சகலகலா வல்லபன் – நூல் வெளியீட்டு விழா!

சகலகலா வல்லபன் – நூல் வெளியீட்டு விழா!

பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா நேற்றுமாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். இந்நூலை அருள்செல்வன் தொகுத்துள்ளார். இவ் விழாவில் நூலை வெளியிட்டு நடிகர் சிவகுமார் பேசும் போது, “திருத்துறைப்பூண்டியில் ஒரு அம்மா இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறேழு வயதில் ஒரு பையன் இருந்தான். பள்ளிக்கூடம் போகிற பையனுக்கு 4 இட்லி வைத்துவிட்டு குளிக்கப் போனாள் தாய். அப்போது அந்த பையன் இட்லி துணியை தூக்கி மேலும் 2 இட்லியை எடுத்துச் சாப்பிட்டு விட்டான். கூடவே சித்தியும் இருந்தாள். குளித்து விட்டு வந்த போது சித்தி சொன்னாள் ” நீயில்லாத போது உன் பையன் 2 இட்லியைத் திருடி விட்டான்.” என்று. அப்போது ”. அவனுக்காகத்தானே நானே இந்தத் தொழிலைச் செய்கிறேன் ?”…
Read More
எனது இளமையின் ரகசியம் என்ன தெரியுமா? – சிவகுமார் ஓப்பன் டாக்!

எனது இளமையின் ரகசியம் என்ன தெரியுமா? – சிவகுமார் ஓப்பன் டாக்!

என்றும் மாறா இளமையான தோற்றதுக்குச் சொந்தக்காரர் பன்முகக் கலைஞர், நடிகர் சிவகுமார். 75 வயதை நிறைவு செய்திருக்கும் அவரிடம் ‘உங்கள் இளமையின் ரகசியத்தைப் பகிர முடியுமா’ என்றதும் உற்சாகத்துடன் கொட்ட ஆரம்பித்துவிட்டார். “கோவை மாவட்டத்தில் மிகச் சிறிய குக்கிராமத்தில் பிறந்தேன். நான் பிறந்த பத்தாவது மாதத்தில் என் அப்பா இறந்துவிட்டார். அப்பா விட்டுச் சென்றிருந்த 8 ஏக்கர் மானாவாரி நிலத்தில் பாடுபடுவதற்காக மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் அக்காவைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார் அம்மா. ஒரு பவுன் 12 ரூபாய்க்கு விற்ற அந்தக் காலத்தில், கழனியில் அரும்பாடுபட்டு உழைத்துக் கிடைத்த பணத்தில் என் அம்மா என்னைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்து ஆளாக்கிச் சென்னைக்கு அனுப்பினார். சென்னை வந்து நான் ஓவியனாகவும் பின்னர் திரையுலகில் ஒழுக்கமும் கடமையும் தவறாத நடிகனாக உயர முடிந்தது என்றால் அதில் என் தாய், சகோதரியின் தியாகத்துக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு என் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையதாக…
Read More