மணிரத்னத்தின் ‘பம்பாய்’ ரிலீசான நாளின்று!

சில சினிமாக்க காலத்தால் அழியாதவை. அவை வெளிவந்த காலகட்டத்தில் மட்டுமின்றி எப்போது பார்த்தாலும் புதுத்தன்மையும் மெருகும் குறையாமல் அப்படியே ஒவ்வொரு சூழலிலும் புது செய்தி சொல்லியபடி இருக்கும். அழகியல்ரீதியான படமாக இருந்தாலும் சரி, அரசியல் படங்களானாலும் சரி, ஒரு கதையைத் திரைக்குள் செலுத்தி நிரந்தரத்தன்மை அடையச் செய்வது என்பது அசாதாரண விஷயம் என்பதை சினிமா தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அம்புட்டு பேரும் ஒப்புக் கொள்வாய்ங்க. டைரகடர் மணிரத்னத்தின் பல படங்கள் இந்தச் சட்டகத்தினுள் அடங்கும். இதே மார்ச் 11, 1995-ஆம் வருஷம் ரிலீஸான ‘பம்பாய்’ முப்பது ஆண்டுகள் கழிச்சும், இன்று பார்த்தாலும் அரசியல்ரீதியாக மட்டுமின்றி படைப்பு சார்ந்தும் அது சொல்லும் மெசெஜில் தனித்தன்மையுடன் திகழ்கிறது என்பது நெசந்தானே?

மனிதர்களைச் சுமந்து செல்லும் படகுகள்…தலைக்கு மேல் கடகடவென சப்தமெழுப்பிச் செல்லும் ரயில்வண்டி…குளிரக் குளிர சில்லென்று கடல் நீரின் வேகத்தில் வீசும் காற்று… முகத்தில் மோதும் நெல்லை மண்ணின் மாங்குடி, சேகர், ஷைலா பானு ஆகிய இருவருக்கும் சொந்த ஊர். அவன் பிறப்பால் இந்து…அவள் பிறப்பால் முஸ்லிம். ‘கண்ணாளனே’ என்று கண்களால் கட்டிப் போடுபவளின் காதல் வலையில் விழுந்துவிடுகிறான் சேகர். இரண்டு வெவ்வேறு வழித்தடங்களில் பாயும் நதிகள், ஒன்றிணைந்து எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு கடற்கரையின் ஓரத்திலிருந்து, தஞ்சமடையும் மற்றொரு கடற்கரைதான் ‘பம்பாய்’, இன்றைய மும்பை.

படம் வந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டதைக் கூட நம்ப முடியாத அளவிற்கு இன்னிக்கும் பலரின் கண்களுக்குள்ளும், காதுகளுக்குள்ளும் ஒ(ளி)லித்துக்கொண்டிருக்கிறது அதன் இசையும், காட்சிகளும். காரணம்…முதலில் மணிரத்னம், இரண்டாவது ஏ.ஆர்.ரஹ்மான்… மூன்றாவது ராஜீவ் மேனன். மணிரத்னத்தின் அக்மார்க் அழகியல்கள் அத்தனையும் இந்தப்படத்திலும் உண்டு. அதிலும் ’கண்ணாளனே’வும், ’உயிரே’வும் குயிலின் மெல்லிசையாய் மனம் வருட, திங்குதிங்கென்று ஆடவைக்கும் வெஸ்டர்ன் ஃபோக் வடிவங்கள் ’அந்த அரபிக்கடலோரம்’, ’குச்சி குச்சி ராக்கம்மா’ பாடல்களை அப்போதும் இப்போதும் எப்போதும் விரும்பாதோர் யார்?

