ஹாரர் விரும்பிகளுக்கான படம் பேச்சி !!

ஹாரர் விரும்பிகளுக்கான படம் பேச்சி !!

காயத்ரி, பாலா சரவணன், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ், வாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியுள்ள படத்தை, வெயிலான் என்டர்டெயின்மென்ட் வெரஸ் ப்ரோடுக்ஷன் தயாரித்துள்ளது. ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தம்ழில் பொதுவாக ஹாரர் ஜானரை காமெடி ஜானர் ஆக்கி விட்டார்கள். திகில் படங்கள் தரும் உணர்வு அலாதியானது. உலகம் முழுக்க திகில் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நல்ல ஹாரர் அனுபவம் தரும் படமாக வந்துள்ளது இந்த பேச்சி. காயத்ரி மற்றும் தேவ் ராம்நாத் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு சாகச சுற்றுலா செல்கின்றனர். பின் அவர்களுக்கு உதவுவதற்காக லோக்கல் பாரஸ்ட் கைட் பாலா சரவணன் அவர்களுடன் காட்டுப் பகுதிக்கு செல்கிறார். போன இடத்தில் நண்பர்கள் குழு தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். பாலா சரவணன் எவ்வளவோ எச்சரிக்கை கொடுத்தும் அதை…
Read More