிறது?
சிசு என்றால் அழிக்கவே முடியாதவன் என்ற வாய்ஸ் ஓவரில் படம் தொடங்க, ஹீரோ சோவித் யூனியனில் உள்ள தன் வீட்டை தேடி வந்து அங்கு தன் வீட்டை பிரித்து தன் வண்டியில் ஏற்றி பின்லாண்ட் நாட்டிற்கு செல்கிறார்.
அதோடு தன் மனைவி, மகன்களை அங்கிருப்பவர்கள் கொன்றிருப்பார்கள், அந்த கோபத்துடன் பின்லாண்ட் திரும்பும் போது சோவித் யூனியன் ஆட்கள் பின் தொடர்கின்றனர்.
அவன் பின்லாண்ட் போக கூடாது தடுத்து நிறுத்த வேண்டும் என கார், பைக், ப்ளைட் என துரத்த இதிலிருந்து எல்லாம் நாயகன் எப்படி மீண்டார் என்பதன் ஆக்ஷன் அதிரடி தான் இந்த சிசு.
சிசு முதல் பாகம் பார்த்து எதிர்பார்த்திருந்தீர்கள் என்றால், இந்த இரண்டாம் பாகத்தை தாரளமாக பார்க்கலாம்.

இந்தக்கதையில் லாஜிக்கையெல்லாம் தூக்கி வைத்து விட்டு, ஆக்சனை கொண்டாடுங்கள் என படமெடுத்துள்ளார்கள்.
சொல்லப்போனால் லாஜிக்கையெல்லாம் தூக்கி ஏரோபிளேனில் வீசி, ஏரோபிளேனையே லாரியில் இடித்து வீசுகிறார்கள்.
படம் ஆரம்பித்து, குவண்டின் டிராண்டினோ பாணியில், 6 பாகங்களாக பிரித்து கதை சொல்கிறார்கள்.
ஒரு ஆக்ஷன், படம் முழுவதும் வித்தியாச வித்தியாசமாக எப்படி கொல்வது, உடல்கள் சிதறுவது 200 லிட்டர் இரத்தத்தை கொட்டுவது என இயக்குனர் இதற்காகவே கற்பனை குதிரையை பறக்கவிட்டுள்ளார்.
6 ஆக்சன் சீக்குவென்ஸ் அனைத்தும் அதிரடி தான், டிரக் சேஸ், மோட்டார் பைக் சேஸ், ஏரோபிளான் சேஸ், பீரங்கி ஆக்சன், டிரெய்ன் சேஸ், ராக்கெட் ஆக்சன் அவ்வளவு தான் படம். திகட்ட திகட்ட ஆக்சனை அள்ளி விருந்து படைத்துள்ளார்கள்.
தாத்தாவை சாகாவரம் பெற்ற சூப்பர் ஹீரோவாக்கி விட்டார்கள். என்ன அடித்தாலும் சாக மாட்டேன் என்கிறார். ஆனால் ஆக்சனில் பின்னுகிறார். Don’t Breath தாத்தா வில்லனாக வருகிறார்.
எந்த யோசனையும் இல்லாமல் ஒரு ஆக்சன் படம் பார்க்க விரும்பினால் தாரளமாக
ஜாலியாக பார்த்து விட்டு வரலாம்.❤️
