தூரிகையால் ஓவியத்தை அழகாக வரைவது என்பது ஒருபக்கம். அப்படி வரையும் ஓவியரே அழகானவராக இருந்தால்…? அப்படியொரு அழகுடன் இருந்ததால், உடனிருந்த ட்ரண்ட்ஸ் ‘நடிகனாகலாமே…’ என்று சீரியஸா சொன்னாய்ங்க. அப்ப ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது கைவந்த கலையாகிபுடுச்சுது. கூடவே, நடிப்பின் மீதும் லப் பத்திக்கிச்சு. முன்னரே கோவையில் இருந்து மெட்ராஸூக்கு வந்தவர், கோடம்பாக்கத்துக்குள் நுழைஞ்சு வாய்ப்புகளைத் தேடினார். ’நம்மைக் காக்கவும் கரம் இருக்கும்; கைதூக்கிவிடும்’ அப்படீன்னு நம்பிக்கை கொண்டிருந்தார். அப்படி நம்பியகரை புகழ்மிக்க ஏவி.எம் நிறுவனம் கைகொடுத்து, கைகுலுக்கி வரவேற்று ‘காக்கும் கரங்கள்’ (1965) படத்தில் அறிமுகப்படுத்திச்சு. அந்தப் படத்தில் நடிக்கும்போது எப்படியிருந்தாரோ அப்படியேதான் இன்னிக்கும் இருக்கிறார் என்று பார்த்தவய்ங்க சொல்லிபுடுவாய்ங்க. அதனால்தான் அவரை ‘மார்க்கண்டேயன்’ என்று எல்லோருமே சொல்றாய்ங்க.
சிவகுமாரின் 24-வது வயசில் மொத சினிமா வாய்ப்பு கிடைச்சுது. அந்த கா. க.வில் பாத்துப்புட்டு ’அட்டேபையன் ரொம்ப லட்சணமா இருக்கானே…’ -நு சொல்லி அடுத்த ஆண்டே டைரக்டர் ஏ.பி.நாகராஜன் ‘சரஸ்வதி சபதம்’ படத்திலும் அதற்கு அடுத்த ஆண்டில் ‘கந்தன் கருணை’ படத்தில் கந்தக் கடவுளாகவும் சிவகுமாரைப் பயன்படுத்திக்கிட்டார்.
இதை அடுத்து மீண்டும் ஏவி.எம் தயாரிப்பில் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் சிவாஜிக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. எவரின் சாயலும் இல்லாத நடிப்பும் வசனம் பேசுகிற பாணியும் எல்லோருக்கும் பிடிச்சிருந்ததால், அடுத்தடுத்த இயக்குநர்களும் சிவகுமாரைப் பயன்படுத்தினாய்ங்க..

அந்த வகையில் சிவாஜியுடன் நடிச்சார். எம்ஜிஆருடன் நடிச்சார். ஜெமினி கணேசனுடன் நடிச்சார். எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் நடிச்சார். முத்துராமன், ஏவி.எம்.ராஜன் என தொடர்ந்து பல படங்களில் நடிச்சார். கமலுடனும் ரஜினியுடனும் கூட பல படங்களில் நடிச்சார். ஆனால் அதில் கமல் இரண்டாவது ஹீரோவாகத்தான் இருப்பார். அதேபோல் ரஜினியும் செகண்ட் நாயகனாதான் நடிப்பார்
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘பட்டிக்காட்டு ராஜா’, ‘கவிக்குயில்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ அப்படீன்னு வரிசையாப் படங்கள் ஹிட்டடிச்சுக் கிட்டே இருந்துச்சு. நடிக்கத் தொடங்கிய 14-வது ஆண்டில் அதாவது 1979ம் வருடம், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ அப்படீங்கற படத்தில் அற்புதமாக நடிச்சு மிகப்பெரிய பேரையும் புகழையும் பெற்று ஜொலிச்சார். அதுதான் இவரோட 100-வது படம். சிவகுமாருக்கு இந்தப் படம் இன்னொரு சாதனையாகவும் சினிமா சரித்திரத்தில் இடம் பிடிச்சுபுடுச்சு.
எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி முதலான பல ஹீரோக்களின் 100-வது படங்கள், ஞாபகத்தில் இருந்தாலும் அவை எதிர்பார்த்த வெற்றியையோ வசூலையோ குவிக்கலை. ஆனால் முதன்முதலாக சிவகுமாரின் 100-வது படம் மிகப்பெரிய ஹிட் அடிச்சுது. சிறந்த நடிகர் எனும் ஃபிலிம்பேர் விருதும் கிடைச்சுது. பல விருதுகளும் பதக்கங்களும் பெற்றார்.
