பேச்சி இரண்டாம் பாகம்? – தயாரிப்பாளர் கோகுல் பினாய் உறுதி!

பேச்சி இரண்டாம் பாகம்? – தயாரிப்பாளர் கோகுல் பினாய் உறுதி!

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இயக்குநர் B.ராமச்சந்திரன் பேசுகையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை சந்தித்தோம், இப்போது மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி. பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காக தான் என்றாலும், என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான தருணம். படம் போட்ட பிறகு நான் பதற்றத்துடன் நின்றுக்…
Read More
ஹாரர் விரும்பிகளுக்கான படம் பேச்சி !!

ஹாரர் விரும்பிகளுக்கான படம் பேச்சி !!

காயத்ரி, பாலா சரவணன், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ், வாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியுள்ள படத்தை, வெயிலான் என்டர்டெயின்மென்ட் வெரஸ் ப்ரோடுக்ஷன் தயாரித்துள்ளது. ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தம்ழில் பொதுவாக ஹாரர் ஜானரை காமெடி ஜானர் ஆக்கி விட்டார்கள். திகில் படங்கள் தரும் உணர்வு அலாதியானது. உலகம் முழுக்க திகில் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நல்ல ஹாரர் அனுபவம் தரும் படமாக வந்துள்ளது இந்த பேச்சி. காயத்ரி மற்றும் தேவ் ராம்நாத் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு சாகச சுற்றுலா செல்கின்றனர். பின் அவர்களுக்கு உதவுவதற்காக லோக்கல் பாரஸ்ட் கைட் பாலா சரவணன் அவர்களுடன் காட்டுப் பகுதிக்கு செல்கிறார். போன இடத்தில் நண்பர்கள் குழு தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். பாலா சரவணன் எவ்வளவோ எச்சரிக்கை கொடுத்தும் அதை…
Read More