மலையாள சினிமா எப்போதுமே புதுமையான கதைகளைத் தேர்ந்தெடுத்து உலகளவில் பேச வைக்கும் தன்மை கொண்டது. அந்த வரிசையில், டொம்னிக் அருண் இயக்கிய லோகா – சாப்டர் 1 ஒரு புதிய சூப்பர் ஹீரோ யுனிவர்ஸுக்கான முதலடியாக அமைந்துள்ளது. அதையும் அவர்கள் ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள்
கதை சுருக்கம்
பெங்களூருவில் நண்பர்களுடன் குடியிருக்கும் சன்னி (நஸ்லென்), எதிர் வீட்டு அழகியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். ஆனால் அந்த அழகி சந்திரா (கல்யாணி பிரியதர்ஷன்) ஒரு சாதாரண பெண் இல்லை, அமானுஷ்ய சக்திகள் கொண்டவர். அதற்கிடையில் நகரில் உடல் உறுப்புகளைத் திருடும் கும்பல் சண்டிராவைச் சுற்றி வளைத்துவிடுகிறது. யார் இவர்? என்ன சக்தி? ஏன் இங்கு வந்துள்ளார்? என்பதே படத்தின் சஸ்பென்ஸ்.
இயக்கம் & கதை சொல்லல்
இயக்குநர் டொம்னிக் அருண், “வாம்பயர்” மித்ஸை நம் நாட்டுத் தெய்வக் கதைகளோடு இணைத்து காட்டியிருப்பது ஒரு bold move. கதை, காமெடி–ரொமான்ஸ் mood-ல துவங்கினாலும், இடைவேளைக்கு பின் முழுக்க mass–mystery-ஆக மாறுகிறது.
ஆனால், இரண்டாம் பாதி அதிகமான திருப்பங்களோடு வந்திருக்கலாம். வில்லன் டிராக்கில் depth குறைவதால், conflict முழுமையாக satisfy செய்யவில்லை.
நடிப்பு
கல்யாணி பிரியதர்ஷன் – இந்தப் படம் அவருடையது தான். சக்தியை வெளிப்படுத்தும் காட்சிகளில் ஒரு “மாஸ் ஹீரோ” feel-ஐ தருகிறார். அதே சமயம் mystery & grace-ஐ maintain செய்திருக்கிறார்.
நஸ்லென் – காதல், நகைச்சுவை, அச்சம் – மூன்றையும் mix செய்து சின்ன சின்ன சிரிப்புகளைக் கொடுத்திருக்கிறார்.
சாண்டி மாஸ்டர் – வில்லனாக impress செய்தாலும், கதையின் வலிமையை உயர்த்தும் அளவுக்கு எழுதப்படவில்லை.
Side characters & கேமியோ – திரையரங்கில் கைதட்ட வைக்கின்றன, ஆனால் கதையில் பெரிய தாக்கம் இல்லை.
தொழில்நுட்பம்
ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி : காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்கின்றன.
இசை – ஜேக்ஸ் பிஜோய் : பின்னணி இசை சஸ்பென்ட் மூடை ஆழமாக வெளிப்படுத்துகிறது. சில இடங்களில் கூஸ்பம்ஸ் தருகிறது.
எடிட்டிங் – சாமன் சாக்கோ : திரைக்கதை தோற்கும் தருணங்களை அழகாக சரி செய்திருக்கிறார்.
ஸ்டண்ட்ஸ் : ஹாலிவுட் தரத்தில் வடிவமைக்கப்பட்ட ஆக்சன் காட்சிகள் – மலையாள பட்ஜெட்டுக்கு ஆச்சரியம் தரும் அளவு.
பலம் (Claps)
✅ புதுமையான கதை & சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் தொடக்கம்
✅ இடைவேளை highpoint
✅ கல்யாணி – One Woman Show
✅ BGM, Cinematography, Action sequences
பலவீனம் (Flops)
❌ வில்லன் கதாபாத்திரத்தில் பலம் குறைவு
❌ இரண்டாம் பாதி எதிர்பார்த்த ட்விஸ்ட் இல்லாமல் போனது
❌ சில கேமியோ காட்சிகள் “fan moment” க்காக மட்டும்
தீர்ப்பு
லோகா – சாப்டர் 1 மலையாள சினிமா தரும் இன்னொரு bold முயற்சி. சில குறைகள் இருந்தாலும், கல்யாணியின் performance + technical brilliance படத்தை ரசிக்க வைக்கிறது. தொடர்ச்சியில் கதையை இன்னும் கூர்மையாக்கினால், இது ஒரு Indian Superhero Universe-க்கு strong franchise ஆக மாறும் potential உள்ளது.
ரேட்டிங் : ⭐⭐⭐✨ (3.5/5) – “சந்திரா கவர்கிறார், இன்னும் வலுவாக வருவார்!”