பஞ்சு அருணாசலம் ப்ரதர் புரொடக்ஷனில் இளையராஜா அறிமுகமான ‘அன்னக்கிளி’ படத்தின் நாயகனும் இவர்தான். ஆக இளையராஜாவின் முதல் பட ஹீரோ எனும் பெருமையும் இவருக்கு உண்டு. அதேபோல இளையராஜாவும் வாலியும் இணைந்த முதல் படமான ‘பத்ரகாளி’ படத்தின் ஹீரோவும்ம் இவர்தான்!ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி, சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, லட்சுமி, சுமித்ரா, சரிதா, ராதா, அம்பிகா அப்படீன்னு வலம் வந்து நதியா வரைக்கும் ஜோடி போட்டார் சிவகுமார். ஓவியரா, பாடகரா, போலீஸ் அதிகாரியா, கைதியா, எழுத்தாளரா அப்படீன்னு இவர் நடிச்ச ஒவ்வொரு கேரக்டரிலும் அதன் தன்மை கெட்டுவிடாம, ரொம்ப கேஷூவலாத் தன்னைப் பொருத்திக்கொள்வதுதான் சிவகுமாரின் ஸ்டைல்.
இடையிலே ஆர்.சுந்தர்ராஜனின் ‘நான் பாடும் பாடல்’ படத்தில் சி.ஆர்.எஸ் எனும் ரைட்டர் ரோலில், அட்டகாசம் பண்ணியிருப்பார். அதேபோல, ’அக்னிசாட்சி’ படத்தில் கே.பாலசந்தர், சிவகுமாருக்கும் சரிதாவுக்கும் மிகச்சிறந்த கேரக்டரை வழங்கினார். இருவரும் போட்டி போட்டுக்கிட்டு நடிச்சிருப்பாய்ங்க. ‘கனாக்காணும் கண்கள் மெல்ல…’ பாடல் இன்றைக்கும் நம் மனசுக்கு நெருக்கமான பாடல்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு, கே.பாலசந்தர் மீண்டும் சிவகுமாரை அழைச்சு சிந்து பைரவியில் ஜே.கே.பி எனும் கர்நாடக சங்கீதப் பாடகரின் கதாபாத்திரத்தை வழங்கினார். சுஹாசினி, சுலக்ஷணா முதலானோர் நடித்த இந்தப் படத்தில், ஒரு வித்வானாகவே வாழ்ந்திருப்பார் சிவகுமார். சிவகுமாரின் ‘லைஃப் டைம்’ பாத்திரங்களில் இந்தப் படமும் முக்கியமான படமாக அமைஞ்ச்சுது. அதேபோல் இன்னொரு பெருமையும் இந்தப் படத்தால் சிவகுமாருக்குக் கிடைச்சுது. இளையராஜாவின் முதல்படம், இளையராஜாவும் வாலியும் இணைந்த முதல் படம் என்பதிலெல்லாம் சிவகுமார் நாயகன் என்பது போல், பாலசந்தரும் இளையராஜாவும் முதன்முதலாக இணைஞ்ச ‘சிந்துபைரவி’ படத்திலும் சிவகுமார் நாயகன் என்பது லவ்லி மேஜிக்தான்
எர்லி மார்னிங் விழிப்பது,தியானத்திலும் யோகாவிலும் ஈடுபடுவது, எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதது, ஓழுக்கத்துடனும் நேர்மையுடனும் எதையும் அணுகுவது, கம்பராமாயணம் முதல் கலைஞரின் வசனங்கள் வரை அப்படியே மேடையில் பேசி கைதட்டல்களை அள்ளுவது, மிதமான உணவுகளை எடுத்துக்கொள்வது, எல்லோருடனும் இனிமையாகவும் நட்புடனும் பழகுவது… அப்படீன்னு சிவகுமாரின் வாழ்வியல், எல்லா நடிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மனிதர்களுக்குமான பாடம் புகட்டும் மார்க்கேண்டயன் நூறாண்டை தாண்டியும் மனம்/ உடல் நலத்துடன் வாழ ஆந்தை குழுமம் வேண்டி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிச்சுக் கொள்வதில் பெருமகிழ்ச்சி
