கூலி Biggest Disappointment எல்லாம் இல்லை !!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம்.
இந்தப்படம் மீது நிறைய நெகடிவ் விமர்சனம் வருமென்பது முன்பே தெரியும். படம் வருவதற்கு முன்பே அதை எழுதியிருந்தேன். அது ஒரு உளவியல்.
மார்க்கெட்டிங் எல்லாம் இல்லாமலே, தானாகவே படத்தின் மீது, மிகப்பெரிய ஹைப் கிரியேட் ஆனது. அதற்கு காரணம், ரஜினி லோகேஷ் கூட்டணி.
இப்படி ஓவர் ஹைப் ஆகும் படங்களுக்கு இருக்கும் பிரச்சனை தான் இது. இது ரஜினியின் சராசரியான கமர்ஷியல் படத்தை விட நன்றாகவே இருக்கிறது, ஆனால் மக்கள் ஏமாந்தது இந்தக் கூட்டணியிடம் அதீதமாக எதிர்பார்த்தது தான்.
சயின்ஸ் பிக்சன், LCU, கேமியோ, என அவர்கள் ஏதோதோ எதிர்பார்க்க…, எதுவுமில்லாமல் சப்புனு சராசரியாக இருக்கும் படம், அதன் திருப்பங்களோடு இருந்தாலும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்காக இது மோசமான படம் இல்லை. ஆனால் சூப்பர் படமும் இல்லை. இது தான் நிஜம்.
படத்தில் எக்கச்சக்க பிரச்சனை இருக்கிறது. அதைத்தாண்டி நல்ல விசயங்களும் இருக்கிறது.
முக்கியமாக ரஜினி ஒரு காட்சியில் கூட அவரை எந்தக்குறையும், அவரைப்பார்த்துக்கொண்டே இருக்கலாம் என சொல்லும்படி அத்தனை ஃபிரஷ்ஷாக இருக்கிறார். பஞ்ச், ஸ்டைல் என அவரின் ஈர்ப்பு அப்படியே இருக்கிறது. அவருக்கும் ஸ்ருதிஹாசனுக்குமான காட்சிகள் அத்தனை எமோசனாக ஒர்க்கவுட்டும் ஆகிறது. ஆனால் அது அவர்கள் நடிப்பில் தான் அதைத்தாண்டி அதில் இருக்கும் லாஜிக் மிஸ்டேக்கால் அது நம்மை முழுதாக பாதிக்கவில்லை.
ஸ்ருதிஹாசன் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்களில் முழுமையாக நடிக்க தெரியும் என நிரூபித்திருக்கிறார். பணம் பற்றி ரஜினியிடம் பேசும்போதும், ஷௌபினிடம் மாட்டிக்கொள்ளும் போதும் அவர் போல எக்ஸ்பிரசன்களில் அத்தனை முதிர்ச்சி.
அவரைத்தவிர படத்தில் சௌபின் ஷாஹிர் ரஜினி கேரக்டருக்கு கூட இல்லாத முழுமையான ஆர்க் அவர் கேரக்டருக்கு இருக்கிறது. அது படத்தில் அவர் நடிப்புக்கு உதவி விட்டது.
நாகர்ஜினா சில காட்சிகளில் ஈர்க்கிறார் சில காட்சிகளில் சோதிக்கிறார். சத்யராஜை மிரட்டும் காட்சி அப்படித்தான் இருந்தது அதில் எந்த அழுத்தமும் இல்லை. உண்மையில் நடிப்பு நன்றாக இருக்கிறது ஆனால் அதை நியாயப்படுத்தும் அளவு காட்சிகளில் அழுத்தம் இல்லாததும் கேரக்டர் ஆர்க்கே மோசமாக இருப்பதும் தான் மைனஸ் ஆக்கிவிட்டது.
சத்யராஜ் ஏதோ கடமைக்கே என நடித்து தந்திருக்கிறார். அவர் கேரக்டரும் அவ்வளவு வீக்.
ஆனால் எல்லாத்தையும் முழுப்படமும் பார்க்கும் படி ஒரு ஃப்ரெஷ்ஷான மேக்கிங் இருக்கிறது, ஒரு பிரச்சனை அது முடியும் போது அடுத்த பிரச்சனை என திரைகதை ஒரு சேஸிங் போல ஓடிக்கொண்டே இருக்கிறது.. அது இன்னும் நாலைந்து நாள் கழித்து பார்க்கும் ஆடியன்ஸுக்கு ஒர்க்கவுட் ஆகலாம்.
ஆனால் படத்தில் அது மட்டும் போதவில்லை என்பது தான் பிரச்சனை
சத்யராஜ் கொலையை விசாரிக்க வரும் ரஜினி அதைக் கண்டுபிடித்து பழி வாங்கினாரா? இல்லையா? என்பது தான் ஒன்லைன். இதிலிருக்கும் பிரச்சனை டிரெய்லரில் சொன்னதை தவிர இதில் ரசிகர்கள் எதிர்பார்த்த எந்த சர்ப்ரைஸும் இல்லை.
சர்ப்ரைஸ் என படக்குழு சௌபின் சாஹிர் போர்ஷனையுன் அமீர்கான் கேமியோவையும் நம்பியிருந்தால் அது படு மோசமாக பல்லிளிக்கிறது.
