கூலி   Biggest Disappointment எல்லாம் இல்லை !!

கூலி Biggest Disappointment எல்லாம் இல்லை !!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம். இந்தப்படம் மீது நிறைய நெகடிவ் விமர்சனம் வருமென்பது முன்பே தெரியும். படம் வருவதற்கு முன்பே அதை எழுதியிருந்தேன். அது ஒரு உளவியல். மார்க்கெட்டிங் எல்லாம் இல்லாமலே, தானாகவே படத்தின் மீது, மிகப்பெரிய ஹைப் கிரியேட் ஆனது. அதற்கு காரணம், ரஜினி லோகேஷ் கூட்டணி. இப்படி ஓவர் ஹைப் ஆகும் படங்களுக்கு இருக்கும் பிரச்சனை தான் இது. இது ரஜினியின் சராசரியான கமர்ஷியல் படத்தை விட நன்றாகவே இருக்கிறது, ஆனால் மக்கள் ஏமாந்தது இந்தக் கூட்டணியிடம் அதீதமாக எதிர்பார்த்தது தான். சயின்ஸ் பிக்சன், LCU, கேமியோ, என அவர்கள் ஏதோதோ எதிர்பார்க்க…, எதுவுமில்லாமல் சப்புனு சராசரியாக இருக்கும் படம், அதன் திருப்பங்களோடு இருந்தாலும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்காக இது மோசமான படம் இல்லை. ஆனால் சூப்பர் படமும் இல்லை. இது தான் நிஜம். படத்தில் எக்கச்சக்க பிரச்சனை இருக்கிறது. அதைத்தாண்டி நல்ல விசயங்களும்…
Read More
ரஜினி சார் படத்தில் இருக்கிறேனா? – அர்ஜூன் தாஸ்!!

ரஜினி சார் படத்தில் இருக்கிறேனா? – அர்ஜூன் தாஸ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வினில் நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது…. என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து,  எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான்  அதற்காக உங்கள் அனைவருக்கும் என்…
Read More
ஃபைட் கிளப் அசத்தியதா?

ஃபைட் கிளப் அசத்தியதா?

  இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது “ஃபைட் கிளப்”. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்க, உறியடி விஜய் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் இயக்கியிருக்கிறார்.   வடசென்னை, லேபில் வெப்சீரிஸை தொடர்ந்து இந்த ஃபைட் கிளப் படமும் வடசென்னை பகுதியை மையமாக வைத்து அங்கு நடக்கும் வன்முறைகளிலிருந்து வெளிவர ஆசைப்படும் இளைஞர்களைப் பற்றிப்பேசுகிறது. கொலை, கஞ்சா என வன்முறைகளமாக இருக்கும் நிலத்திலிருந்து இளைஞர்களை முன்னேற்ற நினைப்பவரை கூட இருந்த கூட்டமே அரசியல் லாபத்திற்காக கொலை செய்துவிடுகிறது. அதில் ஒருவன் சிறைக்குச் செல்ல இன்னொருவன் அரசியலில் பெரிய ஆள் ஆகி விடுகிறான். நாயகன் அவனது தோழர்களும் வாலிபால் வீரர்களாக ஆசைப்படுகிறார்கள், அரசியல் கும்பல் அதைத்தடுக்கிறது. அரசியல் லாபத்திற்காக நடக்கும் விளையாட்டில் நாயகனின் கும்பல் மாட்டிக்கொள்கிறது அதிலிருந்து மீண்டார்களா என்பதே கதை. லோகேஷ்…
Read More
நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விசயம் – லோகேஷ் கனகராஜ்

நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விசயம் – லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக, இணையதள, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நாயகன் விஜய் குமார் பேசியதாவது.. இந்த டைட்டில் ஒரு ஆங்கில பட டைட்டில் மிகப்புகழ் பெற்ற டைட்டில் கல்ட்கிளாசிக், அந்தக்கதை வேறு இந்தக்கதை வேறு ஆனாலும் அதை நம் படத்திற்கு வைக்கலாமா என யோசித்தோம். நாம் ஆத்மார்த்தமாகக் காதலுடன் உருவாக்கியுள்ள படம் அந்தப்படத்திற்குத் தரும் மரியாதையாக இருக்கும் என்பதால் வைத்தோம். நாம் நினைத்த மாதிரி படத்தை உருவாக்க வேண்டும் எனும்போது, அதில் நிறையப் பிரச்சனைகள் வரும் அதற்கான உழைப்பை, நம் அர்ப்பணிப்பைத் தந்து தான் ஆக வேண்டும். லோகேஷ் என்…
Read More