இயக்கம்: Unni Sivalingam
நடிகர்கள்: Shane Nigam, Shanthanu Bhagyaraj, Preethi Asrani, Selvaraghavan, Alphonse Puthren
தயாரிப்பு: STK Frames & Binu George Alexander Productions
ஷேனு நிகாம் சாந்தனு இணைந்து நடித்திருக்கும் படம் தான் இந்த பல்டி
“Balti” படம் கபடி விளையாட்டை பின்னணியாகக் கொண்டு, அதனுடன் நண்பர்களின் கனவுகள், கடன்கள், அவர்கள் செய்யும் குற்றச்சம்பவங்கள் என சாதிக்க துடிக்கும் இளைஞர் உலகத்திய வைத்து சொல்லப்பட்ட ஒரு திரில்லர் எமோஷனல் டிராமா.
கதையின் தொடக்கத்தில் கபடி போட்டிகள், நண்பர்களின் உறவுகள், அவர்களின் ஆசைகள் அனைத்தும் சுவாரஸ்யமாகவும், இயல்பாகவும் காட்சியளிக்கின்றன. ஆனால் கதையின் நடுப்பகுதியில் வன்முறை, கடன்காரர்கள், கும்பல் அரசியல் போன்றவை அதிக சொல்லப்படுவதால், கதை ஓட்டம் சீர்குலைகிறது. சில திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், பெரும்பாலானவை முன்பே யூகிக்கக்கூடியவையாகவே தெரிகின்றன. பலமுறை பார்த்த துரோகம் பழிவாங்கல் கதையை மீண்டும் பார்ப்பது போலவே இருக்கிறது
நடிகர்களில், ஷேன் நிகம் தனது கதாபாத்திரத்தில் நம்பிக்கை ஊட்டும் வகையில் நடித்திருக்கிறார். அவரது கபடி காட்சிகளும், உணர்ச்சிகரமான தருணங்களும் நன்றாக திரையில் வெளிப்பட்டுள்ளது . சாந்தனு மாறுபட்ட நடிப்பை வழங்கி தன் திறமையை நிரூபித்துள்ளார். ப்ரீதி அஸ்ரானிக்கு பெரிதாக ஸ்கிரீன் டைம் வழங்கப்படவில்லை; அவளது கதாபாத்திரம் நிறைவாக இல்லை. அதேசமயம், செல்வராகவன் மற்றும் ஆல்போன்ஸ் புத்திரென் தங்கள் வித்தியாசமான பாத்திரங்களால் படத்திற்கு பலம் சேர்க்கின்றனர்.
ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு இனிமையாக இருக்கிறது. இசை மற்றும் பின்னணி இசை படத்தை தாங்கிப்பிடிக்கிறது, சாய் அபயங்கர் பாஸ் செய்துள்ளார். குறிப்பாக சில அதிரடி காட்சிகளில் இசை விறுவிறுப்பை கூட்டுகிறது. ஆனால் எடிட்டிங் சீரான ஓட்டத்தில் இல்லாததால், கதையில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில், “Balti” கபடி விளையாட்டு, நண்பர்களின் பயணம், சமூக பிரச்சினைகள் ஆகியவற்றை ஒன்றாக இணைத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் ஆனால் கதை சொல்லும் விதத்தில் புதுமை குறைந்ததால், படம் முழுமையாக ஈர்க்க முடியவில்லை. மலையாளப்படமா தமிழ்ப்படமா எனும் சந்தேகம் வருகிறது. பெரிதாக ஈர்க்காத எமோஷனல் டிராமா
மதிப்பீடு: ⭐⭐⭐ (3/5)