ஸ்மார்ட்டான லவ் படமாகத் தொடங்கிய பம்பாய் ஒரு புள்ளியில் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விடும். அரவிந்த்சாமி தன் ஆசை துணைவி சேகர் சாய்ராவுடன் வசிக்கும் பகுதியில் திடீரென வெடிக்கும் மதக்கலவரத்தால் பெரும் குழப்பம் ஏற்பட, அந்த அமளியில் இரட்டைக் குழந்தைகள் காணாமல் போயிடுவாய்ங்க. குழந்தைகளைத் தேடிச் செல்லும் நாயகன் வழிநெடுகிலும் பல கொடூரக் காட்சிகளைக் காண நேரிடும். ஒரு ஜர்னலிஸ்டாக, ஒரு அப்பாவாக ஒரு மனிதனாக அவன் தோற்று நிற்கும் இடம் அது என உணர்ந்து ரசிகனையும் உணர வைப்பான்.

சகல திசைகளிலும் கொழுந்துவிட்டு எரியும் வன்முறை நெருப்பை அணைக்க ஒருவழியும் தெரியாது திகைப்பான். இந்த தேசத்தில் இனத்தாலும், மதத்தாலும் நடக்கும் படுகொலைகளை முதன்முதலில் திரையில் பார்த்த ரசிகர்களின் மனசாட்சியையும் அக்காட்சிகள் இன்று ரசிகன் கண்களை விட்டு அகலவில்லை.சினிமா எனும் ஊடகத்தின் ஆகச் சிறந்த பயன் இதுவே. காலத்தைப் பதிவு செய்வது. காட்சிகளை மீள் உருவாக்குவது. திரையில் நாம் பார்த்தவை மிக மிகச் சொற்பமே. ஆனால் உண்மையில் ஆயிரம் சூரியனை விட கண்களை கூசச் செய்வது. க்ளைமேக்ஸில் அக்குடும்பம் ஒன்று சேர்ந்து சுபம் என்று முடிவடைந்தாலும், அப்படம் முன்வைத்த பல கேள்விகளுக்கு இன்றளவும் விடை கிடைக்காமல் மேலும் மேலும் வன்முறை தொடர்கதையாகி வருவது காலக் கொடுமையன்றி வேறென்ன. (கட்டிங் கண்ணையா)

அதனால்தான் கலைஞர்கள் ஜிப்ஸியாக மாறி மீண்டும் மீண்டும் காலத்தின் தேவைக்கேற்ப உருவாகிக் கொண்டிருக்கிறாய்ங்க. தீவிரமான கலை இலக்கிய செயல்பாடுகளினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மெதுவாக இருந்தாலும், அவை தம் நோக்கத்தில் வெற்றி பெற்றால் போதும் என்பதே அப்படைப்பாளிகளின் பெரும் விருப்பம்.

இந்த பம்பாய் படம் ரிலீஸான காலகட்டத்தில் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டுச்சு. முக்கியமா நாட்டில் பற்றியெரியும் பிரச்னையை மணிரத்னம் கமர்ஷியலாக்கி படம் பண்ணுறார் அப்படீங்கற குற்றச்சாட்டு ஒரு புறமும், முஸ்லீம்களின் அடிப்படைவாதத்தை கொஸ்டின் போட்டு அவிய்ங்க உணர்வுகளைக் காயப்படுத்திப்புட்ட்டார் -னு மற்றொரு புறமும் தாக்கினாங்க ஒரு படைப்பை காலத்தின் பதிவாகப் பார்க்காமல், அதை ஆழமாகச் சொல்லலை, அங்கிருந்து ஆரம்பிக்கலை -ந்னு சொன்னவிய்ங்க அதே காலத்தின் பக்கத்தில் காணாமலாகியிருக்க, இன்னிக்கும் பாம்பே படம் மும்பைக் கலவரத்தின் திரைப் பதிவாக இன்றும் நமக்குக் காணக் கிடைக்குது.

