விஜய்யிடம் தோற்ற ரஜினிகாந்த் !

விஜய்யிடம் தோற்ற ரஜினிகாந்த் !

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் வெகு மந்தமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 50 வருடங்களை கடந்து சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வருபவர் ரஜினிகாந்த், அவருடைய திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகள் கொண்டாட்டமாக இருக்கும், ஆனால் சமீப காலமாக அவரது நட்டத்திர அந்தஸ்து குறைந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது ஆனால் அதைத்தொடர்ந்து வெளியான லால் சலாம், மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இப்படம் இது வரையிலும் ஓடிடி தளத்தில் கூட வரவில்லை, ரஜினியின் சினிமா வரலாற்றில் மிக மோசமான திரைப்படமாக இப்படம் அமைந்துவிட்டது. தற்போது, மீண்டும் அமிதாப் பச்சன், பகத்பாசில், மஞ்சு வாரியர், ராணா என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியுள்ளது வேட்டையன். இப்படத்தின் டிரெய்லர் பரவலாக பாரட்டப்பட்ட நிலையில் படத்தின் புக்கிங் நேற்று முன் தினக்…
Read More
விஜயின் ‘கோட்’ படத்தில் ஏ ஐ மூலம் மறைந்த பாடகி பவதரணியின் குரல்!

விஜயின் ‘கோட்’ படத்தில் ஏ ஐ மூலம் மறைந்த பாடகி பவதரணியின் குரல்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் இடம்பெறும் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான‌ டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி 'திமிரி எழுடா' என்ற உத்வேக‌மூட்டும் பாடலை கிருஷ்ண சேத்தன் உடன் இணைந்து ரஹ்மான் உருவாக்கி இருந்தார். இந்த பாடலைக் கேட்ட…
Read More