காயத்ரி, பாலா சரவணன், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ், வாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியுள்ள படத்தை, வெயிலான் என்டர்டெயின்மென்ட் வெரஸ் ப்ரோடுக்ஷன் தயாரித்துள்ளது. ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தம்ழில் பொதுவாக ஹாரர் ஜானரை காமெடி ஜானர் ஆக்கி விட்டார்கள். திகில் படங்கள் தரும் உணர்வு அலாதியானது. உலகம் முழுக்க திகில் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நல்ல ஹாரர் அனுபவம் தரும் படமாக வந்துள்ளது இந்த பேச்சி.
காயத்ரி மற்றும் தேவ் ராம்நாத் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு சாகச சுற்றுலா செல்கின்றனர். பின் அவர்களுக்கு உதவுவதற்காக லோக்கல் பாரஸ்ட் கைட் பாலா சரவணன் அவர்களுடன் காட்டுப் பகுதிக்கு செல்கிறார். போன இடத்தில் நண்பர்கள் குழு தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். பாலா சரவணன் எவ்வளவோ எச்சரிக்கை கொடுத்தும் அதை மீறி அவர்கள் உள்ளே செல்கின்றனர்.
அதற்குப் பிறகு நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அதனால் அவர்களுக்கு நிறைய சிக்கல்கள் வருகிறது. அதை சமாளிப்பதற்கு அவர்கள் நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். மேலும் காட்டில் காத்திருக்கும் பேச்சுக்கு இவர்கள் விருந்தாக வழி செய்கிறது. யார் அந்தப் பேச்சு? எதற்காக அவள் காத்திருக்கிறாள்? அவளிடம் சிக்கினால் என்ன ஆகும்? பேச்சியிடமிருந்து அனைவரும் தப்பிப்பார்களா? என்பதுதான் மீதி கதை.
கதை மிக எளிமையான கதை, கொஞ்சம் தவறினாலும் ரசிகனுக்கு சுவாரஸ்யம் தொலைந்து விடும். ஆனால் அதை இழுத்துப் பிடித்து இறுதிவரை பயமுறுத்து இருக்கிறார்கள் படக்குழுவினர்.
பொதுவாக ஹாரர் படங்கள் ஒரு தனி வீட்டில் தான் நடக்கும், ஆனால் இது ஒரு மிகப்பெரிய காட்டில், பட்டப் பகலில் நடப்பதாக அமைக்கப்பட்டிருகிறது. அந்த தைரியத்திற்காகவே படக்குழுவினரை பாராட்டலாம்.
ஒரு சின்ன பிரச்சனை, அதைத் தொடர்ந்து நடத்தும் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள், என திரைக்கதையை வெகு சுவாரசியமாக எழுதி இருக்கிறார்கள். இடைவேளை வரும் இடத்தில் நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகிறோம், இதன் பிறகு என்ன என நினைக்கும் போது, அடுத்தடுத்த அதே சுவாரசியத்தை கொடுத்து, இறுதிவரை நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
இம்மாதிரி படங்களில் நடிகர்களின் நடிப்பு மிக முக்கியம். படத்தில் நடித்த காயத்ரி, சரவணன் என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். சரவணன் கிட்டதட்ட ஹீரோவாகியிருக்கிறார். காயத்ரி இறுதியில் ஈர்க்கிறார்.
இசையமைப்பாளர் பிரேமம் படத்திற்கு காதலாய் உருகியவர் இந்தப் படத்தில் பயமுறுத்துவதில் பட்டம் வாங்கி இருக்கிறார். ஒரு காட்டுக்குள் நாம் இருக்கும் உணர்வை, ஒளிப்பதிவு கொண்டிருந்தார் ஒளிப்பதிவாளர். டெக்னிக்கலாகவே படம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது, ஒரு புது படக்குழு இத்தனை சிறப்பாக படத்தை தந்திருப்பதற்கு பாராட்டலாம்.
படத்தில் படத்தில் அங்கங்கே சில லாஜிக் மீறல்களும், சிலக் குறைகளும் இருக்கிறது ஆனால் அதைத் தாண்டி ஒரு முழுமையான ஹாரர் அனுபவத்தை தருகிறது இந்த பேச்சி.