இதன் விளைவாக குண்டுவெடிப்பைப் பற்றி படம் எடுத்தவரின் வீட்டு வாசலில் எறியப் பட்டது ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு . மணிரத்னத்தின் மீது வீசி எறியப்பட்ட குண்டு திசை தப்பி ஆஸ்பெட்டாஸ் கூரையில் விழுந்துபுடுச்சு. அதில் அவருக்கும் வீட்டுப் பணிப் பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டுச்சு. காலில் சற்று பலமாக அடிபட்டிருக்க, அதிர்ஷ்டவசமாக அன்று அவர் உயிர் தப்பினார்.அதன் பிறகு, பல வருஷங்கள் மத்திய அரசால் அவருக்கு இஸட் பிரிவு சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுச்சுது. அதே சமயம் இந்த வழக்கு கோர்ட்டில் சில ஆண்டுகள் நடந்து கொண்டிருந்த போது, சாட்சி சொல்ல மணிரத்னம் சென்றார். அவர் மீது குண்டு வீசியவனின் முகம் மறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அந்தக் கண்களில் இருந்த வெறுப்பையும் தீவிரத்தையும் அவரால் மறந்திருக்க முடியுமா? மறக்க அல்ல, மன்னிக்க முடியும் என்று தனது சாட்சியத்தால் உறுதிப்படுத்தினார் மணிரத்னம். அந்த தூரத்திலிருந்து பார்க்கையில் மங்கலாகத் தான் தெரிந்துச்சு, இவிய்ங்க அவிய்ங்கதானா அப்படீன்னு உறுதியாக கூறமுடியலை -அப்படீன்னு கோர்ட்டில் சாட்சி சொல்லிபுட்டார் மணிரத்னம்.

அவர் மீது குண்டு வீசியவர்கள் அந்த அவிய்ங்கதான் எனில் அவிய்ங்க மனசாட்சிக்குத் தெரிஞ்ச்சிருக்கும். மன்னிப்பவன் எந்த மதத்தை சேர்ந்தவன் -னு இனி ஒருபோதும் அவிய்ங்க யோசிக்க மாட்டாய்ங்க. அல்லது அவிய்ங்க நிரபராதிகளா இருந்தபட்சத்தில், இக்குற்ற பத்திரிகையிலிருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் திளைத்திருப்பாய்ங்க.

அது எதுவாயினும், முடிஞ்ச இன்சிடென்டைக் கூறு போடுறதை ஒரு படைப்பாளி விரும்ப மாட்டான். தன் படைப்பிலிருந்து வெளியேறி அதன் சரி தவறுகளிலிருந்து பாடம் மட்டுமே எடுத்துக் கொண்டு, தன் அடுத்தப் படைப்புக்குள் நுழைஞ்சு புடுபவனே அசலான கலைஞன். அவ்வகையில் இன்றும் கூட யாரும் எடுக்கத் துணியாத படங்களை துணிச்சலுடன் சிறிதளவும் நோக்கம் சிதையாமல் இயக்கிக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்றவர் களால்தான் இந்தியத் திரையுலகம் தலைநிமிர்ந்து நடக்கிறது என்றால் மிகையில்லை. ஆனால் அப்பேர்ப்பட்டவர் ஏனோ சில்வண்டுகளின் படைப்புகளுக்கு பாசுரம் வாசிக்கிறார் என்றுதான் தெரியலை.

ஆனாலும் 30 வருஷங்களுக்கு முன்னாடி வந்தப் படம், தற்போதைய அரசியல் சூழலுக்கும் பொருந்திப்போகிறது என்பதை நினைத்து மணிரத்னம் நிச்சயம் பெருமைப்படமாட்டார். இன்புட்டு ஆண்டுகள் கியும், இன்னும் அந்த வெறி அடங்கவில்லை என வருத்தம்தான் கொள்வார். ஏன்னா- `நான் இந்துவும் இல்லை, நான் முஸ்லிமும் இல்லை. நான் இந்தியன்’ அப்படீங்கற கருத்தை முன்வைச்சு வந்த படமாச்சே அது!