அந்த ஒன்லைனை அப்படியே சொல்லியிருந்தாலே அது நன்றாக இருந்திருக்கும் இருந்திருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு கடத்தல், ஆர்கன் டிராஃபிக், சௌபின் சாஹிர் பொண்டாட்டி கதை, ரஜினி மகள் என எதுஎதுவோ போய்க்கொண்டே இருக்கிறது எதிலும் முழுத் தெளிவும் இல்லை.
உதாரணத்திற்கு ஒரே நேரத்தில் நடக்கும் மேன்சன் ரஜினி சண்டையும், டிரெய்ன் ஸ்ருதிஹாசன் துரத்தலும்.. எதை போகஸ் செய்வது என தடுமாறுகிறது திரைக்கதை.
லோகேஷுக்கு பிளாஷ்பேக் மட்டும் பிரச்சனை இல்லை, அவருக்கு இரண்டாம் பாதியை எப்படி எடுத்துப் போய் முடிப்பது என்பதில் பெரிய பிரச்சனை இருக்கிறது. கைதியில் ஆரம்பித்து இப்போது கூலி படம் வரை எல்லாப்படத்திலும் அந்தப் பிரச்சனை இருக்கிறது. இதில் மொத்த திரைக்கதையிலுமே கோட்டை விட்டிருக்கிறார்.
ஜெயிலர் படம் பார்த்து நிறைய இன்ஸ்பயர் ஆகி அதே போல, தன் பாணியில் எழுத முயற்சித்திருக்கிறார். ஒரு வேளை சன் பிக்சர்ஸே கேட்டிருக்கலாம். ஆனால் அவர் பாணியில் ரஜினிக்கான காட்சிகள் சேர்க்கிறேன் என படம் இரண்டும் கெட்டானாக ஆகிவிட்டது.
ஸ்பாய்லர் ….
லாஜிக்கலாக பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார்கள், கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இரண்டும் இரண்டும் நாலு என மனக்கணக்கில் கூட்டும் போதே விடை வருமாறு திரைக்கதை இருந்தால் தான் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் நிற்கும், இதில் அது மிஸ்ஸிங்.
சத்யராஜ் யாரு சயின்டிஸ்ட்டா? கூலியா ?
சத்யராஜ் ஏன் அத்தனை பிரச்சனையிலும் ரஜினியை கூப்பிடவில்லை ?
ரஜினி பெற்ற மகளையே விட்டு அப்படி ஒதுங்கி இருக்க காரணம் என்ன ?
அவருக்கு வயசு வச்சு கூட மகள் யாருனு கண்டுபிடிக்க தெரியாதா?
அப்படி பிளாஷ்பேக்கில் என்ன தான் நடந்தது?
இப்படி எதுவுமே முழு லாஜிக் இல்லாம இருக்கு.
ரஜினி பிளாஷ்பேக் பிளாஷ்பேக்னு சொல்லி அதுல அப்படி ஒன்னுமே இல்ல..
அப்புறம் எதையுமே முழுசா சொல்லாதது.. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
உபேந்திரா எதுக்கு ? அவர் டிரெய்னல இன்ட்ரோ ஆகியிருந்தா கூட நல்லாருந்திருக்கும்.. ஆனா மேன்சன்ல ரஜினி அவருக்கு இண்ட்ரோ குடுத்துட்டு இருக்காரு.. அங்க ரஜினி இருக்கும் போது இன்னொருத்தர் எதுக்கு?
போஸ்ட் கிளைமாக்ஸ்ல எதுக்கு அமீர்கான் போர்ஷன்.. விக்ரம்ல அது ஒர்க்கவுட் ஆக காரணம் அதோட LCU பின்னணி.. பின்னாடி அவங்க மோதிக்கப் போறங்கங்கற எதிர்பார்ப்பு… இதுல அப்படி எதுவுமே இல்லாம திடீர்னு அமீர்கான் வர்றதெல்லாம் செட்டே ஆகல..
ரொம்ப ரொம்ப முக்கியம் லோகேஷ் கதையை விட காட்சிகள கொஞ்சம் நிதானமா அழகா படம் பண்ணுவாரு… ஆனா இதுல அப்படி சொல்லிக்கிற மாதிரி ஒரு காட்சி கூட நிதானமா இருந்ததா தெரியல.. அது பெரிய மைனஸ். இதெல்லாம் எதிர்பார்த்து போற ரசிகர்களுக்குத் தான். இந்தப்படம் ஏமாற்றம்.
பிரச்சனை ஒன்னு தொட்டு ஒன்னுனு ஒடுற திரைக்கதை இருக்கிறதால… இப்ப வர்ற தொடர் நெகடிவ் விமர்சனங்கள் தாண்டி, இன்னும் 4,5 நாள் கழிச்சு படம் பார்க்கிறவங்க…
இதுக்கு என்ன குறை நல்லாத்தானே இருக்குனு சொல்லுவாங்க.. ஏன்னா அதுக்கான எல்லாத்தகுதியோட.. கமர்ஷியல் படமா நல்லாவே இருக்கு..
ஆனா ரஜினி & லோகேஷ் படமா இல்ல..